நிகழ்­நிலை காப்­பு சட்டத்தின் பிர­யோ­கம் எவ்­வா­றி­ருக்­கும்?

0 1,541

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்­நிலை காப்பு சட்டம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. போலி­யான தக­வல்கள் பகி­ரப்­ப­டு­வதை தடுத்தல் உள்­ளிட்ட புதிய பல சட்­டங்­களை உள்­ள­டக்கி நிகழ்­நிலை காப்பு சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சட்­டத்தின் கீழ், பொய்­யான தக­வல்கள் பரப்­பப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்­கான அதி­காரம் ஐந்து உறுப்­பி­னர்­களைக் கொண்ட புதிய ஆணைக்­கு­ழு­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆணைக்­கு­ழு­வினால் இனங் காணப்­பட்டு வழக்குத் தொட­ரப்­பட்டால் உயர்ந்­த­பட்­ச­மாக ஐந்து வருட சிறைத்­தண்­டனை வழங்க இச்­சட்டம் இட­ம­ளிக்­கி­றது.

எனினும் இச் சட்டம் பல்­வேறு தரப்­பி­னரின் எதிர்ப்­பு­க­ளையும் மீறி அவ­சர அவ­ச­ர­மாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளமை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளது.

நிகழ்­நிலை காப்பு சட்­டத்தை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் காணப்­ப­பட்ட இர­க­சியத் தன்­மை­யையும் அதனை அவ­சர அவ­ச­ர­மாக நிறை­வேற்­றி­ய­தையும் கண்­டித்­துள்ள அந் நிலையம் இச் சட்­டத்தை கொண்டு வரு­வதன் பின்னால் உள்ள அர­சாங்­கத்தின் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்­பி­யுள்­ளது. இந்த சட்டம் கருத்துச் சுதந்­திரம் மற்றும் சட்­டத்தின் ஆட்­சிக்கு குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­து.

குறிப்­பிட்ட சட்­ட­மூலம் தொடர்பில் உயர்­நீ­தி­மன்றம் முன்­வைத்த திருத்­தங்­களை அர­சாங்கம் முழு­மை­யாக கருத்தில் எடுக்க தவ­றி­யுள்­ள­தா­கவும் கவலை வெளி­யி­ட­டுள்ள மாற்றுக் கொள்­கை­க­ளுக்­கான நிலையம் நீதி­மன்­றத்தின் பரிந்­து­ரை­களை தெரி­வு­செய்து நடை­மு­றைப்­ப­டுத்­தி­யதன் கார­ண­மாக நிகழ்­நிலை ­காப்பு சட்டம் அர­சிய­ல­மைப்­பிற்கு உகந்­ததா என்ற கரி­ச­னைகள் எழுந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

நிகழ்­நிலை காப்பு சட்­டத்தின் செயல்­முறை மற்றும் சாரத்­தினை அர­சாங்கம் மீளாய்வு செய்­ய­வேண்டும் என்றும் நிகழ்­நிலை காப்பு சட்டம் குறித்த கரி­ச­னை­களுக்­கேற்­ற­வாறு உண்­மை­யான சட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும் எனவும் மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் தெரி­வித்­துள்­ளது.
இத­னி­டையே உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மா­னத்தின் பிர­காரம் சட்­டமா அதிபர் திணைக்­களம் உறு­திப்­ப­டுத்­திய பின்­னரே நிகழ்­நிலை காப்பு சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றத்தின் சட்­ட­மி­யற்றும் நட­வ­டிக்கை சட்­ட­மா­அ­திபர் திணைக்­களம் சட்­ட­வ­ரை­வாளர் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுடன் இணைந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதால் உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மா­னத்­திற்கு மாறாக அல்­லது அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் இல்லை எனவும் சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இச் சட்டம் எதிர்­கா­லத்தில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்கள் மீது தவ­றாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் என மனித உரிமை ஆர்­வ­லர்கள் கவலை தெரி­விக்­கின்­றனர். இதனை பெரும்­பான்மை எம்.பி.க்கள் ஆத­ரித்­துள்ள போதிலும் உண்­மை­யி­லேயே இச் சட்­டத்தின் உள்­ள­டக்­கத்­தையும் பார­தூ­ரத்­தையும் விளங்­கித்தான் அவர்கள் ஆத­ரித்­தார்­களா என்ற கேள்வியும் எழு­கி­றது.

அனைத்­தையும் மீறி தற்­போது சட்டம் அமு­லுக்கு வந்­துள்­ளதால் சமூக ஊடக பயன்­பாட்­டா­ளர்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்­டி­யுள்­ளது.
கடந்த காலங்­க­ளிலும் தற்­போதும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் போன்­ற­வற்றை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சிறு­பான்மை மக்கள் மீதும் அர­சாங்­கத்தை எதிர்த்து நிற்கும் பெரும்­பான்மை இன செயற்­பாட்­டா­ளர்கள் மீது பயன்­ப­டுத்­தி­யது போன்று சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்கள் மீதும் இச் சட்டம் பாயலாம். என­வேதான் இது விட­யத்தில் அனை­வரும் விழிப்­பாக நடந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதே­போன்­றுதான் இன மத முரண்­பா­டு­களைத் தூண்டும் வகையில் சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்­து­வோரைப் பொறுத்த வகையில் இச் சட்டம் அவர்­க­ளுக்கு நல்­ல­தொரு ஆப்பாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
எனினும் அதனை யார் மீது பயன்­ப­டுத்தப் போகி­றார்கள் என்­பதைப் பொறுத்தே இச் சட்டத்தின் வெற்றி தோல்வி தங்­கி­­யுள்­ளது எனலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.