அயோத்தியில் புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுமா?

0 228

எம்.ஐ.அப்துல் நஸார்

அயோத்­தியில் கட்­டப்­ப­ட­வுள்­ள­தாக முன்­மொ­ழி­யப்­பட்ட முக­மது பின் அப்­துல்லா பள்­ளி­வாசல் நிரு­வாக கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது­வரை ஏட்­ட­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

அயோத்­தியில் வாழும் முஸ்­லிம்கள் தமது கருத்­துக்­களை பின்­வ­ரு­மாறு வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

பஞ்­சித்­தோலா மஹல்­லா­விற்கு அருகில் வசிக்கும் 55 வய­தான சகீர் அஹமட் :
‘கோயில் தொடர்­பாக எமக்கு மாற்றுக் கருத்­துக்கள் எதுவும் இல்லை, அதே­வேளை உத்­தே­சிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் வேலைகள் இது­வரை முறை­யாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை என்­பது எமக்கு கவலை தரு­கின்­றது. கோயில் திறக்­கப்­படும் இந்த நாளை அவர்கள் கொண்­டா­டு­கின்­றனர், நாம் வீடு­க­ளுக்­கு­ள்­ளேயே இருக்க முடிவு செய்­துள்ளோம்.

மற்­றொரு நபர் தனது மஹல்­லாவை ‘இந்­து-­ முஸ்லிம் ஒற்­று­மையின் சின்னம் என பெரு­மை­யாகக் கூறி­ய­தோடு, ‘நாங்கள் உள்ளூர் இந்­துக்­களைக் கண்டு பயப்­ப­டு­வ­தில்லை. அவர்கள் எங்­க­ளுடன் அமை­தி­யா­கவும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ்­கி­றார்கள், ஆனால் வெளி­யாட்கள் சிக்­கலை ஏற்­ப­டுத்­தலாம்.’ என்­கிறார்.

அயோத்­தியில் உள்ள பல முஸ்­லிம்­களைப் போலவே, அவரும் ஜன­வரி 22 அன்று வீட்­டிற்­குள்­ளேயே இருக்க திட்­ட­மிட்­டி­ருந்தார்.

அயோத்­தியின் ஹஸ்ரத் ஷீஷ் தர்­காவின் பரா­ம­ரிப்­பா­ள­ரான முகம்­மது ஸாகிர்
‘பாது­காப்பு அதி­கா­ரிகள் உஷார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இராமர் கோயில் திறப்­பு­விழா நிகழ்வு நடை­பெறும் காலத்­தி­லேயே எமது வரு­டாந்த உர்ஸ் (கொண்­டாட்டம்) நிகழ்வும் வரு­கின்­றது, எனினும் பதட்ட நிலை தோன்றும் என்ற கார­ணத்­தினால் சுமார் ஒரு மாதத்­திற்கும் அதி­க­மான காலம் அக் கொண்­டாட்ட நிகழ்வு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.’

ஏட்­ட­ள­வி­லேயே காணப்­படும் பள்­ளி­வாசல்
2019 ஆம் ஆண்டு உச்ச நீதி­மன்ற தீர்ப்பு, இடிக்­கப்­பட்ட பாபரி மஸ்ஜித் அமைந்­தி­ருந்த இடத்தில் கோவில் கட்ட வழி வகுத்­தது, ஆனால் நீதி­மன்றம் தனது உத்­த­ரவின் பள்­ளி­வாசல் கட்­டு­வ­தற்­காக சுன்னி வக்ப் சபைக்கு ‘முக்­கிய இடத்தில்’ ‘பொருத்­த­மான’ ஐந்து ஏக்கர் காணி­யினை வழங்­க வேண்டும் என்று உத்­த­ர­விட்­டது.

