சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க இராஜதந்திரி இராஜனாமா

0 636

சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான உலகளாவிய கூட்டமைப்பின் அமெரிக்கத் தூதுவரான பிரெட் மெக்குர்க் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தனது பதவியினை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த மறுநாள்,  பிரெட் மெக்குர்க் தனது இராஜினாமாக் கடிதத்தினை இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் கையளித்ததாக அசோசியேட்டட் பிரஸ் மற்றும் சீ.பீ.எஸ். ஆகியன தெரிவித்துள்ளன.

ஐ.எஸ். அமைப்பு இன்னும் செயற்பாட்டில் இருக்கிறது, அவ்வமைப்பு இன்னும் தோற்கடிக்கப்படவில்லை என ட்ரம்ப் தன்னிடம் தெரிவித்திருந்ததாக பிரெட் மெக்குர்க் தனது இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக விடயத்தோடு தொடர்புடைய அதிகாரியொருவரினால் அசோசியேட்டட் பிரஸிற்கு விபரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காலம் வருவதற்கு முன்னர் அமொக்கப் படையினை விலக்கிக் கொள்வதென்பது ஐ.எஸ். அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு வழிவகுக்குமென அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் கூட்டமொன்று அமெரிக்காவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் பெப்ரவரி மாதமே பிரெட் மெக்குர்க் தனது பதவியினை இராஜினாமாச் செய்வதற்கு உத்தேசித்திருந்தபோதிலும், சிரியா மற்றும் மட்டிஸ் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்வதென அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி செயற்படும் வண்ணம் இராஜினாமா செய்துள்ளாரென அசோசியேட்டட் பிரஸிற்கு அந்த அதிகாரி தெரிவித்தார். வெள்ளை மாளிகையோ அல்லது இராஜாங்கத் திணைக்களமோ இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.