கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்­ப­டும் விடயத்தில் புத்திஜீவிகளும் உலமாக்களும் கரிசனை செலுத்த வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மைத்திரி நகைச்சுவையாக எடுப்பது பாரதூரமானது என்கிறார் இம்ரான்

0 219

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் அதி­கா­ரிகள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­னது எதிர்­கா­லத்தில் ஏனைய அரச பத­வி­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம். எனவே, இது விட­ய­மாக முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் உல­மாக்­களும் கூடுதல் கரி­சனை செலுத்த வேண்டும் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் உப செய­லா­ள­ரு­மான இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.

அத்­துடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் விவ­கா­ரத்தை முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நகைச்­சு­வை­யாக எடுத்­துக்­கொள்­கிறார். குறித்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலே நாட்டின் இன்­றைய நிலைக்கு கார­ண­ம் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.
ஆயுர்­வேத ஒழுங்­கு­விதி சட்டக் கோவை தொடர்பில் கடந்த திங்­க­ளன்று இடம்­பெற்ற பாரா­ள­ுமன்ற விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

ஆயுர்­வேத வைத்­தி­ய­சாலை
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மூன்று மாவட்ட ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லைகள் காணப்­ப­டு­கின்­றன. அவை, கப்­பல்­துறை வைத்­தி­ய­சாலை, நிலா­வெளி வைத்­தி­ய­சாலை, கிண்­ணியா நடுத்தீவு வைத்­தி­ய­சாலை என்­ப­ன­வாகும். நிலா­வெளி மற்றும் கப்­பல்­துறை வைத்­தி­ய­சா­லை­களில் போது­மான அளவு ஆளனி மத்­திய அர­சினால் வழங்­கப்­பட்டு இயங்­கு­கின்­றன.

ஆனால், கிண்­ணியா வைத்­தி­ய­சாலை 2014 ஆம் ஆண்டு கிழக்­கு­மா­காண சுகா­தார அமைச்­சினால் மாவட்­ட­ வைத்­தி­ய­சா­லை­யாக தர­மு­யர்த்­தப்­பட்டு இயங்­கு­கின்­ற­போ­திலும், மத்­திய அர­சினால் இது­வரை ஆளணி அனு­மதி வழங்­கப்­ப­டா­துள்­ளது. இதனால் இங்கு பாரிய ஆளணி பற்­றாக்­குறை நில­வு­கி­றது. குறிப்­பாக ஒரு மாவட்ட ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லை­யிலே, 20 கட்­டில்­க­ளுடன் உள்­ளக நோயாளர் சிகிச்சை பிரிவு இருக்க வேண்டும். எனினும், இங்கு ஆண்­க­ளுக்கும், பெண்­க­ளுக்­கு­மாக தலா 5 கட்­டில்­க­ளு­டன்தான் உள்­ளக சிகிச்சை பிரிவு காணப்­ப­டு­கி­றது.

எனவே, அமைச்சர் இது­வி­ட­யத்தை கருத்­திற்­கொண்டு கிண்­ணியா நடுத்­தீவு வைத்­தி­ய­சா­லைக்­கான ஆளணி வச­தி­யினை விரை­வாக பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அத்­துடன், இங்கு நில­வு­கின்ற குறை­பா­டு­களை நிவர்த்தி செய்வ­தற்­கான நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் நான் கோரிக்கை விடுக்­கிறேன்.

கிழக்கு அதி­கா­ரிகள் புறக்­க­ணிப்பு
இன்று கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கும் முகம்­கொ­டுக்­கின்­றனர். குறிப்­பாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரா­ன­தொரு விரே­ாதப்­போக்கு தொடர்­கின்­றதா? என்ற அச்சம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. கிழக்கு மாகா­ணத்தில் அமைச்­சு­களின் செய­லா­ளர்கள் பதவி நிய­மன விட­யத்தில் முஸ்லிம் அதி­கா­ரிகள் புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

கிழக்கு மாகாண அமைச்­சு­களின் செய­லாளர் பத­வி­க­ளுக்கு எந்­த­வொரு முஸ்லிம் அதி­கா­ரி­களும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என கடந்த 2023, ஜூன் மாதத்தில் இந்த சபையில் நான் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன். எனினும் இது விட­ய­மாக இது வரை கவனம் செலுத்­தப்­ப­டாமல் இருக்­கி­றது. இந்த குறையை நிவர்த்தி செய்­வ­தற்கு எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டாமல் இருக்­கி­றது.

