ஞானசார தேரர்: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு

0 193

எப்.அய்னா

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மார்ச் 28 ஆம் திகதி இந்த தண்­டனை தீர்ப்பு கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­தி­கே­யினால் வழங்­கப்­பட்­டது.

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்வை தூற்றும் வித­மாக கருத்து வெளி­யிட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தாக கொழும்பு மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்த எச்.சி.1948/20 எனும் வழக்கின் விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்த நிலையில், இந்த தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

மேல் நீதி­மன்ற வழக்கு :
இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் 2022 செப்­டம்பர் 20 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­திகே முன்­னி­லையில் இவ்­வ­ழக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது.

குற்­றச்­சாட்­டுக்கள்:
1. கடந்த 2016 நவம்பர் மாதம் முதலாம் திக­திக்கும் 2016 டிசம்பர் மாதம் 16 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் கிரு­ளப்­ப­னையில் வைத்து, ஒரு சாராரின் மத உணர்­வு­களை அவ­ம­திக்கும், தூண்டும் வித­மாக துஷ்ட எண்­ணத்­துடன் அதா­வது, இஸ்­லா­மி­யர்­களின் ஏற்பு மற்றும் நம்­பிக்­கை­க­ளுக்கு நிந்­தனை செய்யும் நோக்­குடன்,’ கூர­கல என்­பது 12 ஆயிரம் பிக்­குகள் சங்­க­மித்த ஒரு வர­லாற்று இடம்.இப்­போது இந்த இடத்தை ஆக்­கி­ர­மித்­துள்­ளனர். அதனை ஆக்­கி­ர­மித்­த­வர்கள் சைலானி முஸ்­லிம்கள். இப்­போது இங்கு மிக்க பிரச்­சினை கடவுள் ஒன்று இல்­லவும் இல்லை அந்த கட­வு­ளுக்கு முகமும் இல்லை இனி நாம் கேட்­கிறோம் என்ன ல…… காட்­டு­கின்­றீர்கள் என்று?’ என கூறி­யதன் ஊடாக முஸ்­லிம்­களின் மத நம்­பிக்­கையை நிந்­தனை செய்து இலங்கை தண்­டனை சட்டக் கோவையின் 291 ஆ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­தமை.

2. இதே காலப்­ப­கு­தியில், அதே இடத்தில் ஒரு சாராரின் மத உணர்­வு­களை அவ­ம­திக்கும், தூண்டும் வித­மாக துஷ்ட எண்­ணத்­துடன் அதா­வது, இஸ்­லா­மி­யர்­களின் ஏற்பு மற்றும் நம்­பிக்­கை­க­ளுக்கு நிந்­தனை செய்யும் நோக்­குடன் ‘ இந்த அல்லாஹ் பிடித்­துக்­கொண்­டி­ருந்த இடமே இது. இங்கு தான் சிறுநீர் கழித்தார். அதன் பின்னர் அடுத்த இடத்தில் காலை வைத்தார். அப்­படி சொல்­லு­ம­ள­வுக்கு பெரிய ‘ பூ வல்லா'( ஒரு வகை படரும் ஆக்­டோபஸ்) தான் அல்லாஹ். அல்லாஹ் என்­பது பாரிய ‘ பூ வல்லா'( ஒரு வகை படரும் ஆக்­டோபஸ்). ஒரு இடத்தில் சிறு நீர் கழிக்­கிக்­கின்றார். இன்­னொரு இடத்தில் மலம் கழிக்­கின்றார். முழு உலகும் அல்­லாஹ்­வி­னு­டை­யது என்றே சொல்லி இருக்­கின்­றார்கள். எனவே இந்த மூட நம்­பிக்­கைக்கு இட­ம­ளிக்க முடி­யாது.’ என கூறி­யதன் ஊடாக முஸ்­லிம்­களின் மத நம்­பிக்­கையை நிந்­தனை செய்து இலங்கை தண்­டனை சட்டக் கோவையின் 291 ஆ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­தமை.

இந்த இரு குற்­றச்­சாட்­டுக்­களே குற்றப் பத்­தி­ரி­கையில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அவை வாசித்­துக்­காட்­டப்­பட்ட போது, அக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் தான் நிர­ப­ராதி என ஞான­சார தேரர் குறிப்­பிட்­டி­ருந்தார். எனினும் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் நியா­ய­மான சந்த்­தே­கத்­துக்கு அப்பால் அக்­குற்­றங்­களை ஞான­சார தேரர் புரிந்தார் என்­பதை சாட்­சி­யங்கள் ஊடாக நிரூ­பித்­ததை அடுத்து அவரை குற்­ற­வா­ளி­யாக நீதி­மன்றம் அறி­வித்­தது.

