கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளோ அல்லது முஸ்லிம் எம்.பி.க்களோ காரணமல்ல

ஹரீஸ் சபையில் எடுத்துரைப்பு

0 350

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
வட­கி­ழக்கில் தமிழ் முஸ்லிம் இனம் அர­சியல் தீர்வை, அதி­கா­ர­ப்ப­கிர்வை வேண்டி நிற்­கின்­ற­போது கல்­முனை மாந­க­ரத்தில் வெறு­மனே ஒரு வட்­டா­ரத்தில் 3500 தமிழ் மக்கள் முஸ்­லிம்­க­ளோடு இணைந்து வாழ்­வ­தற்கு இட­ம­ளிக்­காத தமிழ் தலை­மைகள் எவ்­வாறு வட, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக அதி­கா­ரப்­ப­கிர்வை எட்ட இட­ம­ளிப்­பார்கள்? நாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். கல்­மு­னையில் தமிழ் மக்­க­ளுக்­கென ஒரு எல்­லை­யு­ட­னான பிர­தேச செய­லகம் அமைத்­துக் கொ­டுக்­கப்­பட வேண்டும் என நாம் வலி­யு­றுத்­து­கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரி­வித்தார்.

அத்­துடன் கல்­முனை பிர­தேச செய­லக பிரச்­சி­னைக்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­களோ முஸ்லிம் எம்.பி.க்களோ கார­ண­மல்ல. மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் தமிழ் தரப்­பினர் வேண்­டி­நிற்­கின்ற கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விடயம், காணி அதி­காரம் போன்­ற­வற்றை இடைக்­காலத் தீர்ப்பில் நிரா­க­ரித்­துள்­ள­ நி­லை­யிலும் வழக்கு இன்னும் முடி­யாத நிலை­யிலும் இந்த பிரச்­சி­னையில் அரசு எப்­படி தலை­யிட முடியும்? எனவும் கேள்வி எழுப்­பி­யினார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வங்கி (திருத்தச்) சட்­ட­மூலம் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் எம்.பி.க்கள் அம்­பாறை மாவட்­டத்தின் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விடயம் தொடர்­பாக பல கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தார்கள். கல்­முனை நக­ரத்தில் கல்­முனை பிர­தேச செய­லகம் ஒன்றும் அதே நேரம் கல்­முனை உப பிர­தேச செய­லகம் ஒன்றும் இயங்கி வரு­கின்­றது. இந்த உப பிர­தேச செய­லகம் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி பொது நிர்­வாக அமைச்சின் ஒரு கடி­தத்தின் ஊடாக உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால் அது சம்­பந்­த­மாக அந்த நேரத்தில் இருந்த அமைச்­ச­ரவை தீர்­மா­னமோ அல்­லது வர்த்­த­மானி பிர­க­ட­னமோ அந்த உப பிர­தேச செய­ல­கத்­திற்கு இருக்­க­வில்லை. அன்­றி­ருந்த யுத்த சூழ்­நிலை கார­ண­மாக அப்­போது கல்­முனை பிராந்­தி­யத்தில் இருந்த அன்­றைய ஆயுத இயக்­கங்­களின் உறுப்­பி­னர்கள் பல அச்­சு­றுத்­தல்­களை மேற்­கொண்டு பல­வந்­த­மான முறையில் இந்த உப பிர­தேச செய­லகம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இருந்தும் தமிழ், முஸ்லிம் ஒற்­றுமை கார­ண­மாக அன்­றி­ருந்த முஸ்லிம் அமைச்­ச­ரவை அமைச்சர்,அதே­போன்று பின்னர் வந்த அமைச்­சர்கள் எல்­லோரும் இதனை பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்க வேண்டும் என்­ப­தற்­காக தமிழ் மக்­க­ளுக்­கென வேறு எல்­லை­யு­ட­னான ஒரு பிர­தேச செய­ல­கமும் முஸ்லிம் மக்­க­ளுக்­கென ஒரு எல்­லை­யு­ட­னான பிர­தேச செய­ல­கமும் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கொள்கை ரீதி­யான உடன்­பாட்­டுக்கு வந்­தி­ருந்­தார்கள்.
குறிப்­பாக இந்த உப பிர­தேச செய­லகம் ஒரு நிலத்­தொ­டர்­பற்ற ரீதியில் இயங்கி வரு­வதன் கார­ண­மாக பூகோள ரீதி­யாக பல பிரச்­சி­னைகள், சர்ச்­சைகள் இருக்­கின்ற சூழ்நிலையில் தான் ஒரு எல்­லை­யி­னு­ட­னான இரு பிர­தேச செய­ல­கங்கள் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற இணக்­கப்­பாட்­டுக்கு சமூ­கத்­த­லை­வர்கள் முன் வந்­தி­ருந்த போதும் துர்ப்­பாக்­கி­ய­மாக அது நடை­பெ­ற­வில்லை.

