அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் கோரிக்கை

0 190

இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரிசி இருப்­புக்கள் மற்றும் பெரும் போக பரு­வத்தில் பெறப்­பட்ட அரிசி கையி­ருப்­பு­களை சந்­தைக்கு முறை­யாக விநி­யோ­கிக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்க வேண்டும். பண்­டிகை காலத்­தின்­போது அரி­சியின் விலையை நியா­ய­மான விலைக்கு கொண்டு வரு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். நாட்டின் பொரு­ளா­தார முகா­மைத்­துவம் சரி­யாகச் செயற்­ப­டு­மாயின் இந்­நாட்டில் அரி­சியின் விலை இந்­நேரம் குறைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். குறைந்த விலையில் அரிசி வழங்கும் திறன் அர­சுக்கு உள்­ளது. தேவை­யான வேலைத்­திட்­டத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுப்­ப­தாக கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.
நேற்­றைய தினம் எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போது கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே கபீர் ஹாசிம் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், 2019 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் சிங்­கள, தமிழ் புத்­தாண்டை முறை­யாகக் கொண்­டாட நாட்டு மக்­க­ளுக்கு சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை. 2020 க்குப் பிறகு, நாட்டில் தொடர்ச்­சி­யான நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன. அதனால் சிங்­கள தமிழ் புத்­தாண்டை மக்­களால் சரி­யாக கொண்­டாட முடி­ய­வில்லை. 2024 இல் கூட மக்கள் புத்­தாண்டை முறை­யாகக் கொண்­டாடும் நிலை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. நாட்டு மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் ஏராளம். சிங்­கள மற்றும் தமிழ் புத்­தாண்டு கொண்­டாட்­டத்­துடன் அரிசி பிர­தா­ன­மா­கி­றது.

ஆனால் நாட்டில் அரிசி விலை தொடர்பில் பாரிய பிரச்­சினை உள்­ளது. நாட்டின் பொரு­ளா­தார நிர்­வாகம் சரி­யாகச் செயற்­ப­டு­மாயின் இந்­நாட்டில் அரி­சியின் விலை இந்­நேரம் குறைந்­தி­ருக்க வேண்டும். கீரி சம்பா 50,000 மெட்ரிக் டொன் இறக்­கு­மதி செய்­யப்­படும் என வர்த்­தக அமைச்சர் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்தார். சிங்­கள தமிழ் புத்­தாண்­டுக்கு அரி­சியின் விலை அதி­க­ரிக்­கலாம் என்­பதால், அரி­சியின் விலையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அரி­சியை இறக்­கு­மதி செய்­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. தற்­போது 25,000 முதல் 30,000 மெட்ரிக் டொன் வரை­யி­லான கீரி சம்­பாவை அர­சாங்கம் இறக்­கு­மதி செய்­துள்­ளது.

அதேபோல்,இந்த வருடம் நாட்டின் பெரும் போக பரு­வத்தில் வெற்­றி­க­ர­மான அறு­வடை கிடைத்­துள்­ளது. விவ­சாய அமைச்­சரும் விவ­சாய அமைச்சும் இது குறித்து அறி­வித்­துள்­ளன. வெற்­றி­க­ர­மான அறு­வடை ஏற்­பட்­டி­ருந்தால், அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டி­ருந்தால், சந்­தையில் அரி­சியின் விலை இந்­நேரம் குறைந்­தி­ருக்க வேண்டும். ஆனால் அரிசி விலையை குறைக்கும் செயல்­பாட்டில் அர­சாங்கம் தோற்­றுப்­போ­யுள்­ளது. இது பொரு­ளா­தார நிர்­வாக பிரச்­சி­னையா அல்­லது சந்­தையில் அரிசி மாபி­யாவின் பிரச்­சி­னையா என்ற பிரச்­சினை எழுந்­துள்­ளது.

2023 டிசம்­பரில் ஒரு கிலோ கீரி சம்பா 245 ரூபா. தற்­போது ஒரு கிலோ கீரி சம்பா 355 ரூபா­வாக உள்­ளது. 2023 டிசம்­பரில் ஒரு கிலோ சம்பா 220 ரூபா.இன்று 263 ரூபா­யாக மாறி­யுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. 2023 டிசம்­பரில் ஒரு கிலோ நாட்டு அரிசி 190 ரூபா. இன்று ஒரு கிலோ நாட்டு அரிசி 219 ரூபா­வாக ஆக உள்­ளது. இதைப் பார்க்கும் போது அரிசி விலை கடு­மை­யாக அதி­க­ரித்­துள்­ளது. பாரிய அள­வி­லான நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி சந்தையை கட்டுப்படுத்துகின்றனர் அல்லது மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் நுகர்வோருக்கு நியாயத்தை வழங்காது, அரிசியிலிருந்து நிகர இலாபத்தை அதிகம் ஈட்டி வருகின்றனர். இது குறித்து ஆராய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.