ரமழான் மாத விசேட விடுமுறையை கட்டாயமாக விண்ணப்பித்தே பெற வேண்டுமென நிர்ப்பந்தம்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் சுட்டிக்காட்டு

0 186

(எஸ்.ஏ.பறூஸ்)
அர­சாங்­கத்­தினால் முஸ்லிம் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள விசேட ரமழான் விடு­மு­றையை விண்­ணப்­பித்­துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலு­வ­ல­கங்­களில் நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வ­தாக திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நேற்­று­முன்­தினம் கிண்­ணி­யாவில் இடம்­பெற்ற முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடலின் பின்னர் அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இம்ரான் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
முஸ்லிம் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு தொழு­கை­யிலும் மத வழி­பா­டு­க­ளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்­கு­களைச் செய்­யு­மாறு நீங்கள் கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கி­றீர்கள் என 04/2024 ஆம் இலக்க பொது நிர்­வாக சுற்­ற­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சுற்­ற­றிக்கை அமைச்சுச் செய­லா­ளர்கள், மாகாண பிர­தம செய­லா­ளர்கள். திணைக்­களத் தலை­வர்கள், அரச கூட்­டுத்­தா­பன, நிய­திச்­சட்ட சபைத் தலை­வர்­களை விழித்து வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

எனினும், கிழக்கு மாகாண சபையின் சில அலு­வ­ல­கங்­களில் இந்த விசேட விடு­மு­றையை பெற விரும்­பு­ப­வர்கள் அதற்­காக விண்­ணப்­பித்து முன் அனு­ம­தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வ­தாக எனது கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இது சுற்­ற­றிக்­கைக்கு முர­ணான செயற்­பா­டாகும். அரசு முஸ்லிம் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு இந்த ரமழான் காலத்தில் கொடுத்­துள்ள சலு­கை­களை தடை செய்­கின்ற ஒரு செயற்­பா­டாகும். சில அதி­கா­ரி­களின் குரோத எண்ணம் இதன் மூலம் தெளி­வாகப் புலப்­ப­டு­கின்­றது.

முஸ்லிம் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அவர்கள் தொழு­கை­யிலும், மத­வ­ழி­பா­டு­க­ளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்­கு­களைச் செய்­யு­மாறு சுற்­ற­றிக்­கையில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே, ஒருவர் முஸ்லிம் உத்­தி­யோ­கத்தர் என தெரிந்தால் அவ­ருக்­கான இந்த வச­தியை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்­டி­யது சம்பந்தப்பட்ட அலுவலகப் பிரதானியின் கடமையாகும்.

கிழக்கு மாகாண சபையில் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வரும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.