கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களை தண்டிக்கலாமா?

0 529

கலா­நிதி ஜெ.டி. கரீம்தீன், (நளிமி),
(PhD in Sociology of Education), Senior lecturer, (OUSL),

அல்­குர்­ஆனைக் கற்றுக் கொடுத்து மார்க்­கத்­தினை நோக்கி மாண­வர்­களை வழிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் உஸ்­தாத்­மார்கள் அல்­லாஹ்­வி­டத்தில் உய­ரிய இடத்தில் இருக்­கின்­றனர். இந்த உய­ரிய இடத்தில் இருப்­ப­வர்கள் தங்கள் போத­னையின் போது எவ்­வாறு மாண­வர்­க­ளி­டத்தில் நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் பல சான்­றுகள் மூலம் எமக்குக் கற்­றுத்­தந்­தி­ருக்­கி­றது.

நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸ்­ஸல்லம் அவர்கள் தமது தோழர்­க­ளுடன் கனி­வா­கவும் இரக்­கத்­து­டனும் நடந்து கொண்­டார்கள். இதனால் நபித்­தோ­ழர்கள் நபி (ஸல்) அவர்­க­ளது நட்பை விரும்­பி­ய­துடன் அவர்­க­ளிடம் கற்க விருப்­ப­மு­டை­ய­வர்­க­ளா­கவும் காணப்­பட்­டார்கள். இதனை அல்­குர்­ஆனில் ஆல இம்ரான் அத்­தி­யா­யத்தில் இவ்­வாறு கூறு­கின்­றது.
“அல்­லாஹ்வின் கரு­ணையின் கார­ண­மாக நபியே! நீர் அவர்­க­ளிடம் கனி­வாக நடந்து கொண்டீர். நீங்கள் கொடூ­ர­மா­ன­வ­ரா­கவோ கடின உள்ளம் கொண்­ட­வ­ரா­கவோ இருந்­தி­ருந்தால் நிச்­சயம் அவர்கள் உங்­களை விட்டும் விரண்­டோடி இருப்­பார்கள்” அல்­குர்ஆன் (3:159)

மேலும், நபி(ஸல்) அவர்கள் பின்­வ­ரு­மாறு நவின்­றுள்­ளார்கள். “யார் சிறி­ய­வர்கள் மீது இரக்கம் காட்­ட­வில்­லையோ, பெரி­யோர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்­த­வில்­லையோ அவர் எம்மைச் சார்ந்­தவர் அல்லர்.” (அபு­தாவுத், திர்மித், அஹ­மது)

குறிப்­பாக பாட­சாலை, மத்­ரஸா சூழலில் ஆசி­ரி­யர்கள் அல்­லது உஸ்­தாத்­மார்கள் பிள்­ளை­களால் விரும்பக் கூடி­ய­வ­ராக இருக்க வேண்டும். ஆசி­ரி­யர்­களின் வரு­கையை மாண­வர்கள் ஆசை­யுடன் எதிர்­பார்க்க வேண்டும். மாண­வர்­களை ஏசுதல், அடித்தல், கடு­மை­யாக தண்­டித்தல் என்­பன கற்­ற­லின்பால் வெறுப்பை ஏற்­ப­டுத்தி பாட­சா­லையில் இருந்து அல்­லது மத்­ர­ஸாவில் இருந்து இடை­வி­ல­கவும் கார­ண­மாக அமைந்­து­விடும்.

1400 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தண்­ட­னையின் மூலம் நடத்தை மாற்­றத்­தினை மாண­வர்­க­ளி­டத்தில் ஏற்­ப­டுத்த முடி­யாது என அல்­குர்­ஆனும் நபி (ஸல்) அவர்­களின் சுன்­னாவும் தெளி­வாக போதித்­துள்­ளன. நவீன உள­வி­யலும் தண்­டனை மூலம் நடத்தை மாற்­றத்தை (Behavior change) ஏற்­ப­டுத்த முடி­யாது என விஞ்­ஞா­ன­பூர்­வ­மாகக் கூறு­கின்­றது.

