ஹாதியா வழக்கு முடிவுக்கு வருகின்றதா?

0 245

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் சாட்சி நெறிப்­ப­டுத்­தல்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.

பாத்­திமா ஹாதியா பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்தின் சுயா­தீனத் தன்­மையை ஒப்­பு­விக்க உண்மை விளம்பல் விசா­ர­ணைகள் தற்­போதும் இடம்­பெற்று வரு­கின்­றது.

ஹாதி­யா­வுக்கு எதி­ரான வழக்கில், வழக்கை நிரூ­பிக்க சட்ட மா அதிபர் தரப்பு பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக ஹாதியா கோட்டை நீதி­வா­னுக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்­தி­லேயே தங்­கி­யுள்­ளமை புல­னா­கி­றது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்­து­அ­றிந்­தி­ருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரி­வித்தன் ஊடாக) , அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

உண்­மையில், சாரா­விடம் இருந்து தக­வல்­களை அறிந்­து­கொண்டு ஹாதியா அவற்றை மறைத்­தாரா அல்­லது, சி.ஐ.டி.யினரின் கட்­டுக்­கா­வலில் இருந்த போது அவர்­களின் வாக்­கு­றுதி, நிர்ப்­பந்தம் மற்றும் அழுத்தம் கார­ண­மாக கோட்டை நீதி­வா­னுக்கு பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் பிர­காரம் வாக்கு மூலம் வழங்­கி­னாரா என்ற விட­யத்­தி­லேயே ஹாதியா குற்­ற­வா­ளி­யா­வதும் நிர­ப­ரா­தி­யா­வதும் தங்­கி­யுள்­ளது. அதன்­ப­டியே ஹாதி­யாவின் குறித்த வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசா­ரணை கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெய­ராமன் ட்ரொஸ்கி முன்­னி­லையில் இடம்­பெற்று வரு­கின்­றது.
கடந்த தவ­ணையில் இவ்­வ­ழக்கு விசா­ரணை செய்­யப்­பட்ட போது, ஹாதியா கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் விஷேட விசா­ரணைப் பிரிவு இல: 2 இன் 2 ஆம் பிர­தா­னி­யாக செயற்­பட்ட பொலிஸ் பரி­சோ­தகர் சும­திஸ்ஸ சாட்­சியம் அளித்தார். வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்­ட­வா­தி­க­ளான சத்­துரி விஜே­சூ­ரிய, மொஹம்மட் லாபிர் ஆகி­யோ­ருடன் ஆஜ­ரா­கிய பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்­ப­டுத்­தலில் அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இதன்­போது, ஹாதி­யாவும் அவ­ரது மக­ளான ருதை­னாவும் தனது பிரி­வி­லேயே தடுத்து வைக்­கப்­பட்­ட­தா­கவும், ருதை­னாவை ஹாதி­யாவின் பெற்­றோ­ரிடம் மீள கைய­ளிக்க எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் தான் தொடர்­பு­பட்­ட­தா­கவும் பொலிஸ் பரி­சோ­தகர் சும­ன­திஸ்ஸ சாட்­சி­ய­ம­ளித்தார். இதற்­காக தான் கட்­டு­பொத்த பொலிஸ் பிரிவின் கெக்­கு­னு­கொல்ல பகு­திக்கு சென்று ஹாதி­யாவின் தாய், தந்­தை­ய­ரிடம் வாக்கு மூலம் பெற்­ற­தா­கவும் அவர் கூறினார். அத்­துடன் ஹாதியா, அவர் மகள் ருதை­னாவை தமது பொறுப்பில் இருக்கும் போது நன்­றாக பார்த்­துக்­கொண்­ட­தா­கவும் , ருதை­னா­வுக்கு பிடித்த பராட்டா மற்றும் கோழிக் கறி வாங்கிக் கொடுத்­த­தா­கவும் சும­ன­திஸ்ஸ சாட்­சி­ய­ம­ளித்தார்.
எவ்­வா­றா­யினும் பிர­தி­வாதி ஹாதி­யாவின் நல­னுக்­காக சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவை­ஸுடன் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சும­ன­திஸ்­ஸவின் சாட்­சி­யத்தை குறுக்கு விசா­ர­ணை­கள் ஊடாக சவா­லுக்கு உட்­ப­டுத்­தினார்.

ஹாதியா கோட்டை நீதி­வா­னிடம் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் வாக்கு மூலம் வழங்க அழைத்துச் செல்­லப்­பட்ட அதே தினத்தில் அவ­ருடன் குறித்த விசா­ர­ணை­யா­ளர்கள் பொறுப்பில் இருந்த மற்­றொரு கைதியும் அழைத்துச் செல்­லப்­பட்­டமை, நீதி­வா­னிடம் சென்ற பின்னர் அவர் வாக்கு மூலம் வழங்க மறுத்­ததால் மீள அழைத்து வரப்­பட்­டமை உள்­ளிட்ட விட­யங்­களை முன் வைத்து சும­ன­திஸ்­ஸவின் சட்­சி­யத்தை சவா­லுக்கு உட்­ப­டுத்­தினர். அத்­துடன் ஹாதி­யாவின் வாக்­கு­மூ­ல­மா­னது அவ­ரது குழந்தை ருதை­னாவின் எதிர்­காலம் தொடர்பில் வழங்­கப்­பட்ட வாக்­கு­றுதி, அச்­சு­றுத்தல், அழுத்தம் கார­ண­மாக வழங்­கப்­பட்ட வாக்கு மூலம் என அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் முன்­மொ­ழிந்­தனர். இத­னை­விட சாட்­சி­யா­ளரின் நேர்மைத் தன்மை, விசு­வாசம் உள்­ளிட்­ட­வற்­றையும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசா­ர­ணை­களில் சவா­லுக்கு உட்­ப­டுத்­தினார்.

இத­னை­ய­டுத்து இவ்­வ­ழக்கின் மேல­திக குறுக்கு விசா­ர­ணைகள் ஏபரல் 25 ஆம் திக­தி­வரை ஒத்தி வைக்­கப்ட்­டது. சும­ன­திஸ்­ஸவின் சாட்­சி­யத்தின் பின்னர் பிர­தான விசா­ரணை அதி­காரி ஜய­சுந்­த­ரவின் சாட்­சியம் மட்டும் வழக்குத் தொடுநர் தரப்பால் நெறிப்­ப­டுத்த எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் ஹாதியா சாட்சிக் கூண்டில் ஏறியோ அல்­லது பிர­தி­வாதிக் கூண்டில் இருந்­த­­வாறு தனது நிலைப்­பாட்டை அறி­விப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
எனவே தான் இந்த வழக்கு மிக விரைவில் முடி­வுக்கு வரும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.