இந்த சபையில் திங்­கட்­கி­ழமை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் சிறி­தரன் பேசு­கின்­ற­போது சில உண்­மை­களை கூறி­யி­ருந்தார். அதா­வது கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லக எல்­லைக்குள் 3500 முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். பள்­ளி­வா­சல்கள், அர­புக்­கல்­லூ­ரிகள் இருக்­கின்­றன, முஸ்லிம் பாட­சா­லைகள் இருக்­கின்­றன என கூறி­யி­ருந்தார்.

இந்த விட­யத்­தி­லி­ருந்தே இங்கு தெளி­வு­ப­டுத்­த­லா­மென நினைக்­கின்றேன். கல்­மு­னையில் இருக்­கின்ற தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒரே மொழியை பேசி 4.5 சதுர மைலுக்குள் அடர்த்­தி­யாக வாழ்­கின்ற நிலையில் யுத்­த ­கா­லத்தில் சுய­நல அர­சியல் சக்­தி­க­ளினால் மக்கள் பிரிக்­கப்­பட்டு கல்­மு­னையில் பொது­வான நிர்­வா­கத்தின் கீழ் வாழ முடி­யாது. இன ரீதி­யான ஒரு உப பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் பிரிந்து சென்­றார்கள்.

பிரிந்­தி­ருந்தும் கூட அந்த பிரிக்­கப்­பட்ட உப பிர­தேச செய­ல­கத்­திற்குள் 3500 முஸ்லிம் மக்­களை அவர்­களின் விருப்­ப­மில்­லாமல் நிர்­வாகம் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். அங்கு பள்ளிவாசல்கள், முஸ்லிம் பாட­சா­லைகள், முஸ்லிம் மக்­களின் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணிகள், பஸார்கள் உள்­ளன. இவை பலாத்­கா­ர­மான முறையில் உப பிர­தேச செய­ல­கத்­திற்குள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளதால் முஸ்லிம் மக்கள் பாரிய அநீ­திக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது தான் வர­லாறு.

இவ்­வாறு அநீ­திக்­குட்­ப­டுத்­தப்­பட்ட விடயம் சம்­பந்­த­மாக நாம் பேச்­சு­வார்த்தை ஊடாக தீர்வு காண விரும்பி 2017 ஆம் ஆண்டு அப்­போது பொது­நிர்­வாக அலு­வல்கள் அமைச்­ச­ராக இருந்த வஜிர அபே­வர்­த­னவின் வீட்டில் இரவு,பக­லாக சம்­பந்தன், மாவை சேனா­தி­ராஜா,சுமந்­திரன் போன்­றோ­ருடன் நாம் பேசி­யி­ருந்தோம்.

முஸ்லிம் மக்கள் இவ்­வாறு வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதே­போன்று எல்லை நிரந்­த­ர­மாக பிரிக்­கின்­ற­போது பிரிக்­கப்­ப­டு­கின்ற முஸ்லிம் பெரும்­பான்மை பிர­தேச செய­லக பிரிவில் 3500–4000 தமிழ் மக்கள் வாழ வேண்­டி­வரும். அவ்­வாறு வரு­கின்­ற­போது இந்த பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண­லா­மென்று நாம் எமது யோச­னையை முன்­வைத்தோம்.

