சசுதந்திர தின நிகழ்வில் நடன நிகழ்ச்சி; கல்குடா உலமா சபை கண்டனம்

0 294

(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்­ட­மா­வடி பாலத்­துக்கு அருகில் இடம்­பெற்ற சுதந்­திர தின நிகழ்வில் மார்க்கத்திற்கு முரணாக இடம்பெற்ற நடன நிகழ்ச்சிக்கு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா கல்­குடா கிளை கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளது.
பிர­தே­சத்­தி­லுள்ள பல அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ஓட்­ட­மா­வடி பாலத்­துக்கு அருகில் பிர­மாண்­ட­மான சுதந்­திர தின நிகழ்வு ஒன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அந்­நி­கழ்வில், இஸ்­லாத்­திற்கு முர­ணான நடன நிகழ்ச்சி இடம்­பெற்­றதால் அது சமூக மட்­டத்தில் பெரும் சர்ச்­சை­யையும் விமர்­ச­னங்­களை தோற்­று­வித்­தன.

இவ்­வா­றான நடன நிகழ்ச்­சியை கண்­டித்து அகில இலங்கை ஜம்­இய்­யது உலமா கல்­குடா கிளை நேற்­றைய தினம் கண்­டன அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளது.

குறித்த அறிக்­கையில், 76 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு 04.02.2024 ஆம் திகதி ஓட்­ட­மா­வடி பாலத்தின் அருகில் இடம்­பெற்ற சுதந்­திர தின நிகழ்­வி­னை­யொட்டி எமது கலா­சா­ரத்­திற்கும் பண்­பாட்­டிற்கும் விரோ­த­மான சில நடன நிகழ்ச்­சிகள் அரங்­கேற்­றப்­பட்­டதை கல்­குடா உலமா சபை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. இது­போன்ற தரு­ணங்­களில் இன, மத நல்­லி­ணக்கம் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் கரைந்­து­வி­டா­தி­ருப்­பதை நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்கள் பொறுப்புடன் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் உலமா சபை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.