அதே உத்­த­ரவில், கோவி­லுடன் சம காலத்தில் பள்­ளி­வாசல் கட்­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மத்­திய மற்றும் மாநில அர­சாங்­கங்­களை உச்ச நீதி­மன்றம் குறிப்­பாகக் கேட்டுக் கொண்­டது. ஆனாலும், அயோத்­தியில் இந்துக் கோவில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு திறக்­கப்­பட்­டுள்­ள நிலையில், அயோத்­தியில் முன்­மொ­ழி­யப்­பட்ட முக­மது பின் அப்­துல்லா மஸ்ஜித் இது வரை வெறு­மனே வரை­ப­ட­மாக மாத்­தி­ரமே காணப்­ப­டு­கின்­றது.

பள்­ளி­வாசல் அமைப்­ப­தற்­காக வழங்­கப்­பட்­டுள்ள காணி அயோத்­தியின் மையப்­ப­கு­தியில் இருந்து சுமார் 25 கிலோ­மீட்டர் தொலைவில் தன்­னி­பூரின் தூசி நிறைந்த சம­வெ­ளியில் உள்­ளது. இங்கே, ஒரு மயான அமைதி காணப்­ப­டு­கின்­றது. வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­திற்­காக அந்த காணி காத்­தி­ருக்­கி­றது. அதைச் சுற்றி ஆர­வாரம் இல்லை. அதைச் சுற்றி பெரிய திட்­டங்கள் எதுவும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான பணியும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. இதற்­கான நிதியை முழு­மை­யாக திரட்­ட வேண்­டி­யுள்­ளது.
60 வய­தான அப்துல் மஜீத், அந்த இடத்­திற்கு அருகில் ஒரு சிறிய இனிப்புக் கடையை நடத்தி வரு­கிறார். மேலும் இங்கு ஒரு பள்­ளி­வாசல் கட்­டப்­பட்டால், அதனைத் தொடர்ந்து கிராம மக்­க­ளுக்கு மேம்­பாடு மற்றும் சிறந்த வேலை வாய்ப்­புகள் கிடைக்கும் என அவர் நம்­பு­கிறார்.

தன்­னிப்­பூரில் வசிக்கும் 22 வய­தான ராஜா தான் ‘வேலை­யின்றி இருக்கும் நாட்கள்’ முடி­வுக்கு வரலாம் என்­கிறார். அவரும் பக்­கத்து கிரா­மங்­க­ளான தன்­னிபூர் மற்றும் ரவு­னா­ஹியில் உள்ள மற்­ற­வர்­களைப் போலவே, பெரும்­பாலும் தின­சரி கூலி வேலை செய்து வாழ்ந்து வரு­கின்றார். பள்­ளி­வாசல் அமைக்கப் படு­மானால் தனது வாழ்க்­கையும் மாற்­ற­ம­டையும் என அவர் நம்­பு­கின்றார். ‘அனை­வ­ரு­டைய வளர்ச்­சி­யையும் பற்றிப் பேசு­கி­றார்கள். அயோத்­தியில் வளர்ச்சி ஆறு ஓடிக்­கொண்­டி­ருக்­கும்­போது, தன்­னிப்­பூரில் மாத்­திரம் இல்­லாமல் போய்­வி­டுமா?’ என ராஜா கேள்வி எழுப்­பு­கின்றார்.

‘பள்­ளி­வா­ச­லுக்­கான நிலம் இங்கு ஒதுக்­கப்­பட்­டதை அறிந்­ததும் எங்கள் கிரா­மத்தில் உள்ள அனை­வரும் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர். ஆனால், இது­வரை எங்­க­ளுக்கு எது­வித பலனும் ஏற்­ப­ட­வில்லை,’ என மற்­றொரு உள்­ளூர்­வாசி தெரி­வித்தார். அவர்­களில் பெரும்­பாலோர் கூலி­க­ளாக வேலை செய்­வ­தா­கவும், வேலை தேடி புலம்­பெ­யர்ந்து வரு­வ­தா­கவும் மற்­றொரு உள்­ளூர்­வா­சி­யான சோராப் சுட்­டிக்­காட்­டினார்.

