முசலியை சோகத்தில் ஆழ்த்திய மாணவன் ஹம்தானின் மரணம்

0 316

முகுசீன் றயீசுத்தீன்
சிலாவத்துறை

முசலி தேசிய பாட­சா­லையில் கல்­வி­கற்று வந்த ஹம்தான் (வயது 19) க.பொ.த. (உ/த) விவ­சாய விஞ்­ஞான பாடப் பரீட்­சைக்கு கடந்த முதலாம் திகதி தோற்றத் தயா­ராக இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் (ஜன­வரி 31 ஆம் திகதி) மோட்டார் சைக்­கி­ளில் சென்று கொண்­டி­ருந்­த­போது கடற்­ப­டை­யி­னரின் வாக­னத்தில் மோதி விபத்­துக்­குள்­ளானார்.

இச்­சம்­பவம் முசலிப் பிர­தே­சத்தின் கொண்­டச்சி, பாசித்­தென்றல் எனும் இடத்தில் இடம்­பெற்­றது. தாய் மற்றும் 3 சகோ­த­ரி­க­ளுடன் மறிச்­சுக்­கட்டி, ஹுனைஸ் நகரில் வசித்து வந்த ஹம்தான் அங்­கி­ருந்து சுமார் 15 கிலோ­மீட்டர் தொலை­வி­லுள்ள மன்/முசலி தேசிய பாட­சா­லையில் உயர்­தர பொறி­யியல் தொழில்­நுட்ப பிரிவில் கற்று வந்தார்.

2024 ஜன­வரி நடை­பெற்ற க.பொ.த. உயர்­தர பரீட்சை எழுதி வந்த ஹம்தான் விவ­சாய விஞ்­ஞான பாடத்­திற்கு தோற்­றிய போதும் அப்­பாட வினாத்தாள் முற்­கூட்­டியே வெளி­யான கார­ணத்­தினால் பெப்­ர­வரி முதலாம் திகதி நடை­பெ­ற­வி­ருந்த அப்­பா­டத்தின் மீள் பரீட்­சைக்குத் தோற்­ற­வி­ருந்த நிலை­யி­லேயே அதற்கு முதல் நாளான ஜன­வரி 31 ஆம் திகதி விபத்­துக்­குள்­ளானார்.

ஹம்­தானின் அகால மரணம் அல்­லாஹ்வின் ஏற்­பாட்­டின்­படி நடை­பெற்­ற­தா­யினும் மரணம் குறித்த சம்­பவம், படிப்­பினை பற்றி பொது­வாக சமூகம் பேசிக்­கொள்­வது இயல்­பா­னதே.

சம்­பவம் இடம்­பெற்ற ஜன­வரி 31 ஆம் திகதி புதன்­கி­ழமை பகல் சிலா­வத்­து­றையில் வாழும் தனது சகோ­த­ரியின் வீட்­டுக்கே அவர் மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்ளார். அன்­றைய தினம் சகோ­த­ரியின் கண­வ­ரான (மச்சான்) சஹ்­ரியின் அழைப்பின் பேரில் அவர் வழ­மை­யான இப்­ப­ய­ணத்தை மேற்­கொண்­டதால் ஹம்­தானின் மரணம் குறித்து மச்சான் சஹ்ரி நிலை குலைந்து போனார்.

விபத்து இடம்­பெற்­றதும் சிலா­வத்­துறை பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு, அங்­கி­ருந்து மன்னார் மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லைக்கும் பின்னர் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கும் அன்­றைய தினமே மாற்­றப்­பட்டார்.

எனினும் வைத்­திய சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலையில் ஜன­வரி 2 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை 6 மணி­ய­ளவில் வபாத்­தானார். மறுநாள் 3 ஆம் திகதி சனிக்­கி­ழமை பிற்­பகல் 5 மணி­ய­ளவில் ஜனாசா ஹுனைஸ் நருக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு அன்று மாலை மஃரிப் தொழு­கையின் பின்னர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

விவ­சாய விஞ்­ஞான பாடப் பரீட்­சைக்கு தோற்றத் தயா­ராக இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் மோட்டார் சைக்­கி­ளில் சென்று கொண்­டி­ருந்­த­போது கடற்­ப­டை­யி­னரின்
வாக­னத்தில் மோதி விபத்­துக்­குள்­ளானார்.