மதகுருமாருக்கு சமூகத்தில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு உள்ள நிலையில் அதனை குற்றவாளி மீறியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே, குற்றவாளியான ஞானசார தேரருக்கு இரு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 2 வருடம் வீதம் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

முறைப்­பாடு:
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய இடம்­பெற்ற விசா­ர­ணை­களை மையப்­ப­டுத்தி, மேல் நீதி­மன்றில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

சாட்­சிகள்:
இவ்­வ­ழக்கை பொறுத்­த­வரை முதல் சாட்­சி­யா­ள­ரான அசாத் சாலியின் சாட்­சியம் பதிவு செய்­யப்­பட்ட நிலையில் 2 ஆவது சாட்­சி­யா­ள­ரான முஜிபுர் ரஹ்­மானின் சாட்­சி­யமும் நீதி­மன்றில் பெறப்­பட்­டது. 3 ஆம் சாட்­சி­யா­ள­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாத் பதி­யு­தீனின் சாட்­சி­யத்தை பெற அறி­வித்தல் விடுத்த போதும் பின்னர் அதற்­கான அவ­சியம் இல்லை என அவ­ரது சாட்­சியம் பெறப்­ப­ட­வில்லை. இந்த சாட்­சி­யா­ளர்கள் மன்றில் சாட்­சியம் அளித்த போது அவர்­களின் நல­னுக்­காக சட்­டத்­த­ரணி வஸீமுல் அக்­ர­முடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த்தார்.

இத­னை­விட 4 ஆவது சாட்­சி­யா­ள­ராக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த சுவர்­ன­வா­ஹினி பிர­தான நிறை­வேற்று அதி­கா­ரி­யாக இருந்து ஊடகத் துறை­யி­லி­ருந்து ஒதுங்­கிய வர்த்­தகர் சுதேவ ஹெட்டி ஆரச்சி,5 ஆவது சாட்­சி­யாளர் குறித்த செய்­தி­யாளர் சந்­திப்பை ஒளிப்­ப­திவு செய்த ஒளிப்­ப­திவு ஊட­க­வி­ய­லாளர் ஜனக விஜே­வர்­தன ஆகி­யோரின் சாட்­சி­யங்­களும் மன்றில் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டது.
சட்ட மா அதிபர் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மாலி திஸா­நா­யக்க மன்றில் ஆஜ­ரா­ன­துடன், ஞான­சார தேர­ருக்­காக சட்­டத்­த­ரணி ஆரி­ய­தாஸ குரே உள்­ளிட்ட குழு­வினர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த 4 விட­யங்­களை ஞான­சார தேரர் தரப்பு சவா­லுக்கு உட்­ப­டுத்­தாது வழக்கு விசா­ர­ணைக்கு முன்­ன­ரான ஒன்று கூடலின் போது ஏற்­புக்­க­ளாக ஏற்­றுக்­கொண்­டது.

அதில் இஸ்­லாத்தில் சிலை வணக்கம் இல்லை என்­பதும் சிலை வணக்கம் இஸ்­லா­மிய நம்­பிக்­கைக்கு எதி­ரா­னது என்­பதும் ஒரு ஏற்­பாகும்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தன் பக்க சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்­திய பின்னர், ஞான­சார தேர­ருக்கு அவர் தரப்பு நியா­யங்­களை முன் வைக்க அனு­ம­திக்­கப்­பட்­டது. இதன்­போதே அவர் பிரதி வாதிக் கூண்டில் இருந்­த­வாறு அறி­விப்­பொன்­றினை செய்தார்.

அதன் பின்னர் ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணியால் எழுத்து மூல சமர்ப்­பணம் ஒன்றும் மன்­றுக்கு முன் வைக்­கப்­பட்­டது.

சாட்சி பகுப்­பாய்வு :
நீதி­மன்றை பொறுத்­த­வரை சட்ட மா அதிபர் கொண்டு வந்த சாட்­சி­யங்கள் கவ­ன­மாக பகுப்­பாய்வு செய்­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக அந்த பகுப்­பாய்­வு­களின் போது சாட்­சி­யா­ளர்­களின் நம்­பகத் தன்மை, சாட்­சி­ய­ளிக்கும் பாணி, தாம­த­மின்மை, ஒத்த தன்­மைகள், நடப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் என பல நிர்­ண­யங்­களை மையப்­ப­டுத்தி இந்த பகுப்­பாய்வு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

