இலங்கை அரசாங்கம் வழங்கிய நன்கொடை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.பணியக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது

இலங்கை வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரான்ச்

0 172

(றிப்தி அலி)
பலஸ்­தீனின் காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நன்­கொடை நிதி பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி­ய­கத்தின் (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­களின் வதி­விடப் பிர­தி­நிதி மார்க்-­ஆண்ட்ரே ஃப்ரான்ச் தெரி­வித்தார்.

“இலங்கை அர­சாங்­கத்­தினால் கடந்த வாரம் வழங்­கப்­பட்ட ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நன்­கொடை கிடைக்கப் பெற்­ற­மைக்­கான பற்­று­சீட்­டினை வெளி­வி­வ­கார அமைச்­சிற்கு UNRWA உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனுப்­பி­யுள்­ளது” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

“இந்­நிதி காஸா மக்­களின் மனி­தா­பி­மானத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும்” என ஐக்­கிய நாடு­களின் இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி தெரி­வித்தார்

காஸா மக்­களின் முக்­கி­ய­மான தேவையின் தரு­ணத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட மனி­தா­பி­மான வேண்­டு­கோளை ஏற்று இலங்கை அர­சாங்கம் வழங்­கிய பங்­க­ளிப்­பிற்கு UNRWA மிகுந்த நன்­றி­யுடன் இருப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

1949ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி நிறு­வ­னத்­தினால் அந்­நாட்டில் பல்­வேறு மனி­தா­பி­மான செயற்­திட்­டங்கள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றான நிலையில், காஸாவில் இடம்­பெ­று­கின்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா சிறுவர் நிதி­யத்­தினை இலங்கை அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது.

இவ்­வ­ருடம் இப்தார் நிகழ்­வு­களை நடாத்­து­வ­தற்­காக அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளினால் ஒதுக்­கப்­ப­டு­கின்ற நிதியை இந்த நிதி­யத்­துக்கு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார்.

இதற்­கி­ணங்க, முதற்­கட்­ட­மாக காஸா சிறுவர் நிதி­யத்­திற்­காக வழங்­கப்­பட்ட ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொல­ரினை UNRWA­விற்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் அண்­மையில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, காஸா மக்­க­ளுக்கு தமது நன்­கொ­டை­களை வழங்க விரும்­புவோர் இலங்கை வங்­கியின் தப்­ரபேன் கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்­கத்­திற்கு எதிர்­வரும் ஏப்ரல் 30ஆம் திக­திக்கு முன்னர் வைப்புச் செய்­யு­மாறு ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­துள்­ளது.

இந்­நி­தி­யத்­திற்கு இலங்கை மக்கள் தொடர்ச்­சி­யாக பங்­க­ளிப்­புக்­களை செலுத்தி வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் இந்த நிதி காஸா மக்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­வது தொடர்பில் தற்­போது பல்­வேறு வகை­யான போலிச் செய்­திகள் சமூக ஊட­கங்­களில் தொடர்ச்­சி­யாக பரப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வா­றான நிலையில், குறித்த நிதி காஸா மக்களுக்கு சென்றடைவது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியினை தொடர்புகொண்ட வினவிய போதே இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை நிதி UNRWAவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள விடயத்தினை அவர் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.