உமா ஓயா: ஆச்சரியங்கள் நிறைந்த ஈரானின் அபிவிருத்தித் திட்டம்

இரு நாடுகளுக்கும் இடையில் ஞி5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0 334

இலங்­கைக்­கான ஒருநாள் உத்­தி­யோக பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்ட ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைசி நேற்று காலை மத்­தளை விமா­ன­நி­லை­யத்தை வந்­த­டைந்தார். பிர­தமர் தினேஷ் குண­வர்­தன, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி, அமைச்சர் மஹிந்த அம­ர­வீர உள்­ளிட்ட பலரும் அவரை வர­வேற்­றனர்.

உமா ஓயா பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்­டத்தை மக்கள் பாவ­னைக்­கான கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே அவர் இலங்­கைக்கு வருகை தந்தார்.

2008 ஏப்ரல் மாதத்தில் அப்­போ­தைய ஈரான் ஜனா­தி­பதி மொஹமட் அஹ­மதி நிஜாட்டின் இலங்கை விஜ­யத்­திற்கு பின்னர், ஈரான் ஜனா­தி­ப­தி­யொ­ருவர் இலங்­கைக்கு விஜயம் செய்­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

ஈரா­னுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான 05 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களும் இதன்­போது கைசாத்­தி­டப்­பட்­டது.

மகா­வலி திட்­டத்தின் பின்னர், நாட்டின் மிகப்­பெ­ரிய நீர்ப்­பா­சனத் திட்­ட­மாக வர­லாற்றில் இணையும் உமா ஓயா பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனா­தி­ப­தி­களின் தலை­மையில் நேற்று திறந்து வைக்­கப்­பட்­டது.

உமா ஓயா பல்­நோக்கு அபி­வி­ருத்தி திட்டம் (UOMDP) என்­பது இலங்­கையின் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த திட்­ட­மாகும். தென்­கி­ழக்கு பகு­தியின் உலர் வல­யத்தில் நிலவும் நீர்ப் பற்­றாக்­கு­றையை தணிப்­ப­தற்­காக, சுற்றுச் சூழ­லுக்கும், நீர் மூலங்­க­ளுக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில், உமா ஓயாவில் வரு­டாந்தம் சேரும் 145 (MCM) கன­மீற்றர் நீருக்கு மேல­தி­க­மான நீரை கிரிந்தி ஓய­விற்கு திருப்­பி­வி­டு­வதே இத்­திட்­டத்தின் பிர­தான நோக்­க­மாகும்.

இதன் மூலம் மொன­ரா­கலை மாவட்­டத்தில் 4500 ஹெக்­டயர் புதிய விவ­சாய நிலங்­க­ளுக்கும் தற்­போ­துள்ள 1500 ஹெக்­டயர் விவ­சாய நிலங்­க­ளுக்கும் நீர்ப்பாசன வசதி கிடைக்கும். அத்­தோடு பதுளை, மொன­ரா­கலை, ஹம்­பாந்­தோட்டை பிர­தே­சங்­களின் குடிநீர் மற்றும் தொழிற்­சாலை நீர் தேவை­க­ளுக்கு 39 மில்­லியன் கன மீற்றர் (MCM)நீரையும் வழங்க முடியும். இதனால் வரு­டாந்தம் 290 ஜிகாவாட் (290 GWh) மின்­சா­ரத்தை தேசிய மின்­சாரக் கட்­ட­மைப்­பிற்கு வழங்க முடியும்.

இத்­திட்­டத்தில், புஹுல்­பொல மற்றும் டய­ரபா உள்­ளிட்ட இரு நீர்த்­தேக்­கங்­களை இணைக்கும் 3.98 கி.மீ நீள­மான நீர்ச் சுரங்கம் (இணைப்பு சுரங்­கப்­பாதை), 15.2 கி.மீ நீள­மான நீரோட்ட சுரங்­கப்­பாதை, நிலக்கீழ் மின் நிலையம், சுவிட்ச் யார்ட், பயணப் பாதை மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய ஏனைய கட்­டு­மா­னங்­களும் உள்­ள­டங்­கி­யுள்­ளன.

இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் அப்­போ­தைய கனிய வள அபி­வி­ருத்தி அமைச்சு மற்றும் ஈரான் குடி­ய­ரசின் வலு­சக்தி அமைச்­சுக்­கி­டையில் 2007 நவம்பர் 27 ஆம் திகதி கைசாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்திற்கு அமை­வாக உமா ஓயா பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்­டத்தை செயற்­ப­டுத்த ஈரானின் (FARAB) வலு­சக்தி மற்றும் நீர்த்­திட்ட நிறு­வனம் (FC),இலங்கை அர­சாங்கம் சார்பில் அப்­போ­தைய நீர்ப்­பா­சன மற்றும் நீர் முகா­மைத்­துவ அமைச்­சுக்கும் இடையில் 2008 ஏப்ரல் 28 ஆம் திகதி பொறி­யியல், கொள்­முதல், கட்­டு­மான பணி­களை முன்­னெ­டுக்க அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

அதன்­படி, பராப் நிறு­வனம் விரி­வான சாத்­தி­யக்­கூறு ஆய்­வுகள், பொறி­யியல் திட்­ட­மிடல் பொருட்கள், உப­க­ர­ணங்கள், இயந்­தி­ரங்கள் மற்றும் பௌதீக கட்­டு­மா­னத்­துக்­கான கொள்­முதல் செயற்­பா­டுகள், அமைப்பு, பரீட்­சித்தல், திட்­டத்தை ஆரம்­பித்தல் போன்ற செயற்­பா­டு­கனை முன்­னெ­டுத்­தி­ருந்து. 514 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பெறு­ம­தி­யான இந்த ஒப்­பந்தம் 2010 மார்ச் 15 ஆம் திகதி முதல் நடை­மு­றைக்கு வந்­தது.