எவ்­வாறு கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லக பிரிவில் 3500 முஸ்லிம் மக்கள் வாழ்­கின்­றார்­களோ அதே­போன்று முஸ்லிம் பெரும்­பான்மை பிர­தேச செய­லக பிரிவில் 3500- –4000 தமிழ் மக்கள் வாழ்­கின்­ற­போது இதற்­கொரு நிரந்­த­ர­மான தீர்வு குறிப்­பாக கல்­முனை வடக்கு தமிழ் மக்­க­ளுக்கு ஒரு பிர­தேச செய­லகம் மட்­டு­மல்­லாமல் ஒரு உள்­ளூ­ராட்சி சபையும் கிடைக்கும். எனவே இவ்­வா­றான ஒரு தீர்வை முன் வைப்போம் எனக்­கூ­றி­ய­போது ஒரு தமிழ் மகனும் கல்­முனை பிர­தேச செய­ல­கத்­திற்குள் வாழ முடி­யாது, இதற்கு நாங்கள் உடன்­பட முடி­யாது என்று கூறி இன ரீதி­யான ஒரு பிர­தேச செய­ல­கத்தை உரு­வாக்க வேண்டும் என்­ப­தா­கவே யுத்தம் முடிந்த பின்பும் இவர்­களின் சிந்­தனை இருக்­கின்­றது.

ஆனால் கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­ல­கத்­திற்குள் 3500 முஸ்லிம் மக்கள் வாழ முடியும். ஆனால் தமிழ் ­மக்கள் முஸ்லிம் பிர­தேச செய­ல­கத்­திற்குள் வாழ முடி­யாது என்று கூறு­வ­தனால் இன்று அங்கு இரு சமூ­கங்­க­ளையும் அசௌ­க­ரியம், மன­வே­த­னைக்­குள்­ளாக்­கு­கின்ற விட­யத்தை தமிழ் அர­சியல் தலை­மைகள் செய்து கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தியில் காரை­தீவு பிர­தேச செய­ல­கத்­தினுள் 40 வீத­மான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். நாவி­தன்­வெளி பிர­தேச செய­ல­கத்­தினுள் 40 வீத­மான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

எந்­த­வித பிரி­வினைக் கோஷமோ எந்­த­வித தமிழ், முஸ்லிம் முரண்­பாட்டு கோஷமோ இடம்­பெ­ற­வில்லை. ஆனால் தேர்தல் நெருங்­கு­கின்­ற­போது கல்­மு­னையில் இவ்­வா­றான விட­யங்­களை உரத்துப் பேசு­வதன் ஊடாக, போரா­டு­வதன் ஊடாக இதனை திசை­தி­ருப்ப, அர­சியல் ரீதி­யாக தமது இலா­பத்தை அடைய ஒற்­று­மை­யாக வாழும் கல்­முனை தமிழ்,முஸ்லிம் மக்­களை குழப்பும் முயற்சி இடம்­பெ­று­கி­றது.

இந்த பிரச்­சி­னைக்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­­களோ முஸ்லிம் எம்.பி.க்களோ கார­ண­மல்ல. அந்த மாவட்­டத்தை பிர­தி­ நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற கலை­ய­ரசன் எம்.பி. மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­தி­ருந்தார். அந்த வழக்கின் இடைக்­கா­லத்­தீர்ப்பு கடந்த நவம்பர் 24 ஆம் திகதி வழங்­கப்­பட்­டது. அதில் அவர்கள் வேண்டி நிற்­கின்ற பிர­தேச செய­லக விடயம்,காணி அதி­காரம் போன்­றவை நீதி­மன்ற இடைக்­காலத் தீர்ப்பில் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. வழக்கு இன்னும் முடி­ய­வில்லை. அவ்­வா­றான நிலையில் இந்த பிரச்­சி­னையில் அரசு எப்­படி தலை­யிட முடியும்?

வழக்கை தாக்கல் செய்­தவர் கலை­ய­ரசன் எம்.பி. அதில் வாதா­டி­யவர் சுமந்­திரன் எம்.பி. மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தீர்ப்பு வழங்கி அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில் எப்படி அரசு இதில் தலையிட முடியும் என்பதுதான் எமது கேள்வி. நாம் இன்றும் கூறுகின்றோம் நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. கல்முனையில் தமிழ் மக்களுக்கென ஒரு எல்லையுடனான பிரதேச செயலகம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.