மைத்திரி கிளப்பியுள்ள புதிய சர்ச்சை; உண்மை கண்டறியப்படுமா?

0 199

ஏ.ஆர்.ஏ.பரீல்

இலங்­கையின் மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் பழி சுமத்­தப்­பட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்­தே­றிய உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­ட­வர்கள் யார் என்­பது இன்னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது.

அர­சாங்கம் நிய­மித்த உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு விசா­ர­ணையை நிறைவு செய்து 70 ஆயிரம் பக்­கங்­களில் அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டுள்­ளது. இந்த 70 ஆயிரம் பக்­கங்­களில் 1500 பக்­கங்­களை அர­சாங்கம் எமக்கு வழங்­க­வில்லை. அவற்றை அரசு சூட்­சு­ம­மாக தன்­னி­டமே வைத்துக் கொண்­டுள்­ளது என்ற குற்­றச்­சாட்­டினை அண்­மையில் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­தி­ருந்தார்.

மேலும் சஹ்ரான் குழு­வி­ன­ருடன் தொடர்­பி­லி­ருந்­தார்கள் எனக் குற்றம் சுமத்தி 23 முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த 23 பேரும் இத்­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் சாரா ஜெஸ்மின் ஆகிய முக்­கி­ய­மான சாட்­சி­களால் வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்­க­ளையே அர­சாங்கம் எம்­மிடம் கைய­ளிக்­க­வில்லை. இது பாரிய சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும். சஹ்ரான் ஹாசிமின் குழு­வி­ன­ருடன் நெருங்­கிய தொடர்­பி­லி­ருந்­தவர் சாரா ஜெஸ்மின். அவ­ரது சாட்­சி­யங்கள் எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு புதிய தக­வல்கள் அடிக்­கடி வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடாத்­தப்­பட்ட வேளை ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த முன்னாள் ஜனா­தி­பதி மிகவும் முக்­கி­ய­மாக தக­வ­லொன்­றினை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்த சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பதை இலங்கை மாத்­தி­ர­மல்ல சர்­வ­தே­சமும் அறிந்து கொள்ள காத்­தி­ருக்கும் நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்த திடீர் அறி­விப்பு பெரும் பர­ப­ரப்பை தோற்­று­வித்­துள்­ள­து.

முன்னாள் ஜனா­தி­பதி
மைத்­தி­ரி­பால சிறி­சேன
‘உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை பின்­நின்று நடாத்­தி­ய­வர்­களை உண்­மை­யாக நான் அறிவேன். நீதி­மன்றம் என்­னிடம் கோரிக்கை விடுத்தால் அல்­லது உத்­த­ர­வொன்­றினைப் பிறப்­பித்தால் அது தொடர்பில் நான் வாக்­கு­மூலம் வழங்கத் தயா­ராக இருக்­கிறேன்’ என்று முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கிறார்.