ஈரானின் ஏற்­று­மதி மேம்­பாட்டு வங்கி (EDBI) 2013 வரை 50 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வழங்­கி­யி­ருந்­தது. இருப்­பினும், அந்த நேரத்தில் ஈரா­னுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்ட சர்­வ­தேச தடைகள் கார­ண­மாக அவர்­களால் இத்­திட்­டத்­திற்கு தொடர்ந்தும் நிதி­ய­ளிக்க முடி­யாமல் போனது. எனவே, அர­சாங்க நிதியைப் பயன்­ப­டுத்தி, ஒப்­பந்­தக்­கா­ர­ரான பராப் நிறு­வ­னத்­துடன், திட்­டத்தைத் தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச் செல்ல இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இத்­திட்டம் 2010 மார்ச் 15 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், 2015 மார்ச் 15 ஆம் திகதி நிறைவு செய்­யப்­பட வேண்­டு­மென தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் ஹெட்ரேஸ் (Headrace tunnel) சுரங்­கப்­பா­தையில் எதிர்­பா­ராத வித­மாக தண்ணீர் நுழைந்­த­மையால் ஏற்­பட்ட தொழில்­நுட்ப சிக்­கல்கள் மற்றும் சமூக பாதிப்­புகள், நிதி சவால்கள் உல­க­ளா­விய நெருக்­க­டிகள் மற்றும் கட்­டு­மான காலத்தில் ஏற்­பட்ட கொவிட் – 19 தொற்று நோய் பரவல் கார­ண­மாக, திட்­டத்தின் நிறைவு திகதி 2024 மார்ச் 31 வரை நீட்­டிக்­கப்­பட்­டது. அதேபோல் குறை­பா­டுகள் மற்றும் உத்­த­ர­வாதக் காலமும் 2025 மார்ச் 31 வரை நீ­டிக்­கப்­பட்­டுள்­ளது.

2024 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மற்றும் மார்ச் மாதங்­களில் இத்­திட்­ட­மா­னது அதன் ஆரம்ப அமு­லாக்கக் கட்­டத்தை நிறைவு செய்­தி­ருந்­த­துடன், திட்­டத்தின் முதலாம் இரண்டாம் அல­குகள் தேசிய மின் கட்­ட­மைப்­புடன் வெற்­றி­க­ர­மாக இணைக்­கப்­பட்­டுள்­ளன. இத்­திட்­டத்தின் சோதனைச் செயல்­பா­டுகள் 2024 ஏப்ரல் 1 ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது.

பண்­டா­ர­வளை மற்றும் வெல்­ல­வா­ய­விற்கு இடையில் தரை மட்ட உயரம் 700 மீற்றர் வித்­தி­யா­சத்தை கொண்­டுள்­ளது. இவ்­வா­றான உய­ரத்தில் சுரங்­கப்­பா­தையின் திசையை மாற்­று­வது எளி­தல்ல. மேலும், விசை­யாழி (Turbine) ஊடாக நீர் ஊற்ற ஆழ­மான அழுத்த தண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இது­போன்ற வடி­வ­மைப்பை உலகில் வேறு எங்கும் பார்க்க முடி­யா­ததால், இதன் நிர்­மா­ணப்­ப­ணிகள் நிறை­வ­டையும் போது, இது ஒரு அற்­பு­த­மான வடி­வ­மைப்­பாக இருக்கும்.

பராப் நிறு­வ­னத்­திடம் இருந்து இந்த திட்­டத்தை பெற்ற பின்னர், நீர்ப்­பா­சன அமைச்­சினால் இந்த திட்­டத்தின் செயற்­பாட்­டா­ள­ராக உள்ள இலங்கை மின்­சார சபை மற்றும் இலங்கை மகா­வலி அதி­கா­ர­ச­பை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­படும்.

மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்த பின்னர், அந்த நீர் சுரங்­கப்­பாதை மூலம் கிரிந்தி ஓயாவின் குறுக்கே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள அலி­கோட்ட ஆர நீர்த்­தேக்­கத்­திற்கு நீர் திருப்பி விடப்­ப­டு­கி­றது.

