சவூதிக்கான இலங்கைத் தூதுவராக அமீர் அஜ்வத்

0 183

(றிப்தி அலி)
சவூதி அரே­பி­யா­விற்­கான இலங்கைத் தூது­வ­ராக இலங்கை வெளி­நாட்டு சேவையின் சிரேஷ்ட அதி­கா­ரி­யான அமீர் அஜ்வத் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். வெளி­வி­வ­கார அமைச்சின் சிபா­ரி­சு­ட­னான இந்த நிய­மனம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் அண்­மையில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிய­ம­னத்­திற்கு பாரா­ளு­மன்­றத்தின் உயர் பத­வி­க­ளுக்­கான குழு­வினால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது சவூதி அரே­பி­யா­விற்­கான இலங்கைத் தூது­வ­ராக செயற்­படும் பீ.எம்.அம்­சாவின் பதவிக் காலம் விரைவில் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இத­னை­ய­டுத்து, குறித்த பத­வி­யினை வெளி­வி­வ­கார அமைச்சின் மேல­திக செய­லா­ள­ராக தற்­போது செயற்­படும் அமீர் அஜ்வத் பொறுப்­பேற்­க­வுள்ளார்.

முன்னர் ஓமா­னிற்­கான இலங்கைத் தூது­வ­ரா­கவும், சிங்­க­பூ­ரிற்­கான இலங்­கையின் பதில் உயர் ஸ்தானிக­ரா­கவும் இவர் கட­மை­யாற்­றி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரை ஓமானில் மேற்­கொண்ட பணி­யினை அடிப்­ப­டை­யாக வைத்து இலங்கை – ஓமான் உற­வுகள் தொடர்­பான நூலொன்­றி­னையும் இவர் எழு­தி­யுள்ளார்.

இலங்கை வெளி­நாட்டு சேவையில் 1998 ஆம் ஆண்டு இணைந்த இவ­ரது முத­லா­வது வெளி­நாட்டு பத­வி­யினை றியா­தி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யத்தில் மேற்­கொண்­டுள்ளார்.

இதற்கு மேலதி­க­மாக சென்­னை­யி­லுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானி­க­ரா­லயம் மற்றும் ஜெனீ­வா­வி­லுள்ள ஐக்­கிய நாடு­க­ளுக்­கான தூது­வ­ரா­லயம் போன்­ற­வற்­றிலும் இவர் கட­மை­யாற்­றி­யுள்ளார்.

அரபு மொழி பாண்­டித்­தியம் பெற்ற இவர் ஒரு சட்­டத்­த­ர­ணி­யு­மாவார் என்­பதும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.