மரண தண்­ட­னை­யி­லி­ருந்து அப்துல் ரஹீமை காப்­பாற்ற 34 கோடி ரூபா திரட்­டிய கேரள மக்கள்

0 186

சவூதி அரே­பி­யாவில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கேர­ளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்­றி­ணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்­டிய சம்­பவம் அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

கேர­ளாவின் கோழிக்­கோடு பகு­தியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்­பவர் சவூதி அரே­பி­யாவில் உள்ள அவ­ரது முத­லா­ளியின் மகனை கொலை செய்­த­தாகக் கூறி அவ­ருக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட்­டது.

கேர­ளாவில் ஆட்டோ ஓட்டிக் கொண்­டி­ருந்த அப்துல் ரஹீம் கடந்த 2006ஆம் ஆண்டு சவூதி அரே­பி­யா­வுக்கு வேலைக்­காகச் சென்­றுள்ளார். அப்­போது சவூதி அரே­பி­யாவில் ரியாத்தில் உள்ள குடும்­பத்­திற்கு கார் சார­தி­யாக பணி­பு­ரியும் வாய்ப்பு ரஹீ­முக்கு கிடைத்­தது. இதற்­கி­டையில், அந்த வீட்டில் 15 வயது மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான சிறு­வனை ரஹீம் கவ­னித்து வந்தார்.

ஒரு நாள் ரஹீம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான சிறு­வ­னுடன் காரில் சென்­ற­போது, ஒரு சோக­மான சம்­பவம் நடந்­தது. அது ரஹீமின் வாழ்க்­கையைப் புரட்டிப் போடும் என்று அவர் எதிர்­பார்க்­கவே இல்லை. அதா­வது போக்­கு­வ­ரத்து சிக்­னலின் போது காரை நிறுத்­தாது செல்­லு­மாறு ரஹீ­மிடம் சிறுவன் வற்­பு­றுத்­தி­யுள்ளான். ஆனால் ரஹீம் அதைச் செய்­யாமல் சிக்னல் முடியும் வரை காத்­தி­ருந்தார். இதனால் கோப­ம­டைந்த சிறுவன் ரஹீமின் முகத்தில் எச்சில் துப்­பவும் அடிக்­கவும் ஆரம்­பித்­ததால் நிலைமை மோச­மா­கி­யது. பின்னர், வாக்­கு­வா­தத்தின் போது, சிறுவன் கழுத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த மருத்­துவ சாதனம் தவ­று­த­லாக கீழே விழுந்­துள்­ளது. அந்தக் கரு­வியே சிறுவன் சாப்­பி­டவும் சுவா­சிக்­கவும் உத­வு­கி­றது. கருவி காருக்குள் விழுந்­ததில் சிறு­வ­னுக்கு மூச்சுத் திணறல் ஏற்­பட்­டது. ரஹீம் மீண்டும் கரு­வியை எடுக்க முயற்­சிக்­கிறார், ஆனால் அதற்குள் சிறுவன் இறந்­து­விட்டார். இந்த சம்­ப­வம்தான் ரஹீமை மரணம் வரை கொண்டு வந்­தது. சவூதி அரே­பி­யாவின் சட்­டத்­தின்­படி ரஹீம் மீது கொலைக் குற்றம் சாட்­டப்­பட்டு 2018 இல் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இன்­னொரு பக்கம் சம்­ப­ளத்­திற்­காகக் காத்­தி­ருந்த ரஹீமின் மனை­வியும் மகனும் நடந்த சம்­ப­வத்தைக் கேள்­விப்­பட்­டதும் நிலை­கு­லைந்து போகின்­றனர். இதை­ய­டுத்து, தனது நண்­பர்­களின் அறி­வு­றுத்­த­லின்­படி ரஹீம் மேல்­மு­றை­யீடு செய்தார். அவ­ரது மரண தண்­டனை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டது. மறு­புறம், இறந்த சிறு­வனின் குடும்­பத்­துடன் ஒக்­டோபர் 16, 2023 அன்று ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டது. இழப்­பீ­டாக 15 மில்­லியன் (இந்­திய ரூபாவில் சுமார் 34 கோடி) சவூதி ரியால் கொடுத்தால் வழக்கை வாபஸ் பெறு­வ­தாக சிறு­வனின் குடும்­பத்­தினர் கூறி­யுள்­ளனர். அதையும் 6 மாதத்­திற்குள் செலுத்த வேண்டும் என்று நிபந்­தனை விதித்­தனர்.

இதனை அறிந்த அப்துல் ரஹீமின் குடும்­பத்­தினர், நண்­பர்கள் சவூதி அரே­பியால் பணி­பு­ரியும் இந்­தி­யர்கள் என அனை­வரும் இணைந்து “சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செய­லியை உரு­வாக்­கி­ய­தோடு சிறு­வனின் மர­ணத்­திற்கு அப்துல் ரஹீம் காரணம் இல்லை எனவும் அது தற்­செ­ய­லான ஒன்று எனவும் விளக்­க­ம­ளித்­தி­ருந்­தனர்.

