காஸா சிறுவர் நிதியத்திற்கு முதற்கட்டமாக 1 மில்லியன் டொலர் கையளிப்பு மேலும் 20 மில்லியன் ரூபாய் நிதி சேகரிப்பு

ஏப்ரல் 30 வரை நன்கொடை வழங்கலாம்

0 159

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­தின் மூலம் முதற்­கட்­ட­மாக ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பலஸ்­தீன அர­சாங்­கத்­திற்கு நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்­டது.

காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்தின் ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நன்­கொ­டையை ஐக்­கிய நாடுகள் சபையின் உத்­தி­யோ­க­பூர்வ முகவர் நிறு­வ­னத்தின் ஊடாக பலஸ்­தீன அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை காலை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.

இதற்­கான காசோலை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லாஹ் ஸைதிடம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­பட்­டது.

காசோலை கைய­ளிக்கும் நிகழ்வில் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் அருணி விஜே­வர்­தன மற்றும் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூத­ரக சிரேஷ்ட அதி­கா­ரிகள் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர்.

அத்­துடன், “காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு” (Children of Gaza Fund) பங்­க­ளிக்­கு­மாறு நன்­கொ­டை­யா­ளர்­க­ளிடம் ஜனா­தி­பதி அலு­வ­லகம் விடுத்த கோரிக்­கைக்கு அமைய, 20 மில்­லியன் ரூபா­வுக்கும் அதி­க­மான நிதி கிடைத்­துள்­ள­துடன், அந்த நிதி எதிர்­வரும் நாட்­களில் பலஸ்­தீன அர­சாங்­கத்­திடம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

நன்­கொ­டை­யா­ளர்­க­ளுக்கு எதிர்­வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மாத்­தி­ரமே இந்த நிதி­யத்­திற்கு பங்­க­ளிக்க வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்குப் பங்­க­ளிக்க விரும்புவோர் தமது நன்கொடைகளை இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட முடியும். அதற்கான பற்றுச் சீட்டை 077-9730396 எனும் எண்ணுக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரியுள்ளது.

இவ்­வ­ருடம் இப்தார் நிகழ்­வு­களை நடாத்­து­வ­தற்­காக அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்­களால் ஒதுக்­கப்­பட்ட நிதியை இந்த நிதி­யத்­துக்கு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்க, பல்­வேறு திணைக்­க­ளங்­களும் தமது நிதியை காஸா சிறுவர் நிதி­யத்­தி­ற்­காக வழங்­கி­ய­ி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.