காஸாவில் மூன்று கட்ட போர் நிறுத்தம் வருமா?

0 251

இஸ்­ரே­லு­ட­னான போரை முடி­வுக்கு கொண்டு வர, மூன்று கட்­டங்­க­ளாக போர் தடுப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டலாம் என்று ஹமாஸ் வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடை­யி­லான போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்­பட கத்தார் முக்­கிய மத்­தி­யஸ்­த­ராக செயல்­பட்டு வரு­கி­றது. போரை முடி­வுக்கு கொண்­டு­வர கத்தார், அமெ­ரிக்கா போன்ற நாடுகள் முயற்சி மேற்­கொண்டும், இரு தரப்பும் சம்­மதம் தெரி­விக்­க­வில்லை எனக் கூறப்­பட்­டு­வந்­தது.

முன்­ன­தாக அமெ­ரிக்கா, இஸ்ரேல் சார்பில் மத்­தி­யஸ்தம் செய்யும் வகையில், கத்தார், எகிப்து நாடுகள் நேர­டி­யாக ஹமாஸ் அமைப்­பி­னரை சந்­தித்து பேசி வந்­தனர். அந்த வகையில், கடந்த வாரம் நடந்த பேச்­சு­வார்த்­தையில் சில விடயங்கள் ஹமாஸ் அமைப்­பி­ன­ரிடம் வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதோடு, நேற்று முன்­தினம் இரவு இஸ்ரேல் சென்ற அமெ­ரிக்க வெளி­யு­றவுத் துறை செய­லாளர் ஆண்­டனி பிளிங்கன், போர் குறித்து முக்­கி­ய­மான விட­யங்­களை ஆலோ­சித்தார் எனக் கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், புதன்­கி­ழமை ஹமாஸ் அமைப்­பினர் தெரி­வித்­துள்ள பதிலில், ‘மூன்று கட்­டங்­க­ளாக போர் தடுப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டலாம்’ என்று முன்­மொ­ழிந்­துள்­ளனர் என கூறப்­ப­டு­கி­றது.

போர் நிறுத்த ஒப்­பந்தம்
இஸ்­ரே­லு­ட­னான போரை முடி­வுக்கு கொண்டு வர 135 நாட்­க­ளுக்கு, 3 கட்­ட­மாக போர் நிறுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள ஹமாஸ் முன்­மொ­ழிந்­துள்­ளது. அதுவும் 45 நாட்கள் இடை­வெ­ளியில் மேற்­கொள்­ளலாம் எனக் குறிப்­பிட்­டுள்­ளது. முதல் கட்­டத்தில், இஸ்­ரே­லிய சிறை­களில் இருந்து 1,500 பலஸ்­தீ­னிய பெண்கள், குழந்­தைகள் விடு­விக்­கப்­பட வேண்டும். இதற்கு பதி­லாக காசாவில் உள்ள பெண்­ பணயக் கைதிகள், 19 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள், முதி­ய­வர்கள், உடல்­நலம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் ஆகியோர் விடு­விக்­கப்­ப­டுவர். இரண்டாம் கட்­டத்தில் மிஞ்­சி­யி­ருக்கும் ஆண் பணயக் கைதிகள் விடு­விக்­கப்­ப­டுவர்.

மூன்றாம் கட்­டத்­திலும் பணயக் கைதிகள் பரி­மாற்றம் நடை­பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் இறு­தியில் இரு­த­ரப்பும் போர் நிறுத்த உடன்­ப­டிக்­கைக்கு முன்­வ­ருவர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது­த­விர இஸ்ரேல் படைகள் முழு­வ­து­மாக வெளி­யேற வேண்டும். இறந்­த­வர்­களின் உடல்­களை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்­பினர் கோரிக்கை விடுத்­துள்­ளனர். போர்­நி­றுத்­தத்தின் போது, இஸ்­ரே­லியப் படைகள் முற்­றி­லு­மாக வெளி­யேறும் நிலையில் காசாவின் புன­ர­மைப்புப் பணிகள் ஆரம்­பிக்­கப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்­ரே­லிய தாக்­கு­தலால் காசாவின் 85 சதவீத மக்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.