இப்தார் நிகழ்வுகளுக்கு செலவிடும் பணத்தை காஸா மக்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானம்

தனியான நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி யோசனை; அமைச்சரவை அங்கீகாரம்

0 203

(றிப்தி அலி)
புனித ரமழான் காலப் பகு­தியில் அரச நிறு­வ­னங்­க­ளினால் ஏற்­பாடு செய்­யப்­படும் இப்தார் நிகழ்­விற்­காக செல­வ­ளிக்­கப்­படும் பணத்­தினை காஸாவில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு வழங்க இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இதற்­க­மைய, காஸா எல்லைப் பகு­தி­களில் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக Children of Gaza Fund இனை நிறு­வு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு அமைச்­ச­ரவை கடந்த திங்­கட்­கி­ழமை (26) அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

அதன்­படி இப்தார் நிகழ்­வு­க­ளுக்­காக அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளினால் ஒதுக்­கப்­படும் தொகையை இந்த நிதி­யத்­திற்கு பெற்­றுத்­த­ரு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் பிர­தமர் தினேஷ் குண­வர்­தன ஆகியோர் அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்­ளனர்.

இதற்­காக மக்­களின் ஒத்­து­ழைப்பும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தோடு, பாதிக்­கப்­பட்ட பிள்­ளை­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் ஐக்­கிய நாடுகள் சபையின் வதி­விடப் பிரி­தி­நி­தி­யூ­டாக ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதன்­படி, தங்­களின் நன்­கொ­டை­களை எதிர்­வரும் ஏப்ரல் 11ஆம் திக­திக்கு முன்னர், இலங்கை வங்­கியின் (வங்கி இலக்கம்: 7010), தப்­ரோபன் (கிளை இலக்கம்: 747) கிளை­யி­லுள்ள 7040016 எனும் கணக்கு இலக்­கத்­திற்கு ‘ஜனா­தி­ப­தியின் செய­லாளர்’ என்ற பெயரில் வைப்பிலிடுமாறும், அதற்கான பற்றுச்சீட்டை 0779730396 எனும் இலக்கத்திற்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.