காஸாவில் முன்னேற்றத்தை தருமா சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு?

0 243

ஏ.ஆர்.ஏ.பரீல்

இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்­க­ளையும் கடந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 2024 ஜன­வரி 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்­துறை அமைப்­பான சர்­வ­தேச நீதி­மன்றம் (International Criminal Court – ICC) காஸாவில் இனப்­ப­டு­கொலை செயற்­பா­டு­களைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு இஸ்­ரே­லுக்கு உத்­த­ர­விட்­டது.
என்­றாலும் இஸ்ரேல் காஸாவில் தனது இனப்­ப­டு­கொலை செயற்­பா­டு­களை நிறுத்­திக்­கொள்­ள­வில்லை. காஸாவில் தினம் தினம் பலஸ்­தீ­னர்கள் படு­கொலை செய்­யப்­பட்டு வரு­கி­றார்கள். மட்­டு­ம­ன்றி சர்­வ­தேச நீதி­மன்றில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக தென்­னா­பி­ரிக்கா தொடர்ந்த இனப்­ப­டு­கொலை வழக்கு அட்­டூ­ழி­ய­மா­னது எனவும் சட்டவிரோ­த­மா­னது எனவும் இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு தெரி­வித்­துள்ளார். அத்­தோடு தன்னை தற்­காத்­துக்­கொள்ள இஸ்ரேல் தேவை­யா­னதை தொடர்ந்தும் செய்யும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

உலகில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­டுள்ள நாடுகள் பல இருக்­கின்ற நிலையில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யி­ன­ராகக் கொண்­டி­ராத நாடான தென் ஆபி­ரிக்கா, காஸா பிராந்­தி­யத்தில் இஸ்ரேல் மேற்­கொண்டு வரும் இனப்­ப­டு­கொலை விவ­கா­ரத்தை சர்­வ­தேச நீதி­மன்­றுக்கு கொண்டு சென்­றது.

குறிப்­பிட்ட சர்­வ­தேச நீதி­மன்றம் நெதர்­லாந்தின் தலை­ந­க­ர­மான ஹேக்கை தலை­மை­ய­க­மாகக் கொண்டு நிறு­வப்­பட்­ட­தாகும். அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, மற்றும் ஐரோப்­பிய ஏகா­தி­பத்­திய வல்­ல­ர­சுகள் இந்­நீ­தி­மன்­றத்­திற்­­குக் கட்­டு­ப்­ப­டு­வ­தில்லை.

சர்­வ­தேச நீதி­மன்றம் காஸா படு­கொலை செயற்­பா­டு­களைத் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு இஸ்­ரே­லுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளதே தவிர போர் நிறுத்தம் தொடர்பில் எத்­த­கைய உத்­த­ர­வி­னையும் பிறப்­பிக்­க­வில்லை. இந்­நீ­தி­மன்றம் இஸ்­ரே­லுக்கு எதி­ராக உறு­தி­யான தீர்ப்­பொன்­றி­னை வெளி­யிடும் என்­பதை எதிர்­பார்க்க முடி­யாது.

சர்­வ­தேச நீதி­மன்றின் உத்­த­ரவு
இஸ்­ரே­லுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை குற்­றச்­சாட்­டுக்கு போது­மான ஆதா­ரங்கள் இருக்­கின்­றன. அதனால் இதனை சர்­வ­தேச நீதி­மன்றம் விசா­ரிக்க முடியும் என இந்­நீ­தி­மன்றம் திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­துள்­ளது.

இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து இஸ்ரேல் விலகி இருத்தல், இனப்­ப­டு­கொ­லையைத் தடுத்தல், இனப்­ப­டு­கொ­லைக்­கான நேரடி மற்றும் பொதுத் தூண்­டுதல் வழங்­கு­வோரைத் தண்­டித்தல் மற்றும் காஸாவில் உள்ள பொது மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான உத­வி­களை வழங்­கு­வதை உறுதி செய்ய வினைத்­தி­ற­னான, பய­னுள்ள நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல் உட்­பட ஆறு முதற்­கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு சர்­வ­தேச நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. மேலும் இனப்­ப­டு­கொ­லைக்­கான ஆதா­ரங்­களை பாது­காக்­கவும், அதன் உத்­த­ர­வுக்கு இணங்க எடுக்­கப்­பட்ட அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் ஒரு மாதத்­திற்குள் அறிக்­கை­யாக சமர்ப்­பிக்­கவும் சர்­வ­தேச நீதி­மன்றம் இஸ்­ரே­லுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

எதிர்­பார்த்­தது போலவே இஸ்ரேல் சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் தீர்ப்­பினை நிரா­க­ரித்­துள்­ளது. இதே­வேளை தொடர்ந்தும் காஸாவில் இனப்­ப­டு­கொ­லைகள் இஸ்­ரே­லினால் அரங்­கேற்­றப்­பட்டு வரு­கி­றது. சர்­வ­தேச நீதி­மன்றின் தீர்ப்­புகள் கட்­டுப்­பாடு கொண்­ட­வையே. ஆனால் அவற்றை அமுல்­ப­டுத்­து­வ­தற்குத் தான் பொறி­மு­றைகள் எதுவும் இல்லை.

ஐக்­கிய நாடுகள் சபையின் உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­பா­னது இஸ்­ரே­லிய அர­சாங்­கத்­துக்கும் அதன் நேச நாடான அமெ­ரிக்­கா­வுக்கும் விடுக்­கப்­பட்ட சவால் எனலாம்

‘சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் இந்த தீர்ப்­பா­னது இஸ்­ரே­லுக்கும் அதன் முதன்­மை­யான பாது­கா­வ­லர்­க­ளான அமெ­ரிக்கா மற்றும் ஜேர்­ம­னிக்கும் மிகப்­பெ­ரிய சட்­ட­ரீ­தி­யான தோல்­வி­யாகும் என ‘த இன்­டர்செப்ட்’ இல் ஜெர்மி ஸ்காஹில் எழு­தி­யுள்ளார். பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான இஸ்­ரே­லிய குற்­றங்­க­ளுக்கு தொடர்ந்தும் உதவி செய்யும் முயற்­சியில் அமெ­ரிக்கா சர்­வ­தேச சட்­டத்தை வெளிப்­ப­டை­யாக உதா­சீ­னப்­ப­டுத்­துமா என்­பதே இப்­போது எழுந்­துள்ள கேள்­வி­யாகும் என பத்தி எழுத்­தாளர் ஜேக் ஜோஹன்சன் குறிப்­பிட்­டுள்ளார்.

சர்­வ­தேச நீதிப்­ப­ணிப்­பாளர்
பால்கீஸ் ஜர்ராஹ்
‘சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் குறிப்­பிட்ட முக்­கிய தீர்ப்­பா­னது காஸாவில் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எ­தி­ரான இனப்­ப­டு­கொ­லை­யையும் அட்­டூ­ழி­யங்­க­ளையும் தடுக்க உட­னடி நட­வ­டிக்கை தேவை என்­பதை இஸ்­ரே­லுக்கும் அதன் நட்பு நாடு­க­ளுக்கும் உணர்த்­து­கி­றது என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் இணை சர்­வ­தேச நீதிப்­ப­ணிப்­பாளர் பால்கீஸ் ஜர்ராஹ் தெரி­வித்­துள்ளார். நீதி­மன்றின் உத்­த­ரவு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலேயே இவ்­வாறு கூறி­யுள்ளார்.

மேலும் அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்­துள்ளார். ‘சர்­வ­தேசம் உட­ன­டி­யாக தம் செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி இந்த தீர்ப்பை அமுல்­ப­டுத்­து­வதை உறுதி செய்ய வேண்டும். இஸ்­ரேலின் போர் குற்­றங்­களால் காஸாவில் பொது மக்கள் பெரும் எண்­ணிக்­கையில் பலி­யா­கி­யுள்­ளனர். அத்­தோடு அவர்­க­ளது துன்­பங்­களும் துய­ரங்­களும் மதிப்­பிட முடி­யா­தவை.

சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் விரை­வான தீர்ப்பு காஸாவின் மோச­மான நிலை­மையை அங்­கீ­க­ரிப்­ப­தாக உள்­ளது. முன் எப்­போதும் இல்­லாத வகையில் பொது­மக்கள் நாளாந்தம் கொல்­லப்­ப­டு­கின்­றனர். உண­வின்றி அல்­லலுறு­கின்­றனர். இஸ்­ரேலின் நட்பு நாடுகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
எவ்­வா­றா­யினும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் தீர்ப்­பினால் மாத்­திரம் காஸாவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கும், அழி­வு­க­ளுக்கும் முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யாது. போர் நிறுத்தம் சர்­வ­தேச நீதி­மன்­றத்­தினால் உத்­த­ர­வி­டப்­ப­டா­விட்­டாலும் உட­னடி போர் நிறுத்தம் இன்­றி­ய­மை­யா­த­தாகும். இஸ்ரேல் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்ளும் தாக்­கு­தல்­க­ளை நிறுத்­து­வ­தற்கு அழுத்­தங்கள் அவ­சி­ய­மாகும் என்றார்.

சர்­வ­தேச மன்­னிப்பு சபை
காஸா பகு­தியில் மக்­களை அழிக்­கவும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக மரணம், பயம் மற்றும் துன்­பத்தை கட்­ட­விழ்த்து விடவும் இஸ்ரேல் ஈவி­ரக்­க­மற்ற இரா­ணுவ செயற்­பா­டு­களை மேற்­கொள்­வதை உலகம் தொடர்ந்தும் அமை­தி­யாக பார்த்­துக்­கொண்­டி­ருக்க மாட்­டாது என்ற தெளி­வான செய்­தியை சர்­வ­தேச நீதி­மன்­றம் இடைக்­கால தீர்ப்பில் வழங்­கி­யுள்­ளது என சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் பொதுச் செய­லாளர் ஆக்னஸ் காலமர்ட் தெரி­வித்­துள்ளார்.

பி.பி­.சி நிருபர் பால் ஆடம்ஸ்
சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் தீர்ப்பு தென் ஆபி­ரிக்கா அல்­லது பலஸ்­தீ­னர்­க­ளுக்குக் கிடைத்த முழு­மை­யான வெற்றி அல்ல. இஸ்­ரேலின் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை நிறுத்­து­மாறு சர்­வ­தேச நீதி­மன்றம் உத்­த­ர­வி­ட­வில்லை. இது 2023 அக்­டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் குழு­வினர் மேற்­கொண்ட தாக்­கு­தல்­களை அடுத்து இஸ்­ரேலின் தற்­பா­து­காப்­புக்­கான உரி­மையை மறை­மு­க­மாக அங்­கீ­க­ரித்­துள்­ளது. ஆனால் காஸாவின் நிலைமை பேர­ழிவைத் தரக் கூடி­யது என்­பதை ஐக்­கிய நாடு­களின் சபையின் மிக உயர்ந்த சட்ட அமைப்பு அறிந்­துள்­ளது என பிபி­சியின் நிருபர் பால் ஆடம்ஸ் தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச நீதி­மன்றம் இஸ்­ரேலின் மீதான இனப்­ப­டு­கொலை குற்­றச்­சாட்டின் மீது தனது இறுதித் தீர்ப்­பினை வழங்­கு­வ­தற்கு முன்பு நிலைமை மேலும் மோச­ம­டையும் அபா­யத்தில் உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தீர்ப்புச் செயன்­மு­றைக்கு பல ஆண்­டுகள் ஆகலாம். இதன் கார­ண­மாக சர்­வ­தேச நீதி­மன்றம் தென் ஆபி­ரிக்­காவில் கோரப்­பட்ட 9 தற்­கா­லிக நட­வ­டிக்­கை­களில் பெரும்­பா­லா­ன­வற்றை இஸ்­ரே­லிடம் கோரிக்­கை­க­ளாக முன்­வைத்­துள்­ளது.