கடந்­த­ வாரம் கண்­டியில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊட­கங்­க­ளுக்கு இத்­த­க­வலை வெளி­யிட்­டி­ருக்­கிறார். அத்­தோடு நான் வழங்கும் தக­வல்­களின் இர­க­சி­யத்­தன்­மையைப் பாது­காப்­பது நீதி­வான்­களின் பொறுப்­பாகும். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பான வழக்கில் எனது ஆட்­சிக்­கா­லத்தில் கைது செய்­யப்­பட்ட தீவி­ர­வா­தி­களே ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்தத் தாக்­கு­தலை பின்­நின்று யார் நடத்­தி­னார்கள் என்­பதை இது­வரை எவரும் தெரி­விக்­க­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக கடந்த மூன்று வாரங்­க­ளுக்கு முன்பு எனக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டை­யிலே நான் எனது கருத்­தினை வெளி­யிட்டேன். அத்­தோடு இது தொடர்பில் நான் நீதி­மன்றில் எனது வாக்­கு­மூ­லத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கிறேன். நீதி­மன்றில் நான் இர­க­சிய வாக்­கு­மூலம் அளிக்க விரும்­பு­கிறேன். பகி­ரங்க சாட்­சியம் வழங்­கினால் தெளி­வாக எனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும். அத்­தோடு எனது குடும்ப உறுப்­பி­னர்­களின் உயிர்கள் கூட அழிக்­கப்­ப­டலாம். நான் அர­சியல் பின்­ன­ணியை நோக்­காகக் கொண்டோ அர­சியல் சுய­லாபம் கரு­தியோ இந்த வாக்­கு­மூ­லத்தை அளிக்கத் தயா­ரா­க­வில்லை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் நான் குறிப்­பிட்ட கருத்து தற்­போது பிர­தான பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. என்னைத் தேசத் துரோ­கி­யென்றும் என்னைக் கைது செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்­பினர் கடு­மை­யாக விமர்­சிக்­கி­றார்கள். இக்­குண்டுத் தாக்­குதல் தொடர்பில் நான் ஆரம்­பத்தில் அறிந்­தி­ருக்­க­வில்லை. இத்­தாக்­குதல் தொடர்பில் நான் பாரிய நெருக்­க­டி­களை அர­சியல் ரீதி­யிலும், தனிப்­பட்ட ரீதி­யிலும் எதிர்­கொண்டேன். தாக்­குதல் நடத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு அறிந்­தி­ருந்தால் நிச்­சயம் தடுத்­தி­ருப்பேன். குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் பாது­காப்புத் தரப்­பினர் எனக்கு அறி­விக்­க­வில்லை என்­பது உயர் நீதி­மன்ற தீர்ப்பில் தெளி­வாகக் குறிப்பி­டப்பட்­டுள்­ளது.

அர­சியல் ரீதியில் என்னைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே குண்­டுத்­தாக்­குதல் பிற்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை முழு­மை­யாக செயற்­ப­டுத்­து­மாறு தொடர்ந்து வலி­யு­றுத்­து­கிறேன். இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யது யார்? பிர­தான சூத்­தி­ர­தாரி யார் என்­பதை நான் அறிவேன் என்றும் கூறினார்.

காத்­தி­ருக்க வேண்டாம்
‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் நீதி­மன்றம் அழைப்பு விடுக்கும் வரை மைத்­தி­ரி­பால சிறி­சேன காத்­தி­ருக்­காமல் உண்­மையை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும். உண்­மையை மறைப்­பது ஒரு வகையில் குற்­ற­மாகும்’ என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­திருந்­தார்.கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

மேலும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்து பார­தூ­ர­மா­னது. குண்டுத் தாக்­குதல் தொடர்பில் அவ­ருக்கு ஏதும் தெரிந்­தி­ருந்தால் அதனை அவர் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அழுத்­தங்கள் அதி­க­ரிக்கும் வரை காத்­தி­ருக்­காமல் அவர் உடனே தனக்குக் கிடைத்­துள்ள தக­வல்­களை நீதி­மன்றம் முன்­வைக்க வேண்டும். ஏனென்றால் அவ­ரது ஆட்­சிக்­கா­லத்­திலே குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. இதற்குப் பொறுப்புக் கூற வேண்­டி­யவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான்
‘முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கைது செய்ய வேண்டும். கைது செய்து தடுத்து வைத்து விசா­ரணை செய்ய வேண்டும். அர­சாங்கம் நீதி­யா­னதும், நேர்­மை­யா­ன­து­மான பக்­க­சார்­பற்ற விசா­ர­ணையை நடத்த வேண்டும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பிரதிப் பொதுச் செய­லா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.
கொழும்பில், எதிர்க்­கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், ‘உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­குதல் கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி மக்கள் கொல்­லப்­பட்­டார்கள். 500க்கும் மேற்­பட்ட மக்கள் காய­ம­டைந்­தார்கள். பலர் ஊன­முற்­றனர். பல­கோ­டிக்­க­ணக்­கான சொத்­துகள் சேத­ம­டைந்­தன.