கிழக்கு மாகா­ணத்தில் இருக்­கின்ற ஐந்து அமைச்­சு­களில் கடந்த காலங்­களில் இரண்டு தமிழ் செய­லா­ளர்­களும் இரண்டு முஸ்லிம் செய­லா­ளர்­களும் ஒரு சிங்­கள செய­லா­ளரும் பணி­யாற்றி வந்­தி­ருக்­கின்­றனர். இந்த மாகா­ணத்­திலே, இன சம­நி­லையை கருத்­திற்­கொண்டு இந்த நடை­முறை பின்­பற்­றப்­பட்­டு­வந்­தது.

ஆனால், தற்­போது கிழக்கு மாகா­ணத்தின் எந்­த­வொரு அமைச்­சிலும் முஸ்லிம் செய­லா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­டா­மை­யா­னது ஒரு கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். முத­ல­மைச்சின் அமைச்சு, சுகா­தார அமைச்சு, வீதி அபி­வி­ருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்­சு­க­ளிலும் தமிழ் செய­லா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். கல்வி அமைச்­சிலும் விவ­சாய அமைச்சு ஆகிய இரண்­டிலும் சிங்­கள செய­லா­ளர்கள் கட­மை­பு­ரி­கின்­றனர். இது இந்த மாகா­ணத்தில் வாழும் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் புறக்­க­ணித்து கொச்­சைப்­ப­டுத்தும் செயற்­பா­டா­கவே நான் பார்க்­கிறேன்.

அர­சியல் தலை­மை­களும் இந்த விட­யத்தை கண்­டு­கொள்­ளாமல் இருப்­ப­தனால் கிழக்கு மாகா­ணத்­திலே சமீ­ப­கா­ல­மாக காட்­டப்­படும் முஸ்லிம் விரோ­தப்­போக்­காக இதனை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்த நிலைமை நீடிக்­கு­மாயின் கிழக்கு மாகா­ணத்தில் எதிர்­கா­லத்தில் முஸ்லிம் அதி­கா­ரிகள் எவரும் பணி­யாற்ற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்சம் காணப்­ப­டு­கின்­றது.

ஆகவே, இந்த ரணில் – ராஜ­பக்ச ஆட்சியில் இன்னும் முஸ்லிம் விரோ­தப்­போக்கு நீடிப்­ப­தையே காட்­டு­கி­றது. எனவே, கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் விழித்­துக்­கொள்ள வேண்­டிய அவ­சர நிலை தற்­போது ஏற்­பட்­டுள்­ள­து.
முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­மைகள், முஸ்லிம் உரி­மைகள் தொடர்பில் பேசக்­கூ­டி­ய­வர்கள் இது விட­ய­மாக கரி­சனை காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. எனவே, சமூக விட­யத்தில் அக்­கறை செலுத்தும் சமூக செயற்­பாட்­டா­ளர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் உல­மாக்­களும் இது விட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்­டுகோள் விடுக்­கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல்
விவ­காரம்
நேற்று (கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை) ஈஸ்டர் தினம் என்­பதால் 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­குதல் பற்றி இன்று அதி­க­மாக பேசப்­ப­டு­கி­றது. இந்த பாரா­ளு­மன்­றத்­திலும் இது சம்­பந்­த­மாக பல்­வேறு விடயங்­களை பேசி­யி­ருக்­கிறோம். ஏன் இம்­முறை அர­சாங்­கமும் ஈஸ்டர் தின தாக்­கு­தலை மையப்­ப­டுத்தி தேர்தல் பரப்­பு­ரையை மேற்­கொண்டே ஆட்­சிக்கு வந்­தனர். ஆட்­சிக்கு வந்­த­பின்னர் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­களை கைது­செய்வோம், இதற்கு நீதியை பெற்­றுக்­கொ­டுப்போம், வெளி­நா­டு­களின் உத­வி­யுடன் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுப்போம் என்றும் சொன்­னார்கள். ஆனால் எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால், கடந்த ஓரிரு வாரங்­க­ளாக இவ்­வி­வ­காரம் மீண்டும் பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக தேர்தல் காலத்தின் பிர­சா­ரத்­துக்­காக இவ்­வி­ட­யத்தை பேசி பின்னர் ஏமாற்றும் செயற்­பா­டா­கவே மாறி­யி­ருக்­கி­றது.