சாட்­சி­யா­ளர்கள் :
முதல் இரு சாட்­சி­யா­ளர்­க­ளான அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தாங்கள் யூ ரியூப் தளத்தில் ஞான­சார தேரரின், முஸ்­லிம்­களை புண்­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பை முழு­மை­யாக பார்த்­த­தாக கூறி முறை­யிட்­ட­தாக தெரி­வித்­த­துடன், குற்­றச்­சாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள வச­னங்­களைக் கொண்டு அந்த நிந்­த­னையை ஞான­சார தேரர் செய்­த­தா­கவும் குறிப்­பிட்­டனர். அது தொடர்பில் அச்­செய்­தி­யாளர் சந்­திப்பின் இறு­வெட்டு சி.ஐ.டி.க்கு கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அந்த இறுவெட்டு தொடர்பில் சாட்­சி­யங்கள் தொடர்­பி­லான விஷேட விதி­வி­தா­னங்கள் தொடர்­பி­லான சட்­டத்தின் 7 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் போது­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.

4 ஆவது சாட்­சி­யா­ள­ரான சுதேவ ஹெட்டி ஆரச்சி சாட்­சியம் அளித்து, குறித்த ஒளிப்­ப­திவு ஹிரு தொலைக்­காட்சி ஊடாக பதிவு செய்­யப்­பட்­டது எனவும், அப்­போது தான் அத்­தொ­லைக்­காட்­சியின் செய்திப் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.

5 ஆவது சாட்­சி­யா­ள­ரான கடந்த 12 வரு­டங்­க­ளாக ஹிரு தொலைக்­காட்­சியில் ஒளிப்­ப­தி­வா­ள­ராக பணி புரியும் சத்­து­ரங்க விஜே­வர்­தன, முழு செய்­தி­யாளர் சந்­திப்பின் காணொ­ளி­யையும் திறந்த மன்றில் கேட்­டு­விட்டு, அது தன்னால் பதிவு செய்­யப்­பட்­டதே என்­பதை சாட்­சி­ய­மாக வழங்­கினார்.

ஞான­சார தேரரின் நிலைப்­பாடு:
இவை தொடர்பில் பிர­தி­வாதி கூண்­டி­லி­ருந்­த­வாறு ஞான­சார தேரர் அளித்த அறி­விப்பில், குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு மற்றும் அதன் உள்­ள­டக்கம் ஆகி­ய­வற்றை ஏற்­றுக்­ கொண்­ட­துடன் அது எவ­ரையும் புண்­ப­டுத்தும் நோக்­குடன் பேசப்­ப­ட­வில்லை எனவும், இஸ்­லா­மி­யர்­களின் மனம் புண்­பட்­டி­ருந்தால் தான் கவலை தெரி­விப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எழுத்து மூல சமர்ப்­பணம் :
ஞான­சார தேரர் சார்பில் முன் வைக்­கப்­பட்ட எழுத்து மூல சமர்ப்­ப­ணத்­திலும் அவர் புண்­ப­டுத்தும் நோக்­குடன் அந்த கருத்­துக்­களை முன் வைக்­க­வில்லை என்­பதே பிர­தான விட­ய­மாக அமைந்­தி­ருந்­தது.

நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­தி­கேயின் தீர்ப்பு :
முறைப்­பாட்­டாளர் தரப்பு மற்றும் பிர­தி­வா­தியின் பிர­தி­வாதிக் கூண்டு அறி­விப்பு அவர் சார்­பி­லான எழுத்து மூல சமர்ப்­பணம் உள்­ளிட்­டவை நீதி­ப­தி­யினால் கவ­ன­மாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்­சி­யா­ளர்­க­ளிடம் ஞான­சார தேரர் தரப்­பினால் தொடுக்­கப்­பட்ட குறுக்கு கேள்­விகள் அவை தொடுக்­கப்­பட்ட விதம், அதற்கு அளிக்­கப்­பட்ட பதில்கள் என அனைத்தும் நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­தி­கே­யினால் கவ­ன­மாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இதில் 5 ஆவது சாட்­சி­யா­ளரின் சாட்­சியம் எந்த சவா­லுக்கும் உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதே போன்று முதல் இரு சாட்­சி­யா­ளர்­க­ளான அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இணை­யத்தில் இருந்து பிரதி செய்து சி.ஐ.டி.க்கு வழங்­கிய இறு­வெட்­டுக்­களில் அடங்­கி­யுள்ள விட­யங்கள் எந்­த­வ­கை­யிலும் ஞான­சார தேரர் தரப்­பி­னரால் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­தி­கேயின் அவ­தா­னிப்­பாகும்.

