யுத்தம் முடிவடைந்த பிறகு காஸா பகுதியில் பாடசாலை நிர்மாணிக்க உறுதியளித்துள்ளோம்

பலஸ்தீன அரசை கலைக்க ஒருபோதும் ஆதரவளியோம் என்கிறார் ஜனாதிபதி

0 198
  • முஸ்லிம்களின் மதநம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்
  • கடந்த காலத்தில் ரமழான் நோன்பைக் கூட சரியாக நோற்க முடியாத நிலை இருந்தது
  • த்­ரஸா பாட­சாலை கல்­வி­யையும் கல்வி அமைச்சின் கீழ் மேற்­பார்வை செய்­வது குறித்து கவனம்

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் காஸா பகு­தியில் பாட­சாலை ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தா­க உறு­தி­ய­ளித்­துள்ளோம். பலஸ்­தீன அரசை கலைப்­பதை நாங்கள் ஒரு­போதும் ஆத­ரிக்க மாட்டோம். எனவே, இந்தப் போரை நிறுத்­து­வ­தற்கு எமது ஆத­ரவை வழங்­கு­கிறோம் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

முஸ்­லிம்­க­ளுக்கு தமது மத­நம்­பிக்­கையின் பிர­காரம் நல்­ல­டக்கம் செய்­வதை உறுதி செய்­வ­தற்கு புதிய குழு­வொன்று நிய­மிக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

கண்டி, கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க இதனைக் குறிப்­பிட்டார்.

மேலும் இங்கு கருத்துத் தெரி­வித்த ஜனா­தி­பதி,
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டியால் மக்கள் வரி­சையில் நிற்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. இதனால் ரமழான் நோன்பைக் கூட சரி­யாக நோற்க முடி­ய­வில்லை.

கடந்த வருடம் முதல் பொரு­ளா­தாரம் மேம்­பட்டு வரு­வதால், இன்று வழக்கம் போல் ரமழான் நோன்பு காலத்தை கழிக்­கவும், ரமழான் நோன்பை நோற்­கவும் வாய்ப்புக் கிடைத்­துள்­ளது.

ரம­ழானின் போது முஸ்லிம் சமூகம் சிறப்­பாக நோன்பை நோற்று நற்­பண்­பு­களை வளர்த்துக் கொள்­கி­றது. ரமழான் பண்­டி­கையும் சிங்­களப் புத்­தாண்டும் ஒரே சம­யத்தில் கொண்­டா­டப்­பட இருக்­கி­றது. இன, மத பேத­மின்றி செயற்­ப­டக்­கூ­டிய கலா­சாரம் வர­லாற்றில் இருந்து இந்­நாட்டில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது கல்வி அமைச்சின் கீழ் பிரி­வெனாக் கல்வி முறைப்­ப­டுத்­தப்­ப­டு­வது போன்று மத்­ரஸா பாட­சாலை கல்­வி­யையும் கல்வி அமைச்சின் கீழ் மேற்­பார்வை செய்­வது குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. 2019ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் இஸ்­லா­மிய புத்­த­கங்­களை தரு­விப்­பது தொடர்பில் ஏற்­பட்­டுள்ள தடை­களை கண்­ட­றிந்து அவற்றை நீக்­கு­வது குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த கொரோனா தொற்­று­நோயின் போது, முஸ்லிம் சமூகம் தங்­களின் இறுதிச் சடங்­கு­களை முறை­யாகச் செய்ய முடி­யாமல் மிகவும் வேத­னை­யான சூழ்­நி­லையைச் சந்­தித்­தது. அந்த நிலையை எதிர்­கா­லத்தில் மாற்­றி­ய­மைக்க நாங்கள் செயற்­பட்டு வரு­கிறோம்.

மத ரீதி­யா­கவோ அல்­லது இறுதி உயில் மூல­மா­கவோ யாரேனும் தங்கள் விருப்­பப்­படி இறுதிச் சடங்­கு­களைச் செய்­யக்­கூ­டிய சட்­டங்கள் எதிர்­கா­லத்தில் தயா­ரிக்­கப்­படும். அடக்கம் அல்­லது தகனம் செய்ய அனை­வ­ருக்கும் உரிமை உண்டு. அவ­ரவர் விருப்­பப்­படி செயற்­படத் தேவை­யான விதி­களை நாங்கள் தயார் செய்வோம்.

இலங்கை மக்கள் இன்று ரமழான் நோன்பை அனுஷ்­டிக்­கின்ற போதும் காஸா பகு­தியில் மிகவும் சோக­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூகம் சுமார் முப்­பத்­தைந்­தா­யிரம் உயிர்­களை இழந்­துள்­ளது. அத­னால்தான் இந்த ஆண்டு தேசிய இப்தார் நிகழ்வை நடத்­தா­தி­ருக்க முடிவு செய்­யப்­பட்­ட­தோடு அந்த பணத்தை காஸா முஸ்லிம் மக்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுத்தோம்.

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் காஸா பகு­தியில் பாட­சாலை ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளித்­துள்ளோம். பலஸ்­தீன அரசை கலைப்­பதை நாங்கள் ஒரு­போதும் ஆத­ரிக்க மாட்டோம். எனவே, இந்தப் போரை நிறுத்­து­வ­தற்கு எமது ஆத­ரவை வழங்­கு­வ­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

காத்­தான்­குடி பள்­ளி­வா­ச­லினால் 10 மில்­லியன் ரூபாவும், கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லினால் 2.2 மில்­லியன் ரூபாவும், முஸ்லிம் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிறு­வ­னங்­க­ளினால் 3.5 மில்­லியன் ரூபாவும் காஸா முஸ்லிம் சமூ­கத்­திற்கு வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

கண்டி, கட்­டு­கெலே ஜும்ஆ பள்­ளி­வாசல் பிர­தம மௌலவி சையித் மௌலானா, அமைச்சர் மனுஷ நாண­யக்­கார, இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான லொஹான் ரத்­வத்தே, அனு­ராத ஜய­ரத்ன, திலும் அமு­னு­கம, தேசிய பாது­காப்பு தொடர்­பான ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட ஆலோ­ச­கரும் ஜனா­தி­பதி பணிக்­குழாம் பிர­தா­னி­யு­மான சாகல ரத்­நா­யக்க உள்­ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.