சுதந்திர தினத்திற்கு சவூதி தூதுவர் வாழ்த்து

0 724

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும், இலங்கை அரசு மற்றும் அதன் நேசமிகு குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கைக் குடியரசு  மேலும் முன்னேற்றமும் செழிப்பும்  பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என இலங்கைக்கான  சவுதி அரேபிய தூதுவர்   காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இன்று கொண்டாடப்படும் சுதந்திர தினம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.