இன, மத நல்லிணக்கமே நாட்டின் பலம்

இப்தார் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

0 171

எமது நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை, மதங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம், நட்­பு­றவு என்­றென்றும் பேணப்­பட வேண்டும். நாட்­டுக்கு இதுவே பக்க பலம். அந்­தந்த மதங்­க­ளுக்­கு­ரிய மரி­யாதை வழங்­கப்­பட வேண்டும். பன்­மு­கத்­தன்­மையை பாராட்ட வேண்டும். பன்­மு­கத்­தன்­மையில் உரு­வாகும் ஒவ்­வொரு கலாச்­சா­ரத்­திற்கும், கலா­சார விழு­மி­யங்­க­ளுக்கும் உரிய மரி­யா­தையும் கௌர­வமும் அளிக்­கப்­பட வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் ஏற்­பாடு செய்த இப்தார் நிகழ்வு கொழும்பு வெள்­ள­வத்தை மெரைன் கிறேண்ட் வர­வேற்பு மண்­ட­பத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம் பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், மதங்­க­ளுக்கும் இனங்­க­ளுக்கும் இடை­யி­லான அடை­யா­ளத்தை பாது­காக்க வேண்டும். மத சுதந்­தி­ரத்­திற்­கான உரி­மையைப் பாது­காக்க வேண்டும். சுதந்­திர நாட்டில் நாங்­களும் நீங்­களும் நம்பும்,பின்­பற்றும் மதத்தைப் பாது­காத்துக் கொண்டு முன்­னோக்கிச் செல்ல ஒன்­றி­ணை­யுங்கள்.

இஸ்­லா­மிய மத நடை­மு­றை­க­ளின்­படி நோன்பு நோற்­பதில் அனை­வ­ருக்­கு­மி­டை­யே­யான பரஸ்­பர நட்பு, சகோ­த­ரத்­துவம், ஒற்­றுமை மற்றும் இஸ்­லா­மிய சமயக் கோட்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உன்­னத குணங்கள் நிறை­வேறும் கால­கட்­ட­மாக இது அமை­வதால்,ஆன்­மீக ரீதி­யாக பக்­கு­வப்­பட்டு இறை திருப்தி சக­ல­ருக்கும் கிட்ட வேண்டும் என தான் நேர்­மனம் கொண்டு பிரார்த்­திக்­கிறேன் என்றார்.

இந்­நி­கழ்வில் வெளி­நாட்டு தூது­வர்கள், ஆளும் எதிர்க் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், தொழில் அதிபர்கள், புத்திஜீவிகள்,துறைசார் நிபுணர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.