அதன்­ப­டியே, ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முன் வைக்­கப்­பட்ட குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கேவ­ல­மான வச­னங்­களை உள்­ள­டக்­கிய விட­யங்­களை ஞான­சார தேரர் தெரி­வித்­தமை, அத­னூ­டாக முஸ்­லிம்­களின் நம்­பிக்­கையை நிந்­தனை செய்­தமை தொடர்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள இரு குற்­றச்­சாட்­டுக்­களும் சந்த்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­பதி அறி­வித்து ஞான­சார தேரரை குற்­ற­வா­ளி­யாக அறி­வித்­துள்ளார்.

இஸ்­லா­மி­யர்­களின் நம்­பிக்­கையை நிந்­தனை செய்­தமை ஊடாக இலங்கை தண்­டனைச் சட்டக் கோவையின் 291 ஆ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை ஞான­சார தேரர் புரிந்­துள்ளார் என்­பதை விளக்க நீதி­பதி தனது தீர்ப்பில், தண்­டனை சட்டக் கோவையின் 291 ஆவது அத்­தி­யாயம் தொடர்பில் நீண்ட விளக்­கங்­களை கொடுத்­துள்ளார்.

1883 ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்ட எமது தண்­டனைச் சட்டக் கோவையின் மூலம் ஆங்­கில மொழியில் இருப்­பதை சுட்­டிக்­காட்டி அதனை விளக்­கி­யுள்ள நீதி­பதி, எமது தண்­டனை சட்டக் கோவையின் 291 ஆ பிரிவு, இந்­திய தண்­டனை சட்டக் கோவையின் 295 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு சம­மா­னது என்­பதை விளக்­கி­யுள்ளார்.

இந்­திய தண்­டனைச் சட்டக் கோவை 1860 களில் ஆங்­கி­லே­யரால் அறி­முகம் செய்­யப்­பட்ட போதும், 1927 ஆம் ஆண்டே 295 ஆவது அத்­தி­யாயம் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளது. அதே போல இலங்­கையின் தண்­டனை சட்டக் கோவையின் 291 ஆ அத்­தி­யா­ய­மா­னது 1945 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க திருத்தம் ஊடா­கவே உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய தண்­டனை சட்டக் கோவையின் 295 ஆவது அத்­தி­யாயம் உள்­ளீர்க்­கப்­பட கார­ண­மாக அமைந்த முஹம்மத் நபி­ய­வர்­களை நிந்­தனை செய்யும் கையேடு ஒன்­றினை மையப்­ப­டுத்­திய விட­யத்தை இந்­திய தண்­டனை சட்டக் கோவை விளக்க புத்­தகம் ஒன்­றினை மையப்­ப­டுத்தி விரி­வாக ஆராய்ந்­துள்ள நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்த்­திகே, இவ்­வ­கை­யான குற்­றச்­சாட்­டுக்­களின் பயன்­ப­டுத்­திய வச­னங்கள் மற்றும் அவ்­வ­ச­னங்­களை பயன்­ப­டுத்­து­வதின் உள்­ளார்ந்த்த நோக்கம் தொடர்பில் வழக்குத் தொடுநர் நிரூ­பிக்க வேண்டும் என்­பது புல­னா­வ­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அதன்­ப­டியே இந்த வழக்கில் ஞான­சார தேரர் பயன்­ப­டுத்­திய வச­னங்கள் தனி­யாக ஆரா­யப்­ப­டாது, முழு செய்­தி­யாளர் சந்­திப்பின் உள்­ள­டக்­கத்­து­டனும் சேர்த்து ஆரா­யப்­பட்­டுள்­ளது.

நீதி­ப­தியின் தீர்ப்பின் படி, இந்த செய்­தி­யாளர் சந்திப்பு முழு­வதும் ஞான­சார தேரரின் இலக்கு முஸ்­லிம்­க­ளாக இருந்­துள்­ளது. இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்த்­திப்பில் முழு முஸ்­லிம்கள் மற்றும் அவர்கள் ஏக இறை­வ­னாக, அவர்­க­ளது பாது­கா­வ­ல­னாக நம்­பிக்கை கொண்­டுள்ள அல்­லாஹ்வை குறி வைத்தே அனைத்து விட­யங்­களும் பேசப்­பட்­டுள்­ளன.

