காதி நீதிமன்றங்களில் பாலின சமத்துவம் பேணப்பட வேண்டும்

0 247

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பாலின சமத்­து­வ­மின்மை காதி நீதி­மன்­றங்­களில் காணப்­ப­டு­கி­றது. காதி நீதி­மன்­றங்­களில் ஆண், பெண் சம­மாக நடத்­தப்­பட வேண்டும்.காதி நீதி­ப­தி­களும் விவாகப் பதி­வா­ளர்­களும் கரி­ச­னை­யுடன் செயல்­ப­டாமை தவிர்க்­கப்­பட வேண்டும் என மூதூர் மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான தஸ்னீம் பானு தெரி­வித்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தெஹி­வளை ஸம்ஸம் பவுண்­டேசன் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற காதி நீதி­வான்­க­ளுக்­கான பயிற்சிப் பட்­ட­றையில் கலந்­து­கொண்டு ‘நீதியின் கண் சமத்­து­வமும் பாலின முன்­னோக்­கினை மேம்­ப­டுத்­தலும்’ எனும் தலைப்பில் கருத்து வழங்­கு­கை­யிலே மூதூர் மாவட்ட நீதி­பதி தஸ்னீம் பானு இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இப்­ப­யிற்சிப் பட்­ட­றையை இலங்கை நீதி­ப­தி­களின் மன்­றமும், நீதிச் சேவை ஆணைக்­கு­ழுவும் , காதி நீதி­வான்­களின் போரமும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. நிகழ்வில் மூதூர் மாவட்ட நீதி­பதி தஸ்னீம் பானு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், காதி நீதி­ப­திகள் எழுத்தில், சட்­டத்தில் கூறப்­பட்­டுள்­ள­வை­களை சரி­யாக அமுல்­ப­டுத்த வேண்டும். விசாரணைகள் முழு­மை­யாக நடாத்­தப்­பட்டு தீர்ப்­புகள் வழங்­கப்­பட வேண்டும்.

காதி­நீ­தி­ப­திகள் உரிய வார்த்தைப் பிர­யோ­கங்­களைக் கையாள வேண்டும். தூசன வார்த்­தைகள் தவிர்க்­கப்­பட வேண்டும். வழக்­கா­ளி­களை அல்­லது பிர­தி­வா­தி­களை அவர்­க­ளது உற­வி­னர்­களை தங்கள் வீடு­களில் சந்­திப்­பது முழு­மை­யாகத் தவிர்க்­கப்­பட வேண்டும்.

உண்­மையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் முஸ்லிம் பெண்­க­ளுக்கு பாதிப்­பில்லை. சட்டம் அநீ­தி­யாக எதுவும் கூற­வில்லை. ஆனால் காதி­நீ­தி­ப­திகள் தான் சில வேளை­களில் அநீ­தி­யாக பிர­யோகம் செய்­கிறோம். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தைக் காப்­பாற்றிக் கொள்­வது காதி­நீ­தி­ப­தி­களின் கட­மை­யாகும். எமது சமூ­கத்தில் ஒன்­றுக்கு மேற்­பட்ட திரு­ம­ணங்கள் கணி­ச­மான அளவு காணப்­ப­டு­கின்­றன. பல­தார மணம் செய்து கொண்­டுள்­ள­வர்கள் மனை­வி­யரை சம­மாக நடத்­து­வதும் பரா­ம­ரிப்­பதும் கட்­டா­ய­மாகும். இத­னையே குர்­ஆனும் தெரி­விக்­கி­றது என்றார். முன்னாள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலை­வ­ரு­மான ஏ.டப்­ளியு.ஏ. சலாம் உரை நிகழ்த்­து­கையில், ‘எமது நாட்டில் காதி நீதி­மன்­றங்கள் ஒழிக்­கப்­பட வேண்டும் என பெண்கள் அமைப்­புகள் சில கோரிக்கை முன்­வைத்­துள்­ளன. போராட்­டங்­களும் நடத்­தி­யுள்­ளன. இந்­நி­லையில் காதி­நீ­தி­மன்­றங்­களில் நீதி மட்டும் தான் நடக்­கி­றது என்று எப்­போது நாம் உணர வைக்­கி­றோமோ அப்­போது இந்தக் கோஷங்கள் இல்­லா­ம­லா­கி­விடும்’ என்றார்.

நிகழ்வில் மன்னார் மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.எம்.எம்.மிஹால், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி பாயிஸ் முஸ்தபா, மேல் நீதிமன்ற நீதிபதியும், இலங்கை நீதிபதிகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளருமான லக்மல் விக்கிரமசூரிய, காதிகள் மேன்முறையீட்டுச் சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி நத்வி பஹாவுதீன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.