இளம் சிட்டின் உயிரைப் பறித்த மரம் : கம்பளையில் நடந்தது என்ன?

0 228

எம்.எம்.எம். ரம்ஸீன்

நமது நாளாந்த வாழ்வில் இடம்­பெறும் எதிர்­பா­ராத சில சோக சம்­ப­வங்கள் எம்மை ஒரு கணம் நிலை­கு­லைய வைத்து விடு­கின்­றன.

இந்த வரி­சையில், கம்­ப­ளையில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பவம் ஒரு சில நிமி­டங்­களில் நாட்டு மக்­களை சோகத்திற் தள்­ளி­விட்­டது.

கடந்த 5 ஆம் திகதி நாட்டில் 2 ஆம் தவணை விடு­மு­றையின் பின்னர் பாட­சா­லைகள் ஆரம்­ப­மாகும் முதல் நாள்.

கம்­பளை நகரை அண்­டிய பிர­பல தனியார் பாட­சா­லை­யிலும் மாண­வர்கள் வருகை தந்­தி­ருந்­தனர். இவர்­களில் ஆரம்ப பிரிவில் பாலர் பாட­சாலை சிறார்­களும் அடங்­குவர். இப்­பா­ட­சா­லையில் ஆரம்ப பிரிவு முதல் உயர்­தரம் வரை மாண­வர்கள் கற்­கின்­றனர்.

சம்­பவ தினம் ஆரம்ப பிரிவில் பாலர் பாட­சா­லையில் கற்கும் சிறார்கள் இடை­வே­ளையின் போது முற்­றத்தில் விளை­யாடிக் கொண்­டி­ருந்­தனர்.
இவர்­களுள் கம்­பளை நகரை அண்­டிய இல்­ல­வ­துரை பகு­தியில் வசிக்கும் ஐந்து வயது நிரம்­பிய முஹம்மத் ஸெய்ன் அஸ்­வியும் குதூகலம் மேலிட நண்­பர்­க­ளுடன் இருந்­துள்ளார். அப்­போது காலை 9.20 இருக்கும், யாரும் சற்றும் எதிர்­பா­ராத சோக சம்­பவம் அப்­போ­துதான் இடம்­பெற்­றுள்­ளது.

பாட­சா­லைக்கு எல்­லைக்கு அப்பால் இருந்த காணியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்­தி­ருந்த சுமார் 70 அடி உய­ர­மிக்க மர­மொன்று காற்­றினால் முறிந்து இதன் பாரிய கிளை­யொன்று சிறார்கள் விளை­யாடிக் கொண்­டி­ருந்த பகு­தியில் பலத்த சத்­தத்­துடன் மதிலை உடைத்துக் கொண்டு விழுந்­துள்­ளது.

இதனால், பாட­சாலை முற்­றத்தில் ஆபத்தை அறி­யாமல் விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறு­வர்கள் பீதியில் அலறிக் கொண்டு நாலா­பக்­கமும் ஓடி­யுள்­ளனர். எனினும், துரதிஷ்டவ­ச­மாக மூன்று சிறார்கள் பாரிய கிளைக்குள் சிக்கி காய­ம­டைந்­துள்­ளனர்.

இவர்கள் உட­ன­டி­யாக அருகில் இருக்கும் கம்­பளை போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில், முஹம்மத் ஸெய்ன் அஸ்வி சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார். ஏனைய சிறார்கள் காயங்­க­ளு­டன் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

சிறு­வ­னின் ஜனாஸா நல்­ல­டக்கம் பெருந்­தி­ர­ளானோர் முன்­னி­லையில் அன்­றி­ரவு கம்­ப­ளையில் இடம்­பெற்­றது. எல்லாம் வல்ல அல்­லாஹ்­த­ஆலா இம்­ம­ழலை மொட்டின் மறுமை வாழ்வை சிறப்­பாக்கி வைப்­பா­னாக. ஆமீன்.

இப்­பா­ட­சாலை சூழலில் இயற்கை அனர்த்­தத்­திற்­கு எது­வித வாய்ப்­பு­மற்ற நிலையில் இடம்­பெற்ற இச்­சம்­பவம் பலரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ள­துடன் இறை­வனின் நாட்­டத்தை நினை­வூட்­டி­யுள்­ள­தாகப் பலரும் கூறு­கின்­றனர்.
“எமது பகு­தியில் இக்­காலம் காற்று வீசும் காலம் அல்ல. ஆனால் அல்­லாஹ்வின் நாட்டம் இப்­ப­டித்தான் இருந்­துள்­ளது. இதனை எவரும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. எல்­லோ­ருக்கும் இச்­சம்­பவம் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது” என்று அங்­கி­ருந்த பிர­மு­க­ரொ­ருவர் தெரி­வித்தார்.

இச்சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை கம்­பளை எட்­கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.