நாடு தற்­போது மோச­மான நிலையை அடை­வ­தற்கு இந்த ஈஸ்டர் தின தாக்­கு­தலே பிர­தான கார­ண­மாகும். அத்­தோடு, ஆட்சி மாற்­றத்­திற்கும் அதுவே கார­ணி­யாக அமைந்­தது. இந்த பயங்­க­ர­மான தாக்­குதல் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நகைச்­சு­வை­யாக அல்­லது வேடிக்­கை­மிக்க விட­ய­மாக இன்று மாறி­யி­ருக்­கி­றது. அவர்கள் இதனை கைவிட வேண்டும். குறிப்­பாக ஈஸ்டர் தின தாக்­கு­தலால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்பில் கரி­சனை செலுத்த வேண்டும். இந்த தாக்­கு­தலால் இன ரீதி­யி­லான முரண்­பா­டுகள் தோற்­று­விக்­கப்­பட்­டன. எனவே, இது­வி­ட­ய­மாக நீதியை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய பொறுப்பு அனை­வ­ருக்கும் இருக்­கி­றது.

ஈஸ்டர் தின தாக்­கு­தலால் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தா­ரு­டைய நிலை, அதில் கால்­களை இழந்த, காய­ம­டைந்­த­வர்­களின் நிலை­மைகள் குறித்தும் ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கின்­றன. அவர்­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்­டி­ய­வர்கள் யார்?

இந்த பயங்­கர தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் சமூகம் எவ்­வாறு பார்க்­கப்­பட்­டது, நடத்­தப்­பட்­டது என்­ப­தையும் நாங்கள் மறந்­து­விட முடி­யாது. இன வன்­மு­றைக்­கான ஒரு கார­ணி­யாக இருந்த இந்த தாக்­கு­தலை வெறும் வேடிக்­கை­யாக பார்த்து கடந்து செல்ல முடி­யாது. இந்த செயற்­பாடு மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

முன்னாள் ஜனா­தி­ப­தி­ மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்த தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி யார் என்­பது எனக்கு தெரியும் என்று சொல்­கிறார். அவர் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து அதனை தெளி­வாக சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் ஆட்­சியில் இருந்­த­போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. நல்லாட்சி அரசாங்கம் வீழ்த்தப்பட்டமைக்கு இந்த ஈஸ்டர் தாக்குதலே பிரதான காரணமாகும். அப்போது, எதுவும் பேசாமல், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்துவிட்டு, இன்று தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என எனக்குத் தெரியும் என்று கூறுவதானது இந்த நாட்டுக்கு செய்கின்ற துரோகமாக பார்க்கிறோம்.

இந்த விடயம் ஒரு இனத்தின் பிரச்­சி­னை­யல்ல, அல்­லது இரு இனங்­களின் பிரச்­சி­னை­யல்ல, மாறாக முழு நாட்­டி­னதும் பிரச்­சி­னை­யாகும். ஏனென்றால், குறித்­த­ தாக்­கு­தலின் பின்னர் நாட்­டி­லுள்ள இனங்­க­ளுக்­கி­டையே குரோ­தங்கள் மேலும் தீவி­ர­ம­டைந்­ததை அவ­தா­னிக்­கிறோம்.

எனவே, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விவ­கா­ரத்தை ஒரு நகைச்­சு­வை­யாக எடுத்­துக்­கொள்­ளாது, பிரச்­சி­னையின் ஆழத்தை புரிந்­து­கொண்டு பொறுப்பு கூற வேண்டும். விட­யத்தை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.