தன்­னிபூர் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் சொத்­துக்­களின் விலைகள் உயரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தன்­னி­பூரைச் சேர்ந்த சொஹ்ராப் கான், இப்­ப­கு­தியில் சொத்­துக்­களின் விலைகள் ஏற்­க­னவே பத்து மடங்கு உயர்ந்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

ஒதுக்­கப்­பட்ட காணியில் வைத்­தி­ய­சாலை அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இங்­குள்ள மக்கள் நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்­றனர். அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சாலை பைசா­பாத்தில் உள்­ளது, சுமார் 30- நிமி­டங்கள் தொலைவில் உள்­ளது. தன்­னி­பூரின் மக்கள் தொகை 2,500 மற்றும் ரௌனா­ஹியின் மக்கள் தொகை 12,000. இரண்டு கிரா­மங்­க­ளிலும் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றனர். அர­சாங்க பாட­சா­லைகள் இல்லை, சிறிய மத­ர­சாக்கள் மற்றும் தனியார் பாட­சா­லைகள் மாத்­தி­ரமே உள்­ளன. பெருந்­தெ­ரு­வினால் பிரிக்­கப்­பட்ட இரு கிரா­மங்­க­ளிலும் ஆரம்ப சுகா­தார நிலை­யமும் இல்லை.

பள்­ளி­வாசல் கட்­டு­வ­தற்­காக தற்­போது ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி முன்பு விவ­சாயம் மற்றும் சர்தா பாபா என்று அழைக்­கப்­படும் ஹஸ்ரத் கடா ஷாவின் வரு­டாந்த கந்­தூரி அல்­லது உர்ஸ் ஆகி­ய­வற்­றிற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த தர்கா நூற்­றுக்­க­ணக்­கான ஆண்­டுகள் பழ­மை­யா­னது என்று கூறப்­ப­டு­கி­றது, மேலும் உள்­ளூரில் கடை வைத்து நடத்­து­ப­வர்கள் மற்றும் வியா­பா­ரிகள் இந்த தர்­கா­வுக்கு நிதி­யு­தவி செய்து வரு­கின்­றனர். சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர், கிராம மக்கள் ஒன்று கூடி இதனைப் புன­ர­மைத்­தனர்.

தற்­போது, இந்த காணி சிறு­வர்­களின் விளை­யாட்டு மைதா­ன­மா­கவும், ஆண்­டு­தோறும் நடை­பெறும் உர்ஸ் கந்­தூரி மற்றும் ஏனைய சிறிய நிகழ்­வு­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. மஸார் பகு­தியின் நுழை­வா­யிலில் பள்­ளி­வா­சலின் அழ­கிய வரை­படம் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது, ஆனால் பெளதீ­க­ரீ­தி­யாக பள்­ளி­வாசல் அக் காணியில் இல்லை.

தன்­னிபூர் கிரா­மத்தில் மேற்­படி காணியில் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிக்கும் பணியில் ஈடு­பட்­டுள்ள இந்­தோ இஸ்­லாமிக் கலாச்­சார ­நி­லையம் (IICF), அண்­மையில் தனது நடை­மு­றை­யினை மாற்­றி­யது. புதிய பள்­ளி­வா­ச­லுக்கு 50 லட்சம் ரூபாயைக் கூட சேக­ரிக்க முடி­யாமல் இந்­நி­லையம் போரா­டுகி­றது. மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லான நன்­கொ­டை­க­ளுக்­கான கார­ணங்கள் எவை என நோக்­கினால், முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார நிலை­மைகள் மற்றும் திட்­டத்தின் எதிர்­காலம் பற்­றிய கவ­லைகள் என்­ப­ன­வற்றைக் குறிப்­பி­டலாம். நிரு­வா­க­ ரீ­தி­யான தாம­தங்கள், இடை­யூ­றுகள் மற்றும் நெருக்­கு­தல்­களை சீர் செய்­வ­தற்கு போதிய அர­சியல் தலை­யீடுகள் இல்­லா­தி­ருப்­பதும் ஒரு குறை­பா­டாகக் காணப்­ப­டு­கின்­றது.

