காஸா சிறுவர்களுக்கான உதவியை ஏப்ரல் 11க்கு முன்பு வழங்கவும்

ஐக்கிய தேசிய கட்சி வேண்டுகோள்

0 214

(எம்.ஆர்.எம்.வசீம்)
காஸா சிறுவர் நியத்­துக்­காக சேர்க்­கப்­படும் நன்­கொடையை எதி­ர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கைய­ளிக்க இருக்­கிறோம். அதனால் நன்­கொடை செய்ய விரும்­பு­ப­வர்கள் அதற்கு முன்னர் கைய­ளிக்க வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் பாலித்த ரங்கே பண்­டார தெரி­வித்தார்.
ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே இந்த அறி­விப்பை விடுத்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
காஸாவில் இடம்­பெற்­று­வரும் வன்­முறை கார­ண­மாக அங்­குள்ள சிறு­வர்கள் உள்­ளிட்ட பலரும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அதனால் அங்­குள்ள சிறு­வர்­களை கருத்­திற்­கொண்டு காஸா சிறு­வர்­க­ளுக்­கான நிதியம் அமைப்­ப­தற்கு ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். அது­தொ­டர்­பான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­துக்கும் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்கி இருக்­கி­றது.
எதிர்­வரும் ரமழான் பண்­டி­கையின் போது காஸா சிறு­வர்­க­ளுக்கு நிதி உதவி வழங்­கு­வ­தை இலக்­காகக்­கொண்டே இந்த நிதியம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் இந்த நிதி­யத்­துக்கு பங்­க­ளிப்பு செய்யும் வகையில் அனைத்து அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்கள் எதிர்­வரும் ரம­ழானில் இப்தார் நிகழ்ச்­சி­களை நிறுத்தி, அந்த பணத்தை இந்த நிதி­யத்­துக்கு பங்­க­ளிப்பு செய்­யு­மாறு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார்.

அத்­துடன் இந்த நிதி­யத்­திற்கு பங்­க­ளிப்பு செய்ய தனியார் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் முன்­வர வேண்டும். காஸாவில் சிறு­வர்கள் உள்­ளிட்ட பலரும் அங்கு இடம்­பெற்று வரும் மோதல் கார­ண­மாக பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். அடிப்­படை தேவை­க­ளுக்கு கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர். பாதிக்­கப்­பட்­டு­வரும் சிறு­வர்­க­ளுக்கு நன்­கொடை வழங்­கு­வ­தற்­காக அர­சாங்­கத்­தினால் ஒரு மில்­லியன் டொலரை ஐக்­கிய நாடு­களின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­தலம் ஊடாக விநி­யோ­கிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கிறோம்.

எனவே இந்த நிதி எதி­ர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி இடம்­பெற இருக்கும் ரமழான் பண்­டி­கைக்கு கைய­ளிக்­கப்­பட இருக்­கி­றது. அதனால் காஸா சிறுவர் நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன்னர் தங்களது நன்கொடைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.