ஒரு பெளத்த துற­வி­யாக இருந்து கொண்டு ஞான­சார தேரர் மிக ஆக்­ரோ­ஷ­மாக அவ­ரது வச­னங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளமை தெட்டத் தெளி­வாக அவ­தா­னிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவர் வேண்டும் என்றே, நிந்­தனை செய்யும் எண்­ணத்­துடன் அந்த வச­னங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளமை சாட்­சி­யங்கள் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக முழு உல­கிலும் வாழும் முஸ்­லிம்­களின் நம்­பிக்கை நிந்­தனை செய்­யப்­பட்­டுள்­ளது.

‘முழு உல­கிலும் உள்ள இஸ்­லா­மி­யர்கள் அல்­லாஹ்வை கட­வு­ளாக வழி­ப­டு­கின்­றனர். அவர்கள் அல்­லாஹ்­வுக்கு உருவம் கற்­பிப்­ப­தில்லை. அது அவர்­களின் நம்­பிக்கை. இந்த நிலையில் இவ்­வ­ழக்கில் முன் வைக்­கப்­பட்­டுள்ள சாட்­சி­யங்­களை ஆராயும் போது, ஞான­சார தேரர் பிர­தி­வாதிக் கூண்டில் இருந்­த­வாறு கூறிய விடயம் அவர் சார்­பி­லான எழுத்து மூல சமர்ப்­ப­ணத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யத்­துக்கு அமைய நிந்­தனை செய்யும் எண்­ணத்தில் கூற­வில்லை என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஞான­சார தேரரின் கருத்­துக்கள் திடீ­ரென, தெரி­யாமல், கவ­ன­யீ­ன­மான போக்­கினால் வெளிப்­ப­ட­வில்லை. அது இஸ்­லாத்தை பின்­பற்றும் அனை­வ­ரதும் உணர்­வுகள், எண்­ணங்­களை வேண்­டு­மென்றே புண்­ப­டுத்தும் நோக்­குடன் நிந்­தனை செய்யும் எண்­ணத்­துடன் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை துல்­லி­ய­மாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் ஞான­சார தேரரை குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் குற்­ற­வா­ளி­யாக இந்த நீதி­மன்றம் அறி­விக்­கின்­றது.’ என நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­திகே தனது 24 பக்க தீர்ப்பில் தெளி­வாக குறிப்­பிட்­டுள்ளார்.

தண்­டனை தீர்ப்பு:
குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட ஞான­சார தேர­ருக்கு தண்­டனை அளிக்க முன்னர் தண்­டனை தொடர்பில் மன்றில் விட­யங்கள் முன் வைக்­கப்­பட்­டன. சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மாலி திஸா­நா­யக்க, இலங்கை பல இனக் கல­வ­ரங்­களை கண்­டுள்ள நிலையில், இவ்­வா­றான கருத்­துக்கள் மிக ஆபத்­தா­னது எனவும் அவை இன முரண்­பா­டு­களை தோற்­று­விக்கும் எனவும் சுட்­டிக்­காட்­டினார். எனவே குற்­ற­வா­ளி­யான தேர­ருக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட தண்­டனை வழங்­காது, அவர் உணரும் வண்­ண­மான நடை­முறை தண்­டனை ஒன்று அவ­சியம் என அவர் கோரினார்.

ஞான­சார தேரர் சார்­பி­லான சட்­டத்­த­ரணி, நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­பதி மன்­னிப்பு அளிக்­கப்­பட்ட பின்னர் அவர் எந்த குற்­றங்­க­ளோடும் தொடர்­பு­ப­ட­வில்லை என்­பதை கருத்தில் கொண்டு இலகு தண்­டனை ஒன்­றினை எதிர்ப்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்டார்.

இந் நிலையில் மதகுருமாருக்கு சமூகத்தில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு உள்ள நிலையில் அதனை குற்றவாளி மீறியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே, குற்றவாளியான ஞானசார தேரருக்கு இரு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 2 வருடம் வீதம் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார். அத்தண்டனையானது தனித் தனியாக அனுபவிக்கப்படல் வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்தார். அதனை செலுத்த தவறினால் மேலும் இரு வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என நீதிபதி எச்சரித்தார்.

வெலிக்கடை சிறைக்கு :
இதனையடுத்து ஞானசார தேரர் தண்டனை கைதியாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் அங்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் நோய் நிலைமை ஒன்றுக்காக சிகிச்சை பெறுவதாக அறியமுடிகின்றது.

இதனிடையே நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரர் தன்னை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்த்திகே இதனை நிராகரித்துள்ளார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, ஞானசார தேரருக்கு பிணை கோருவதற்கு முன் வைக்கப்பட்ட விடயங்களில் விஷேட காரணிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவரது பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

இந் நிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோர ஞானசார தரப்பு தீர்மானித்துள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.