நிரு­வா­க ­ரீ­தி­யான தடை­களும் இதில் காணப்­ப­டு­கின்­றன. ‘நீதி­மன்­றத்­தினால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு நான்கு ஆண்­டு­க­ளுக்கும் மேலா­கி­விட்­டது, நிரு­வாக தாம­தங்­களால் முயற்­சிகள் தொடர்ந்து தடை­ப்பட்­டுள்­ளன. ராமர் கோயில் கட்­டு­வதில் எங்­களால் போட்­டி­யிட முடி­யாது என்­பதை நாங்கள் ஒப்­புக்­கொண்­டாலும், இப்­போது நாம் எதிர்­கொள்ளும் சவால்கள் நாம் எதிர்­பார்க்­கப்­ப­டா­த­வை­யாகும்’ என சுன்னி வக்ப் சபையின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார். ‘இதில் எந்த முன்­னேற்­றமும் ஏற்­ப­டா­விட்டால், முஸ்லிம் சமூகம் மன உறு­தியை இழந்து, தாம் ஒதுக்­கப்­பட்­ட­தாக உணரும். நிதி சேக­ரிப்பு நிறுத்­தப்­பட்­டுள்­ளது, அதற்குக் காரணம் நிர்­மா­ணப்­ப­ணி­களை முன்­னெ­டுப்­பதில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தடைகள் ஆகும்’ எனவும் அவர் தெரி­வித்தார்.
2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்­தோ-­ இஸ்­லாமிக் கலாச்­சார நி­லையம் திட்ட அனு­ம­தியைப் பெறு­வ­தற்கு அயோத்தி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யி­ட­மி­ருந்து, தொழி­லாளர் செஸ் மற்றும் அபி­வி­ருத்தி வரியில் 10 கோடி ரூபா­விற்கு முழு­மை­யாக வரி­வி­லக்­க­ளிக்­கு­மாறு உத்­தரப் பிர­தேச அர­சாங்­கத்­திடம் கோர திட்­ட­மிட்­டி­ருந்­தது.

2023 ஆம் ஆண்டு நவம்பர் இல் நிய­மிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் அபி­வி­ருத்திக் குழுவின் புதிய தலை­வ­ரான ஹாஜி அரபாத் ஷேக், மகா­ராஷ்­டி­ராவைச் சேர்ந்த பார­தீய ஜனதா கட்­சியின் பிர­தேச தலை­வ­ராவார். பள்­ளி­வா­சலுக்­கான நிதியை சேக­ரிக்க புதிய திட்­டத்தை கொண்டு வந்தார். மார்ச் மாதத்­திற்குள் ஆரம்­பித்து இந்­தோ-­இஸ்­லாமிக் கலாச்­சார ­நி­லை­யத்தின் இணை­ய­த­ளத்தின் மூலம் கியூஆர் (QR) குறி­யீட்­டினைப் பயன்­ப­டுத்தி நன்­கொ­டை­களைப் பெறு­வதே அத் திட்­ட­மாகும்

புதிய நிதி திரட்டும் பிரச்­சாரம் பள்­ளி­வாசல் நிர்­மாணப் பணி­களை துரி­த­மாக செயற்­ப­டுத்த உதவும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ராமர் கோவிலை பார்க்க வரும் அனை­வரும் பள்­ளி­வா­சலையும் பார்­வை­யிட வரும் வகையில் பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்தை விளம்­ப­ரப்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இப்­போது புதிய தலைவர் பாஜ­க­வுடன் இணைந்­தி­ருப்­பதால், இப் பணியில் முன்­னேற்றம் ஏற்­படும் என உள்­ளூர்­வா­சிகள் எதிர்­பார்க்­கின்­றனர்.