நடத்தை மாற்றம் என்­பது ஒரு­வ­ரது அறிவு, திறன், மனப்­பாங்கு என்­ப­வற்றில் ஏற்­ப­டுத்தும் மாற்­ற­மாகும். நேர்­ம­னப்­பாங்­குடன் மீள வலி­யு­றுத்தல் செயற்­பா­டு­களின் மூலமும் மாண­வர்­க­ளுடன் கனி­வாக நடப்­பதன் மூலமும் நடத்தை மாற்­றத்­தினை இல­கு­வாக ஏற்­ப­டுத்த முடியும். ஒவ்­வொரு ஆசி­ரி­யரும் மாண­வர்­களின் உள­வியல் பின்­னணி, பொரு­ளா­தார பின்­னணி, சமூகப் பின்­னணி என்­ப­வற்றை கருத்திற் கொண்டு தனது கற்றல் செயற்­பாட்டை அமைத்துக் கொள்­வது கட்­டா­ய­மா­ன­தாகும்.

ஒரு காட்­டுப்­புற அரபி பள்­ளி­வாசல் ஒன்றில் சிறுநீர் கழித்தார். அப்­போது ஸஹா­பாக்கள் அவ­ருடன் கடு­மை­யாக நடந்து கொள்ள முற்­பட்­டார்கள். ஆனால், நபி­ய­வர்கள் அந்த அந்தக் காட்­டுப்­புற அரபி சிறுநீர் கழித்த அவ்­வி­டத்தை சுத்தம் செய்யச் சொன்­னார்கள். நபி அவர்கள் அர­பி­யுடன் நடந்து கொண்ட விதம், அந்த காட்­டுப்­புற அர­பியின் பின்­ன­ணியை விளங்கிக் கொண்டு இஸ்­லா­மிய அடிப்­ப­டையில் வாண்­மைத்­துவ ரீதி­யிலும் இச்­செ­யலை அணு­கி­யி­ருந்­தார்கள்.

ஒரு முறை ரசூல் ஸல்­லல்­லாஹுஅலைஹி வஸ்­ஸல்லம் அவர்கள் ஹிரா குகை­யிலே இருக்­கின்ற பொழுது ஜிப்ரீல் அலை அவர்கள் புனித அல்­குர்ஆன் வச­னத்தை “ஓது­வீ­ராக” என்று பணித்­தார்கள். அந்த நேரத்தில் நபி அவர்கள் “எனக்கு ஓதத் தெரி­யாதே” என்று கூற அதற்கு ஜிப்ரீல் அலை அவர்கள் நபி அவர்­களை கட்டி அணைத்­தார்கள். கட்­டி­ய­ணைத்­ததும் அந்த நேரத்தில் ரசூ­லுல்லாஹ் அவர்­க­ளுக்கு ஒரு நம்­பிக்கை பிறந்­தது. பின்­னர் “­எ­தனை ஓத” என்று கேட்­டார்கள். எனவே, இதுவும் எங்­க­ளுக்கு கற்றல் செயற்­பாட்டை எவ்­வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்­ப­தற்­கான ஒரு சிறந்­த­தொரு வர­லாற்று ஆதா­ர­மாகும்.

இந்த வகையில் நாம் என்றும் மதிக்­கின்ற மார்க்­கக் ­கல்­வியை மாண­வர்­க­ளுக்கு வழங்க முன்வந்துள்ள உஸ்தாத்மார்களை கௌரவப்படுத்தும் அதேவேளை எமது இன்றைய மத்ரஸாக்களும் உஸ்தாத்மார்களும் இதனை நன்கு விளங்கி செயல்படுவதுடன், மத்ரஸா உஸ்தாத்மார்களை இதற்காக பயிற்றுவிப்பதற்கான ஒரு பொறி முறையொன்றினையும் ஏற்படுத்துவது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய நிறுவனங்கள், மத்ரஸா நிருவாகிகளின் கட்டாய கடமையாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.