ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்

0 291

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘உமா ஓயா’ பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்­டத்தை மக்கள் பாவ­னைக்கு கைய­ளிக்கும் வைப­வத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைஸி எதிர்­வரும் 24ஆம் திகதி இலங்கை வர­வுள்ளார்.

குறிப்­பிட்ட திட்டம் ஈரான் அபி­வி­ருத்தி வங்­கியின் கடன் உத­வியின் கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்தின் கீழ் தேசிய மின் கட்­ட­மைப்­புக்கு 120 மெகா வோட் மின்­சாரம் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது.

மின்­சார உற்­பத்­திக்கு மேல­தி­க­மாக இத்­திட்­டத்தின் கீழ் குடிநீர் மற்றும் விவ­சாயத்துக்கு தேவை­யான நீர் விநி­யோ­கமும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

529 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் இத்­திட்­டத்தின் நிர்­மாண வேலைகள் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்தின் நிர்­மாண வேலைகள் கடந்த 2015ஆம் ஆண்டு இறு­தியில் பூர்த்தி செய்­யப்­ப­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த போதும் பல்­வேறு தடைகள் கார­ண­மாக கால­தா­மதம் ஏற்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இஸ்­ரேலின் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் ஈரா­னுக்குள் தாக்­குதல் நடத்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளமை சர்வதேச அளவில் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.