சாரா தப்பிச் செல்ல உதவியதாக கூறி கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருக்கு எதிரான‌ வழக்கினை முன்கொண்டு செல்ல முடியாத நிலைமை

‍சட்ட மா அதிபருக்கு அறிவிப்பதாக சி.ஐ.டி. தெரிவிப்பு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரும் சாட்சியம்

0 209

(எம்.எப்.அய்னா)
நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீது நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலின் குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் ஹஸ்­தூனின் மனை­வி­யான, 2 ஆம் கட்ட தாக்­கு­த­லுக்கு தயா­ராக இருந்­த­தாக கூறப்­படும் புலஸ்­தினி ராஜேந்ரன் அல்­லது சாரா ஜஸ்மின் அல்­லது சாரா தப்பிச் செல்ல உத­வி­ய­தாக சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.ரி. அபூ­பக்­க­ருக்கு எதி­ரான வழக்கை முன் கொண்­டு­செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் சட்ட மா அதி­ப­ருக்கு தாம் அறி­விப்­ப­தாக சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றுக்கு நேற்று முன் தினம் (27) அறி­வித்­துள்­ளது.

சாரா குறித்து பொலி­ஸா­ருக்கு தக­வல்­களை மறைத்­த­தாக கூறி சட்ட மா அதிபர் மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றில் பொலிஸ் அதி­கா­ரி­யான அபூ­பக்­க­ருக்கு எதி­ராக தொடர்ந்­துள்ள வழக்கு, விசா­ர­ணைக்கு வந்­த­போதே, இதனை சி.ஐ.டி.யினர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது, அர­சாங்க இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் சாட்­சியம் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அச்­சாட்­சி­யங்கள் பிர­காரம், சாரா விவ­கா­ரத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட 3 ஆவது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களில் அவர் 2019 மே 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருதில் நடந்த வெடிப்பு சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சாட்­சியம் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டது.

இந்த நிலை­யி­லேயே பிர­தி­வா­தி­யான அபூ­பக்கர் சார்பில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட், 2019 மே மாதம் இறந்­து­விட்­ட­தாக கூற­ப்படும் சாராவை 2019 செப்­டம்பர் மாதம் தப்­பிக்க உத­வி­ய­தாக குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­மையை சுட்­டிக்­காட்டி வாதங்­களை முன் வைத்தார்.

இந்த நிலை­யி­லேயே, இவ்­வ­ழக்கை முன் கொண்டு செல்ல முடி­யாத நிலை­மையை சட்ட மா அதி­ப­ருக்கு அறி­விப்­ப­தாக சி.ஐ.டி.யினர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

இவ்­வ­ழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் சிறப்பு அரச சட்­ட­வாதி சகி அஹமட் ஆஜ­ராகும் நிலையில் பிர­தி­வா­திக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் ஆஜ­ரா­கிறார்.

முன்­ன­தாக உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சாட்­சி­யங்­களின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர், நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீது நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலின் குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் ஹஸ்­தூனின் மனை­வி­யான புலஸ்தினி ராஜேந்ரன் அல்­லது சாரா, களு­வாஞ்சிக் குடி­யி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு தப்பிச் செல்ல உத­வி­யமை தொடர்பில், சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில், பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அர்­ஜுன மாஹின்­கந்த வழங்­கிய சாட்­சி­யத்தின் படி, கடந்த 2020 ஜூலை 13 ஆம் திகதி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அபூ­பக்கர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

கல்­முனை – சாய்ந்­த­ம­ருது வெலிவோரியன் கிரா­ம­ப­கு­தியில் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடொன்­றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து நடாத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலில் உயிர் தப்­பி­ய­தாக நம்­பப்­படும் சாரா ஜெஸ்மின் எனும் பெண் களு­வாஞ்­சிக்­குடி, மான்­காடு பகு­தியில் மறைந்­தி­ருந்­த­தாக கண் கண்ட சாட்­சி­யாளர் ஒருவர் ஊடாக தனக்கு கடந்த 2020 ஜூலை 06 ஆம் திகதி தகவல் கிடைத்­த­தாக அர்­ஜுன மாஹின்­கந்த குறிப்­பிட்­டி­ருந்தார். அதன்­படி கடந்த 2020 ஜூலை 8 ஆம் திகதி மட்­டக்­க­ளப்பு சென்று அங்கு சாராவை நேரில் கண்ட நப­ரையும் சந்­தித்­த­தா­கவும், அந்த கண்­கண்ட சாட்­சி­யா­ளரின் சாட்­சி­யத்தின் பிர­காரம், கடந்த 2019 வருடம் செப்­டம்பர் மாதத்தில் ஒரு நாள், அதி­காலை 3.15 அளவில் மட்­டக்­க­ளப்பு – கல்­முனை பிர­தான வீதியில் தேத்தா தீவு பகு­தியை கடந்து சென்­று­கொண்­டி­ருந்த போது, பிர­தான வீதிக்கு நுழைய முடி­யு­மான குறுக்கு வீதி­யான கடற்­கரை வீதி­யி­லி­ருந்து பெண் ஒரு­வரும் இரு ஆண்­களும் வந்­த­தாக தக­வ­லாளி தகவல் அளித்­த­தாக அர்­ஜுன மாஹின்­கந்த குறிப்­பிட்­டி­ருந்தார். அப்பெண் அப்­போது கருப்பு நிற பர்தா அணிந்­தி­ருந்­த­தா­கவும், முகத்தை மறைத்­தி­ருக்­க­வில்லை எனவும் அவரின் பின்னால் இரு ஆண்கள் வந்­த­தையும் கண்­ட­தாக சாட்­சி­யாளர் அவ­தா­னித்­துள்ளார்.

அவ்­வாறு பிர­தான வீதிக்கு வந்த பெண், பாதை ஓர­மாக நிறுத்­தப்­பட்­டி­ருந்த இள மஞ்சள் நிற டப்பிள் கெப் ரக வாக­னத்தில் ஏறு­வதை சாட்­சி­யாளர் அவ­த­ானித்­துள்ளார். குறித்த கெப் வண்­டியின் பின் ஆச­னத்தில் அந்த பெண் அமர்ந்­துள்­ள­துடன், முன் ஆச­னத்தில், அதா­வது சாரதி ஆச­னத்­துக்கு அருகே உள்ள ஆசனத்தில் அப்போது களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி அபூபக்கர் இருந்துள்ளதை சாட்சியாளர் கண்டுள்ளார் என அர்ஜுன மாஹின்கந்த சாட்சியமளித்திருந்தார்.
இது தொடர்பிலேயே, அபூபக்கர் கைது செய்யப்பட்டு 2020 முதல் தடுப்புக் காவலிலும் விளக்கமறியலிலும் இருந்து வந்த நிலையில் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிணையளிக்கப்பட்டுள்ள‌மை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.