பள்­ளி­வா­சலின் முந்­தைய ‘நவீன’ பாணி­யி­லான வடி­வ­மைப்புப் பற்றி சமூ­கத்தின் ஆட்­சே­ப­னை­களைத் தொடர்ந்து பள்­ளி­வா­சலின் புதிய வடி­வ­மைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது. சுன்னி வக்ப் சபையின் உத்­தரப் பிர­தேசத் தலைவர் ஸூபர் அகமட் பாருகி, கடந்த வருடம் மும்­பையில் புதிய வடி­வ­மைப்பை வெளி­யிட்­ட­போது, ‘சமூகம் முந்­தைய வடி­வ­மைப்பில் அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருந்­தது. எமது பள்­ளி­வா­சலின் வடிவம், பள்­ளி­வா­ச­லுக்கு உரி­யது போல் காணப்­ப­ட­வில்லை என மக்கள் எங்­க­ளிடம் தெரி­வித்­தனர். அப்­போ­துதான் வடி­வ­மைப்பை மாற்ற முடிவு செய்தோம்’ எனத் தெரி­வித்தார்.

ஆரம்­பத்தில், டில்­லியின் ஜாமியா மில்­லியா இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழ­கத்தின் கட்­டி­டக்­கலை பீடத்தின் தாபகப் பீடா­தி­பதி பேரா­சி­ரியர் எஸ்.எம்.அக்தர் அவர்கள் தனது திட்ட வடி­வ­மைப்பில் 1857 சுதந்­திரப் போராட்­டத்தில் பங்­கேற்ற மௌலவி அஹ­ம­துல்லா ஷா அவர்­களின் பெயரில் ஒரு வைத்­தி­ய­சாலை, ஒரு சமூக சமை­ய­லறை, ஒரு நூலகம் மற்றும் ஒரு ஆராய்ச்சி மத்­திய நிலையம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யி­ருந்தார். இவை அனைத்தும் 4,500 சதுர மீட்டர் பரப்­ப­ளவில் அமை­ய­வி­ருந்­தது.

தற்­போது, புனேவைச் சேர்ந்த கட்­டிடக் கலை­ஞ­ரான இம்ரான் ஷேக் தயா­ரித்த புதிய திட்ட வடி­வ­மைப்பின் நோக்கம், இந்­தி­யாவின் மிகப்­பெ­ரிய பள்­ளி­வா­சல்­களுள் ஒன்­றாக அமை­வதும், ‘தாஜ்­ம­ஹாலை விடச் சிறந்­தது’ ஆக இருப்­ப­து­மாகும். இந்­தி­யாவில் ஐந்து மினார்­களைக் கொண்ட முதல் பள்­ளி­வாசல் இது­வாகும். முந்­தைய வடி­வ­மைப்­பிற்கு தனது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­திய ஹாஜி அராபத் ஷேக், இது ஒரு பள்­ளி­வாசல் போல் இல்லை என தெரி­வித்­தி­ருந்தார். புதிய, வடி­வ­மைப்பு வேலைகள் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றன. எதிர்­வரும் பெப்­ர­வரி மாத­ம­ளவில் அது பூர்த்­தி­ய­டைந்­ததும், 2024 ஆம் ஆண்டு ரம­ழானின் பின்னர் கட்­டட நிர்­மாண வேலைகள் ஆரம்­ப­மாகும்.

வைத்­தி­ய­சாலை மற்றும் சமூக சமை­ய­லறை அதில் மாற்­ற­மின்றி இருக்கும் அதேவேளையில், பள்­ளி­வா­ச­லுக்குள் அதான் ஒலிக்கும் போது ஒரு பெரிய மீன் தொட்­டியில் ஒத்­தி­சை­வான நீர் மற்றும் ஒளி காட்சி உட்­பட ஏனைய அம்­சங்ளும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மகா­ராஷ்­டிர மாநில சிறு­பான்­மை­யினர் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலை­வ­ரான ஷேக், பள்­ளி­வா­சலின் ஆரம்பப் பெய­ரான மஸ்­ஜித்-­ அ­யோத்தி என்­ப­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து நபியின் பெயரால் முகம்­மது பின் அப்­துல்லா மஸ்ஜித் என்று மாற்­றப்­பட்­டது.

