(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாசலில் ரமழான் மாதத்தின் முதல் நாள் புனித நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் நடைபெற உள்ள கிழக்கு மாகாணம் தழுவியதான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடு தொடர்பாக ஆராயும் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்.
இதில் அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஜவாஹிர் பலாஹி உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.- Vidivelli