நீதி­மன்றின் 17 நீதி­ப­தி­களில் அறுதிப் பெரும்­பான்­மை­யினர் பலஸ்­தீ­னர்­களைக் கொல்­வது, அவர்­க­ளுக்கு உடல் ரீதி­யாக அல்­லது உள ரீதி­யாக கடு­மை­யான தீங்கு விளை­விப்­பது, காஸாவில் சகிக்க முடி­யாத வாழ்க்கைச் சூழலை உரு­வாக்­கு­வது அல்­லது பலஸ்­தீ­னர்­களை வேண்­டு­மென்றே தடுப்­பது போன்ற அனைத்­தி­லி­ருந்தும் இஸ்ரேல் தவிர்ந்து கொள்ள வேண்­டு­மென தீர்ப்­ப­ளித்­துள்­ளனர்.

சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் தீர்ப்­பா­னது இஸ்­ரேலை மிகவும் இக்­கட்­டான, கடி­ன­மான நிலைக்குத் தள்­ளி­யுள்­ளது என பிரிட்­டனைச் சேர்ந்த மனித உரிமை வழக்­க­றிஞர் ஜெப்ரி நைஸ் தெரி­வித்­துள்ளார்.

நீதி­மன்றின் உத்­த­ர­வு­களை இஸ்ரேல் முற்­று­மு­ழு­தாக மறுப்­ப­தா­னது அதன்­மீது வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும். அத்­தோடு பலஸ்­தீ­னர்கள் மீது உல­க­ளா­விய ரீதியில் ஆத­ர­வி­னையும் அனு­தா­பத்­தி­னையும் பெற்றுக் கொடுக்கச் செய்யும் என முன்னாள் யூகோஸ்­லே­வியா அதிபர் ஸ்லோபோடன் மிலோ­சொவிக் தொடர்­பான ஹேக்கின் சர்­வ­தேச விசா­ர­ணையின் தலைமை வழக்­க­றி­ஞ­ராக செயற்­பட்ட நைஸ் குறிப்­பிட்­டுள்ளார்.

தென்­ஆ­பி­ரிக்க அமைச்சர்
நலேடி பாண்டோர்
இஸ்ரேல் காஸாவில் போர் குற்­றங்கள் புரிந்துள்ளது என்பதற்கான ஏராளமான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அவரைக் கைது செய்வதற்கு ஏன் பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை? என தென் ஆபிரிக்காவின் சர்வதேச உறவுகள் அமைச்சர் நலேடி பாண்டோர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பலஸ்­தீன மக்­க­ளையும் பலஸ்­தீ­னத்­தையும் முஸ்லிம் நாடுகள் ஒன்­று­பட்டு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­பதன் மூலம் மாத்­தி­ரமே காப்­பாற்றிக் கொள்ள முடியும். பலஸ்­தீ­னர்கள் தங்கள் சொந்த நிலத்தைக் காப்­பாற்றிக் கொள்ளும் இலட்­சி­யத்தில் உறு­தி­யாக இருக்­கின்­றார்கள்.

சுமார் 27 ஆயிரம் பேர் தங்­களின் உயிர்­களை இதற்­காக தியாகம் செய்­து­விட்­டார்கள். நூற்­றுக்­க­ணக்­கான பள்­ளி­வா­சல்கள், பாட­சா­லைகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள், வைத்­தி­ய­சா­லைகள் இஸ்­ரே­லினால் தரை­மட்­ட­மாக்­கப்­பட்டுவிட்­டன.
ஆயி­ரக்­க­ணக்­கான வீடுகள் முற்­றாக அழிக்­கப்­பட்டுவிட்­டன. இந்த அவ­லங்கள் தொடர்­வதை முஸ்லிம் உலகம் ஒரு­போதும் அனு­ம­திக்­கக்­கூ­டாது. முஸ்லிம் நாடுகள் பலஸ்தீனத்தையும், பலஸ்தீன மக்களையும் காப்பாற்றுவதற்கு ஒன்றிணைய வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.