இந்­நி­லையில், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஆட்­சி­பீ­ட­மே­றிய முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் யார்? மற்றும் சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பதைக் கண்­ட­றிந்து அனை­வ­ரையும் கைது செய்து சட்­டத்­தின்முன் நிறுத்­து­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால் குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இதே­வேளை ‘அர­க­லய’ போராட்­டத்­துக்குப் பின்பு பத­வி­யேற்ற ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இத்­தாக்­குதல் தொடர்­பாக விசா­ரிக்க ஸ்கொட்­லாந்து பொலி­ஸாரை நிய­மிக்­க­வுள்­ள­தாக உறு­தி­ய­ளித்தார். என்­றாலும் அது வெறும் உறுதி மொழி மாத்­தி­ரமே. இது தொடர்பில் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் இப்­போது புதிய கதை கூறப்­ப­டு­கி­றது. இத்­தாக்­கு­தலை நடத்­தி­யது யார் என்ற உண்­மையை இது­வரை எவரும் கூறாத நிலையில் தாக்­கு­தலை நடத்­தி­யது யார் என்­பது தனக்குத் தெரியும் என மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார். நீதி­மன்றம் தனக்கு உத்­த­ர­விட்டால் விப­ரங்­களை வெளிப்­ப­டுத்­துவேன் என்றும் அவர் பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ளார்.

இது பார­தூ­ர­மான விட­ய­மாகும். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும், பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் இருந்த போதே உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. அத்­தோடு அவ­ருக்கு எதி­ராக இது தொடர்பில் பல வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­டன. ஜனா­தி­ப­தி­யாக பத­வியில் இருந்த காலப்­ப­கு­தியில் அவர் தனது பொறுப்­பினை சரி­வர நிறை­வேற்­ற­வில்லை. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்­கு­மாறும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. மைத்­தி­ரி­பால சிறி­சேன இதற்கு முன்னர் நீதி­மன்­றத்­திலும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­விலும் அவர் பல உண்­மை­களை மறைத்­துள்­ள­துடன் நாட்டு மக்­க­ளுக்கு பாரிய துரோ­க­மி­ழைத்­துள்ளார்.

இந்த தாக்­குதல் நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி மக்­களின் உயிர்­களைப் பலி­யெ­டுத்­தது. இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் பாதிக்­கப்­பட்­டது. மதங்­க­ளுக்­கி­டையில் குரோதம் விதைக்­கப்­பட்­டது. இவை­ய­னைத்தும் பாரிய குற்­ற­மாகும். எனவே மைத்­திரி உட­ன­டி­யாகக் கைது­செய்யப் பட வேண்டும். இவ­ருக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தின் ஊடா­கவும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ளார்.

சமூக அமை­திக்­கான மத்­திய நிலையம்
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்து விட­யங்­க­ளையும் அறிந்­துள்ளார். இதனை அவரே கூறி­யுள்ளார். குற்றம் ஒன்று தொடர்பில் உண்­மையை அறிந்­தி­ருந்து அதனை மறைப்­பது பாரிய குற்­ற­மாகும். குண்டுத் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தாரி யார் என்­பதை கண்டுபிடிப்­ப­தற்கு அர­சுக்கு நல்­லவோர் சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

இச்­சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்டால் நாட்­டுக்கு இழைக்கும் பாரிய குற்­ற­மாகும்’ என சமூக மற்றும் அமை­திக்­கான மத்­திய நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் அருட் தந்தை ரொஹான் டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில் மைத்­தி­ரி­பால சிறி­சேன இத்­தாக்­குதல் தொடர்­பான விப­ரங்­களை அறிந்­தி­ருந்தார். ஆனால் இவ்­வி­ப­ரங்­களை ஏதோ ஒரு கார­ணத்­தினால் வெளிப்­ப­டுத்­த­வில்லை என்­பது தற்­போது உறு­தி­யா­கி­யுள்­ளது.

தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு முது­கெ­லும்பு இருந்தால் உட­ன­டி­யாக செயற்­பட வேண்டும். இத்­தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரியை இனங்­காண சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளது. உட­ன­டி­யாக உண்மை நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்றார்.

மைத்­தி­ரி­பால வாக்­கு­மூலம்
முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்­டுள்ள உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் அவ­ரிடம் சுமார் 5 ½ மணித்­தி­யா­லங்கள் விசா­ரணை செய்து வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்­தது.

பொலிஸ்மா அதிபர் விடுத்­தி­ருந்த பணிப்­பு­ரைக்கு அமை­யவே அவர் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்தார். குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் அவர் காலை 10.30 மணி­ முதல் பிற்­பகல் 3.50 மணி­வரை வாக்­கு­மூ­ல­ம­ளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான தனக்குத் தெரிந்த உண்­மையை கடந்த 5 வருட கால­மாக மறைத்து வைத்­தி­ருந்­தமை பாரிய குற்­ற­மாகும் எனவும் அவர் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் ஐக்­கிய மக்கள் சக்தி உட்­பட பிர­தான எதிர்க்­கட்­சிகள், கொழும்பு மறை­மா­வட்ட பேராயர் இல்லம், சமூக மற்றும் அமை­திக்­கான மத்­திய நிலையம் உட்­பட பல சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்தி வந்­த­துடன் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திலும் முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ
தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த சம்­ப­வங்கள் தொடர்பில் தக­வல்கள் தெரிந்­தி­ருந்தும் அவற்றை வெளிப்­ப­டுத்­தாமல் மறைப்­பது சட்­ட­ரீ­தி­யாகக் குற்­ற­மாகும். அதனால் அத் தக­வல்­களை மறைக்­காது அவர் வெளிப்­ப­டுத்த வேண்டும் என நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ வேண்­டுகோள் விடுத்துள்ளார்.

மைத்திரிபால தான் அண்மையில் அறிந்து கொண்ட தகவல்களை பொலிஸ் அல்லது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமே தெரிவிக்க வேண்டும். நீதிமன்றில் தெரிவிப்பதற்கான முறைமை எமது நாட்டில் இல்லை. இத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் கத்தோலிக்க சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கைது செய்யுங்கள்

‘நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும். அவர் 7 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிந்துள்ளார். அவரை நாம் நன்கு அறிவோம். உண்மைகளை ஒருபோதும் அவர் பகிரங்கப்படுத்தமாட்டார்’ என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவரை உடன் கைது செய்ய முடியாது. அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்ததன் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என பொலிஸ் மாஅதிபர் கூறுவது தவறு. 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5 ஆவது உறுப்புரையில் ‘பயங்கரவாத செயற்பாடு தொடர்பான தகவல் அல்லது அது தொடர்பான தகவல்களை அறிந்த நபர் அதனை பொலிஸுக்கு அறிவிக்காமல் இருப்பது 7 வருட கடூழிய சிறைத் தண்டனைக்குரியதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் நீதிமன்றுக்கு
மைத்திரிபால சிறிசேன குற்றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­துக்கு வழங்­கிய வாக்­கு­மூலம் மற்றும் விசா­ர­ணையின் முன்­னேற்றம் தொடர்­பான அறிக்கை நீதி­மன்­றுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத்­தோடு மைத்­தி­ரியின் வாக்­கு­மூலம் தொடர்­பான விசா­ர­ணையின் அறிக்கை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட அதி­கா­ரி­க­ளினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இவ்­வாறு பல்­வேறு தரப்­பி­னரும் வலி­யு­றுத்­தி­யது போன்று மைத்­தி­ரியின் புதிய அறி­விப்பு தொடர்பில் உண்மை கண்ட­றி­யப்­பட்­டு முஸ்லிம் சமூ­கத்தின் மீதான சந்­தேகம் துடைத்­தெ­றி­யப்­பட வேண்­டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.