காத்தான்குடி பிரதேச செயலகத்தின் முன்னால் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் அணி திரண்டு பதாதைகளை ஏற்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் சட்ட விரோதமான காணி ஆக்கிரமிப்பை எதிர்த்தே பெண்கள் சிலர் அணி திரண்டு பதாதைகளை ஏற்தியவாறு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“பிரதேச செயலாளரே சட்ட விரோத காணி ஆக்கிரமிப்பைத் தடை செய்,”
”பல நூற்றாண்டு காலமாக மக்கள் பாவனையிலிருந்த காணியை தனி நபருக்குக் கொடுக்காதே”
”நகரசபையால் சட்டவிரோதமாக அகற்றிய பின்னர் மீண்டும் அனுமதி வழங்கியது ஏன்”
”சட்ட விரோத வேலி அடைப்பை உடன் அகற்று”
”பொது மக்களுக்கு அநீதி செய்யாதே” என்ற வாகசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் தாங்கியிருந்தனர்.
மேலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வைக்க பெண் பொலிஸார் உட்பட இன்னும் சில பொலிஸ் அலுவலர்களும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலிருந்து வர வழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli
.