இந்­திய யூனியன் முஸ்லீம் லீக் கட்­சியின் கீழ் இயங்கும் கேரள முஸ்லிம் கலாச்­சார மையத்தின் சவூதி பிரிவின் பொதுச் செய­லாளர் அஷ்ரஃப் வெங்கட் சமீ­பத்தில் கோழிக்­கோடு வந்­தி­ருந்தார். கேர­ளாவில் உள்ள பாஜக உட்­பட அனைத்து அர­சியல் கட்­சி­களின் உத­வி­யுடன் ரஹீ­முக்­கான நன்­கொடை பிரச்­சா­ரத்தை முன்­னெ­டுத்துச் செல்­வதே அஷ்­ரஃப்பின் நோக்கம். “ரஹீமின் உயிரைக் காப்­பாற்ற அமைக்­கப்­பட்ட குழுவில் இந்து, முஸ்லிம், பா.ஜ.க உள்­ளிட்ட அனைத்து அர­சியல் கட்­சி­யி­னரும் இடம் பெற்­றுள்­ளனர்,” என்­கிறார் வெங்கட்.

கடந்த வெள்­ளி­யன்று (ஏப்ரல் 12), “அவ­ரது விடு­த­லைக்குத் தேவை­யான ரூ.34 கோடி இலக்கை எட்­டி­யுள்ளோம். தய­வு­செய்து மேலும் பணம் அனுப்ப வேண்டாம். தற்­போது, ரூ.34.45 கோடி வசூ­லித்­துள்ளோம். அதி­க­மாக பெறப்­படும் தொகை தணிக்கை செய்­யப்­பட்டு நல்ல நோக்­கத்­திற்­காக பயன்­ப­டுத்­தப்­படும்,” என்று அவர் தெரி­வித்தார்.

“குழந்­தையை இழந்த குடும்­பத்­தி­ன­ருடன் செய்­யப்­பட்ட ஒப்­பந்­தத்தை முன்­னெ­டுத்து அப்துல் ரஹீமின் விடு­த­லையை உறுதி செய்ய, எங்கள் அறக்­கட்­டளை ரியாத்தில் உள்ள இந்­தியத் தூத­ர­கத்தைத் தொடர்பு கொள்ளும்,” என்று அவர் கூறினார்.

மேலும், “இந்தத் தொகை பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தி­ன­ருக்கு அப்துல் ரஹீமின் மன்­னிப்பை கோரும் ‘குருதிப் பண­மாக’ வழங்­கப்­படும்,” என்றும் வெங்கட் குறிப்­பிட்டார்.

அப்துல் ரஹீமைக் காப்­பாற்ற சவூதி அரே­பி­யாவில் உள்ள கேரள மக்­களின் அமைப்பு முக்­கிய பங்­காற்­றிய நிலையில், சுரேஷ் என்ற நபரும் பெரிதும் உத­வினார்.

சட்ட உதவிக் குழுவின் தலை­வ­ரான சுரேஷ், கடந்த மார்ச் 3-ஆம் திகதி கோழிக்­கோட்டில் ‘சேவ் அப்துல் ரஹீம்’ என்ற மொபைல் செய­லியை அறி­மு­கப்­ப­டுத்­தினார். ரூ.34 கோடியை வசூ­லிக்கத் தொடங்­கப்­பட்ட இந்தப் பரப்­புரை, தொழி­ல­தி­பர்கள் மற்றும் சமூக வலைத்­தள பதி­வர்கள் இணைந்­த­போது வேகம் பெற்­றது.

“எங்கள் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்த வார்த்­தை­களே இல்லை,” என அப்துல் ரஹீமின் தாய் ஃபாத்­துமா கூறி­ய­தாக ‘தி டெலி­கிராப்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய அவர், “இங்­குள்ள மக்­களின் உத­வியால் இவ்­வ­ளவு பெரிய தொகையை இவ்­வ­ளவு விரை­வாக வசூ­லிக்க முடிந்­தது. அனை­வ­ருக்கும் நன்றி கூறு­கிறேன்,” என்றார்.

இது­கு­றித்து பேசிய அஷ்ரஃப் வெங்கட், ரியாத்தில் உள்ள இந்­திய தூத­ர­கத்­திற்கு பணம் அனுப்பும் பணி துவங்­கி­யுள்­ளது என்றார். அந்தத் தொகை வக்ப் வாரியம் மற்றும் நீதி­மன்ற கண்­கா­ணிப்பு வங்கிக் கணக்­கிற்கு அனுப்­பப்­படும் என்றார். பணம் அனுப்பப்பட்ட பின், அப்துல் ரஹீமின் விடுதலையை எதிர்பார்க்கலாம் என்றும், ஆனால் அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை என்றும் வெங்கட் கூறினார்.

அப்துல் ரஹீம் என்ற தனி மனிதரின் உயிரைக் காப்பாற்ற 40 நாட்களில் 34 கோடி ரூபாய் வசூலிக்க, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கேரள மக்கள் ஒன்றிணைந்து பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கியமை உலக மக்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.