2024 ஹஜ் விவகாரம்: உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக வழக்கு தாக்கல்

0 170

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்­களை மீறி இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­மையை காரணம் காட்டி நீதி­மன்றம் ஹஜ் கோட்­டா­வுக்கு தடை விதித்­துள்­ள­மைக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

அரச ஹஜ் குழு ஹஜ் முக­வர்­க­ளு­க்­கு பகிர்ந்­த­ளித்த ஹஜ் கோட்­டாக்­க­ளுக்கு தடை விதித்து மேல் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பினை ரத்துச் செய்யக் கோரி உயர் நீதி­மன்றில் மனுத்­தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் சார்பில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா தெரி­வித்தார்.

யுனைடட் டிரவல்ஸ் அன்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர் மொஹமட் லரீப் இவ்­வ­ருட ஹஜ் கோட்டா உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்­களை மீறி பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், ஹஜ் விசா­ரணைக் குழு அளித்த தீர்ப்­பினை ஆட்­சே­பித்து இவ்­வ­ழக்கு ஹஜ் குழு மீதும், திணைக்­க­ளத்தின் மீதும் தொடரப் பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்தே மேல் நீதி­மன்ற நீதி­பதி சம­ரகோன் ஹஜ் கோட்டா பகிர்­வுக்கு தடை விதித்து அறி­வித்தார்.

இவ்­வ­ரு­டத்­துக்­கான 3500 ஹஜ் கோட்­டாக்கள் 93 ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் பகி­ரப்­பட்­டன. இவற்றில் 26 கோட்­டாக்கள் பகி­ரப்­ப­டாது நிலு­வையில் இருந்­தன.

இந்­நி­லையில் இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ளன. ஹஜ் முக­வர்­களும் ஹஜ் பய­ணி­களும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அரச ஹஜ் குழுவின் அறி­வு­றுத்­தல்­களை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர்.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களின் நிலைமை குறித்து திணைக்களத்தின் ஹஜ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியை விடிவெள்ளி பல தடவைகள் அவரது கைப்பேசியூடாக தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் ஏற்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.