புதிய அரச ஹஜ் குழு நியமனம்

மீண்டும் தலைவரானார் இப்ராஹிம் அன்சார்

0 260

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
2024 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அரச ஹஜ் குழு புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே பத­வி­யி­லி­ருந்த 2023 ஆம் ஆண்­டிற்­கான அரச ஹஜ் குழுவின் பத­விக்­காலம் நேற்­றுடன் (14.02.2024) நிறை­வுற்­ற­த­னை­ய­டுத்தே புதிய ஹஜ் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய ஹஜ் குழுவின் தலை­வ­ராக கடந்த வருடம் பத­வி­யில் இருந்த இப்­ராஹிம் அன்ஸார் மீண்டும் 2024ஆம் ஆண்­டிற்­கான ஹஜ் குழுவின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

குழுவின் உறுப்­பி­னர்­க­ளாக மில்பர் கபூர், இஃபாஸ் நபுஹான், முகம்­மது ஹனிபா இஷாக் மற்றும் நிப்ராஸ் நசீர் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
புதிய ஹஜ் குழு உறுப்­பி­னர்­க­ளுடன் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க, அமைச்சின் மேல­திக செய­லாளர் குமாரி, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் ஆகி­யோரும் நிகழ்வில் பங்­­கேற்­ற­னர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.