அதன் பின்னர், அந்த நீர் உமா ஓயா நீர்த்­தேக்­கத்தின் இடது கரையில் அமைந்­துள்ள இத்­திட்­டத்தின் கீழ் நீர் கொள்­ள­ளவு மூன்று மடங்­காக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஹந்­த­பா­னா­கல நீர்த்­தேக்­கத்­திற்கும் இத்­திட்­டத்தின் கீழ் மொன­ரா­கலை மாவட்­டத்தின் வெல்­ல­வாய, மஹா­ர­கம, தன­மல்­வில, பல­ஹ­ருத போன்ற பிர­தே­சங்­க­ளுக்கும் நீர் வழங்­கு­வ­தற்­காக, உமா ஓயாவின் தென் கரையில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற புதிய குடா ஓயா நீர்த்­தேக்­கத்­திற்கும் திருப்பி விடப்­ப­ட­வுள்­ளது.

60 மீட்­ட­ருக்கும் அதி­க­மான நீளம் கொண்ட நீர்ப்­பா­சன கட்­ட­மைப்பும் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த நீர்ப்­பா­சன முறைகள் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்­களில் தற்­போ­துள்ள 1500 ஹெக்­டெயார் நிலப்­ப­ரப்பு மற்றும் புதி­தாக அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட 4500 ஹெக்­டெயார் நிலங்­க­ளுக்கு நீர்ப்­பா­ச­னத்­துக்­கான நீர் வழங்­கவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தின் நேரடிப் பங்­க­ளிப்பில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் உமா­ஓயா கீழ் நீர்த்­தேக்க அபி­வி­ருத்தித் திட்­ட­மா­னது கிரிந்தி ஓயா பள்­ளத்­தாக்கில் நீண்­ட­கா­ல­மாக நிலவி வந்த நீர்ப் பற்­றாக்­கு­றையை முழு­மை­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தோடு, பெறப்­படும் நீரின் மூலம் அதி­க­பட்ச பயன்­களைப் பெற புதிய தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி ஒருங்­கி­ணைந்த விவ­சாய மேம்­பாட்டுத் திட்­டத்தை செயல்­ப­டுத்­து­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அத்­துடன், பண்­டா­ர­வளை மற்றும் வெல்­ல­வாய பிர­தே­சங்­களில் குடிநீர் மற்றும் கைத்­தொழில் தேவை­க­ளுக்­கான நீரை வழங்­கு­வதில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கும் உமா­ஓயா பல்­நோக்கு அபி­வி­ருத்தி திட்டம் தீர்­வு­களை வழங்­கி­யுள்­ளது.

ஈரா­னுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான முறை­யான இரா­ஜ­தந்­திர உற­வுகள் 1962 இல் ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன், முறை­யான இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பி­ருந்தே இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­புகள் பேணப்­பட்­டுள்­ளன.

முந்­தைய பார­சீக காலத்தில், இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் முக்­கி­ய­மாக ஹோர்மூஸ் நீரிணை வழி­யாக நடத்­தப்­பட்­டுள்­ளன. ஈரான் தனது தூத­ர­கத்தை 1975 இல் கொழும்பில் ஆரம்­பித்­த­துடன், இலங்கை தனது தூத­ர­கத்தை ஜன­வரி 1990 இல் தெஹ்­ரானில் நிறு­வி­யது.

இரு நாடு­களும் அனைத்து துறை­க­ளிலும் நெருக்­க­மான ஒத்­து­ழைப்பைப் பேணு­வ­துடன், பல­த­ரப்பு உற­வு­களில் ஒன்­றுக்­கொன்று ஒத்­து­ழைக்­கின்­றன. ஈரானின் அபி­வி­ருத்தி உத­விகள் கடன் வடிவில் வழங்­கப்­ப­டு­வ­துடன், பிர­தா­ன­மாக உட்­கட்­ட­மைப்பு வச­திகள், நீர்ப்­பா­சனம் மற்றும் வலு­சக்தி போன்ற துறை­களை மேம்­ப­டுத்­து­வதில் முக்­கிய கவனம் செலுத்­து­கி­றது.

இலங்கை அர­சாங்கம் ஏற்­க­னவே 19,301,572.6 அமெ­ரிக்க டொலர்­களை ஈரா­னுக்கு திருப்பிச் செலுத்­தி­யுள்­ள­துடன், செலுத்த வேண்­டிய மீத­முள்ள தொகை ஏறத்­தாழ 35,246,022.56 அமெ­ரிக்க டொலர்­க­ளாகும்.

இலங்­கையும் ஈரானும் ஐக்­கிய நாடுகள் சபை­யிலும் அதன் துணை அமைப்­பு­க­ளிலும் நெருக்­க­மாகப் பணி­யாற்­று­வ­துடன் இரு நாடு­க­ளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன.

இலங்கையும் ஈரானும் ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் (ACD) மற்றும் அணிசேரா அமைப்பு (NAM) மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கம் (IORA) உட்பட பல சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் மஹன் விமான சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை இணங்கியுள்ளதுடன், மேலும் இது ஈரானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருவதற்கு ஊக்குவிப்பதோடு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2022 இல், இலங்கைக்கு அதிக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளின் பட்டியலில் ஈரான் 27 ஆவது இடத்தைப் பிடித்ததுடன், இது 2021 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. 2023 ஜூன் இறுதிக்குள், 5,973 ஈரானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.