மக்களின் பிரச்சினைகளை வைத்து வாழ்கிறீர்கள்

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது யூசுப் முப்தி சாடல்

0 182

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நான் நோன்பு பிடித்­துக்­கொண்டு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்குஒரு உண்­மையைக் கூறு­கிறேன். மக்­களின் மன­ங்க­ளி­லி­ருந்து நீங்கள் எப்­போதோ போய்­விட்­டீர்கள். அதுதான் யதார்த்தம். நீங்கள் சமூ­கத்­துக்­காக என்ன செய்­தி­ருக்­கி­றீர்கள்? என்ன கதைத்­தி­ருக்­கி­றீர்கள்? என ஸம்ஸம் பவுண்­டே­சனின் தலைவர் யூசுப் முப்தி கேள்­வி­யெ­ழுப்­பினார்.

நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு வின­வினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நீங்கள் முஸ்­லிம்­களின் எந்தப் பிரச்­சி­னையைத் தீர்த்­தி­ருக்­கி­றீர்கள். ஆனால் அந்தப் பிரச்­சி­னை­களை வைத்­துக்­கொண்டு வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றீர்கள் என்­பது தான் உண்மை. வாழப்­போ­கி­றீர்கள் என்­பதும் உண்மை. வரக்­கூ­டிய தேர்தல் காலங்­களில் இதைத்தான் நீங்கள் செய்­யப்­போ­கி­றீர்கள்.

முஸ்­லிம்­களின் எந்தப் பிரச்­சி­னைக்­கா­வது அர­சியல் ரீதி­யாக நாம் தீர்வு கண்­டி­ருக்­கி­றோமா என்றால் இல்லை. அப்­படி தீர்வு கண்­டி­ருந்தால் சொல்­லுங்கள். காணிப் பிரச்­சி­னை­யாக இருக்­கலாம். சட்டப் பிரச்­சி­னை­யாக இருக்­கலாம். முஸ்­லிம்­களின் விவாக, விவா­க­ரத்து பிரச்­சி­னை­யாக இருக்­கலாம். பாட­சா­லைகள், மத்­ர­ஸாக்­க­ளாக இருக்­கலாம். எதற்கு நாம் தீர்வு கண்­டி­ருக்­கிறோம்.முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளாக இருக்­கலாம். இப்­ப­டி­யாக ஏராளம் பிரச்­சி­னை­க­ளுக்­கு­ரி­யவை. நாட்­டுக்குத் தேவை எங்­க­ளுக்­காக குரல் கொடுக்­கக்­கூ­டிய அர­சி­யல்­வா­தி­களும், தேசத்­துக்­காக குரல் கொடுக்­கக்­கூ­டிய அர­சி­யல்­வா­தி­களுமே.

சமூ­கத்­துக்­காக அர­சியல் செய்ய வாருங்கள். நாட்டுக்காக அரசியல் செய்ய முன் வாருங்கள். கட்சி அரசியலூடாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களை வாழ விடமாட்டான் என்­றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.