நிர்­மா­ணிக்­கப்­ப­டாத பள்­ளி­வாசல் கட்­ட­மைப்பு, அதி­கா­ரத்தில் இருப்­ப­வர்­களின் அக்­க­றை­யின்மை, நிதிசார் சவால்கள், நீடித்த சில கவ­லைகள் மற்றும் அயோத்­தியின் பர­ப­ரப்­பான சூழலில் அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான பாரிய தேடல் ஆகி­ய­வற்­றிற்குள் சிக்­கி­யுள்­ளது. பள்­ளி­வாசல் கட்­டட நிர்­மா­ணத்தின் முன்­னேற்­றத்தைத் தடுக்கும் பல நிதிசார் தடைகள் மற்றும் அர­சியல் செயற்­பா­டுகள் தொடர்ந்தும் காணப்­ப­டு­கின்­றன.

‘இந்த வரை­படம் அயோத்தி அபி­வி­ருத்தி ஆணைக்­கு­ழுவின் இணையப் பக்­கத்தில் பதி­வேற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­து. தீய­ணைப்பு சேவைகள் துறை உள்­ளிட்ட சில துறை­க­ளி­லி­ருந்து ஆட்­சே­ப­னை­யில்லை என்ற சான்­றி­தழை பெற்று சமர்ப்­பிக்­கு­மாறு சுன்னி வக்ப் சபை­யிடம் கேட்­கப்­பட்­டுள்­ளது, காணி பயன்­பாட்டு மாற்றக் கட்­டணம் மற்றும் வரை­பட அங்­கீ­காரக் கட்­ட­ணத்தை வைப்புச் செய்­யு­மாறும் வக்ப் சபை கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இவை கடந்த ஆறு மாதங்களாக சுன்னி வக்ப் சபையில் பதிலுக்கு காத்திருக்கின்றன,’ என அயோத்தி அபிவிருத்தி ஆணைக்குழுவின் உப தலைவரும், அயோத்தி மாநகர ஆணையருமான விஷால் சிங் தெரிவித்தார்.

பிரார்த்தனை மற்றும் பராமரிப்பு மத்திய நிலையம்
‘புதிய பள்ளிவாசல் மருத்துவமனை மற்றும் தொழுகை நடத்தும் நிலையமாக செயற்பட வேண்டும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது’ என இந்தோ- இஸ்லாமிக் கலாச்சார நிலையத்தின் செயலாளர் லக்னோவைச் சேர்ந்த அதர் ஹுசைன் சித்திக் தெரிவித்தார். ‘இந்தப் பள்ளிவாசல் அனைவரது கவனத்தையும் ஈர்தத்துள்ளது என்பதோடு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அதற்காக நிதி திரட்டும் அளவுக்கு பெருந்தன்மையுடன் இருக்க வேண்டும். நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கு கூட பெருமளவில் நிதி அவசியம். வடிவமைப்புகள் மீளவடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது அது இந்திய பாரம்பரிய வடிவமைப்பில் காணப்படுகின்றது. அபிவிருத்திக் கட்டணங்களாக சில கோடிகள் செலுத்திய பின்னரே வரைபடம் அனுமதிக்கப்படும்.’ எனவும் சித்தீக் தெரிவித்தார்.

‘சுன்னி வக்ப் சபைக்கு பாபரி மஸ்ஜிதுக்கு பதிலாக வேறு பள்ளிவாசலை அமைப்பதற்கு மாற்றுக் காணி ஐந்து ஏக்கர் கிடைத்தது என்பது எதிர்பாராதது. முஸ்லிம் சமூகம் அதை பயன்படுத்த மனதளவில் தயாராக இல்லை’ என இந்தோ- இஸ்லாமிக் கலாச்சார நிலையத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.