அதிபர் மர்ஹூம் முப்தி அவர்­களின் மகனே ஹம்தான். முப்தி சேர் கடந்த 3 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வபாத்­தானார். முப்தி சேர் கல்வி, சமூக, சமய, கலா­சாரப் பணி­களில் முன்­னின்று செயற்­பட்­டவர். நல்ல மனிதர். அனை­வ­ரு­டனும் அன்­பா­கவும் சிரித்த முகத்­து­டனும் பேசிப் பழ­கி­யவர்.

அவ்­வாறே அவ­ரது மகன் ஹம்­தானும் மென்­மை­யான போக்­கு­டை­யவர். எவ­ருக்கும் எந்தத் தீங்கும் செய்­தி­ராத இளம்­பிள்ளை. அவ்­வா­றான நற்­ப­ழக்­க­வ­ழக்­கங்­களைக் கொண்ட இளை­ஞ­னாக வாழ்ந்து வந்­ததால் தான் ஹம்­தானின் இழப்பால் முசலிப் பிர­தே­சமே சோக­ம­ய­மா­கி­யது.

தந்தை இல்­லா­த­தாலும் ஒரே­யொரு ஆண் பிள்­ளை­யா­த­தாலும் தனது கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு மேல­தி­க­மாக வீட்டின் சகல வெளி வேலை­க­ளையும் ஹம்தான் கவ­னித்து வந்தார். தாய், சகோ­த­ரிகள் மற்றும் சகோ­த­ரி­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்கு ஹம்தான் செய்து வந்த பணி­விடை ஒரு முதிர்ச்­சி­ய­டைந்த மனி­தரைப் போல் இருந்­த­தாக பலரும் கூறு­கின்­றனர்.

பாட­சா­லையில் மாணவர் தலை­வ­ராக இருந்த ஹம்தான் அதிபர், ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள் மத்­தியில் நற்­பண்­பு­க­ளுடன் தொடர்­பா­டல்­களை மேற்­கொண்­டுள்ளார். பாட­சா­லையில் பல்­வேறு நற்­ப­ணி­க­ளிலும் சுய­மாக முன்­வந்து தன்னை ஈடு­ப­டுத்திக் கொண்­டுள்ளார்.

உற­வி­னர்கள், நண்­பர்கள் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கானோர் முன்­னி­லையில் ஹம்­தானின் ஜனாசா நல்­ல­டக்கம் இடம்­பெற்­றது. நிசப்த வெளியில் சொரிந்த கண்ணீர்த் துளி­களின் மத்­தியில் ஹம்­தானின் கடைசி நிமி­டங்கள் அனை­வ­ரையும் துயரின் உச்­சத்­திற்கே கொண்டு சென்­றது.

ஹம்தான் தனது இறுதி நாட்­களில் நட்பு வட்­டங்­களில் பரி­மாறிக் கொண்ட வார்த்­தைகள், உற­வு­க­ளிடம் பேசிய பேச்­சுக்கள் நெஞ்சை விட்டு நீங்­காத காவி­யங்­க­ளா­கின. கடைசிக் காரி­யங்கள் முடிந்த போதும் அடக்­கஸ்­த­லத்தை விட்டு அகன்று செல்ல மறுத்த இரத்த உற­வு­க­ளதும் நண்­பர்­க­ளதும் நிலை கண்டு மனம் துடியாய்த் துடித்­தது.

ஹம்­தா­னுக்கு இனி­யொரு போதும் மர­ண­மில்லை. ஆனால் நாமெல்லாம் இன்னும் மர­ணத்தைச் சுவைக்கும் வரி­சையில் காத்­தி­ருக்­கிறோம். ஹம்­தானை இழந்து தவிக்கும் உற­வுகள் படும் வேத­னை­க­ளையும் வலி­க­ளையும் விப­ரிக்க வார்த்­தைகள் இல்லை. மொத்­தத்தில் ஹம்தான் வபாத்­தான போதும் அவர் மக்கள் மனங்­களில் வாழ்­கிறார். அல்­லாஹ் அன்­னா­ருக்கு ஜன்­னதுல் பிர்­தெளஸ் எனும் சுவ­ன­ப­தியை அருள்­வா­னா­க.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.