காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதி காக்கிறது

அமைதி காப்பதால் படுகொலைகளுக்கு இணக்கம் தெரிவிப்பது போலாகிவிடும் என ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு

0 222

பாலஸ்­தீ­னர்கள் கடு­மை­யான துய­ரங்­க­ளையும் பெரும் இழப்­புக்­க­ளையும் சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். இது­வ­ரை­யிலும் அணி­சேரா நாடு­களின் அமைப்பு அமை­தி­காத்­தது. காஸா எல்­லைகள் அழி­வ­டையும் வேளையில் நாம் எவ்­வாறு அமை­தி­ காப்­பது? அந்த மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை போலவே அங்கு அதி­க­ள­வான அப்­பாவி சிவில் மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். அமைதி காப்­பதால் நாமும் அதற்கு இணக்கம் தெரி­விப்­பதை போல் உள்­ளது என அணி­சேரா நாடு­களின் 19 ஆவது அரச தலை­வர்கள் மாநாட்டில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், டிஜிட்டல் பிரி­வினை மற்றும் பெரும் அழி­வுக்கு வழி­வ­குக்கும் ஆயு­தங்கள் வாயி­லாக, அணி­சேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் அபி­வி­ருத்தி அடைந்­து­வரும் மற்றும் அபி­வி­ருத்தி அடைந்த நாடுகள் மத்­தியில் பெரும் சம­நிலை அற்ற தன்மை உரு­வா­கி­யுள்­ளது என்றும் அதனால் சிறந்த உலகை உரு­வாக்க வலு­வான மற்றும் ஒன்­றி­ணைந்த அணி­சேரா அமைப்பின் ஊடாக மேற்­படி பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்வை எட்ட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

உகண்டா -கம்­பாலா நகரில் “உலக சுபீட்­சத்­துக்­காக ஒன்­றி­ணைந்த ஒத்­து­ழைப்­புக்­களை மேலும் பலப்­ப­டுத்­திக்­கொள்ளல்” என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் கடந்த 19 ஆம் திகதி ஆரம்­ப­மான அணி­சேரா அமைப்பின் 19 ஆவது அரச தலை­வர்கள் மாநாட்டில் உரை­யாற்­றிய போதே ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.

உகண்டா குடி­ய­ரசு ஜனா­தி­பதி யொவேரி முசே­வே­னியின் (Yoweri Museveni) தலை­மையில் 120 நாடு­களின் அரச தலை­வர்கள் மற்றும் பிர­தி­நி­தி­களின் பங்­கேற்­புடன் இந்த மாநாடு நடை­பெற்­றது.

மாநாட்டில் மேலும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, “அணி­சேரா நாடு­களின் 19 மாநாட்­டிற்கு தலைமை ஏற்­றுள்­ள­மைக்­காக உகண்டா ஜனா­தி­பதி யொரேவி முசே­வே­னிக்கு பாராட்டு தெரி­விக்­கிறேன். தென் து­ருவ நாடு­க­ளுக்­கி­டையில் பொது தெரி­வுகள் காணப்ப­ட வேண்­டிய தீர்­மா­ன­மிக்க தரு­ணத்தில் உகண்டா அதற்­கான களத்தின் தலை­மைத்­து­வத்தை ஏற்­றுள்­ளமை காலோ­சி­த­மா­ன­தாகும்.

தொற்­றுநோய் பரவல், கடன் சுமை, கால­நிலை அனர்த்­தங்கள், புதிய உல­க­ளா­விய போட்­டிகள் மற்றும் உலக நாடு­களும் தென் துரு­வமும் எதிர்­கொண்ட பல்­வேறு அழுத்­தங்­களின் பின்னர் நடத்­தப்­படும் முத­லா­வது அணி­சேரா நாடு­களின் மாநாடு இது­வாகும்.

நாம் இங்கு சந்­திக்கும் வேளையில் காஸா பகு­தி­க­ளிலும் அதற்கு அப்­பா­லான பகு­தி­க­ளிலும் மனி­தா­பி­மான மோதல்கள் நீண்டு செல்­கின்­றன. மூன்று மாதங்­க­ளுக்கும் மேலாக பாலஸ்­தீன சிவில் மக்கள் கடு­மை­யான துய­ரங்­க­ளையும் இழப்­புக்­க­ளையும் சந்­தித்­து­வ­ரு­வ­தோடு, வல­யத்தின் பாது­காப்பு மற்றும் நிலத்­தன்மை என்­ப­னவும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளன.

இது­வ­ரை­யிலும் அணி­சேரா நாடு­களின் அமைப்பு அமை­தி­காத்­தது. காஸா எல்­லைகள் அழி­வ­டையும் வேளையில் நாம் எவ்­வாறு அமை­தி­காப்­பது? அந்த மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை போலவே அங்கு அதி­க­ள­வான அப்­பாவி சிவில் மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். அமைதி காப்­பதால் நாமும் அதற்கு இணக்கம் தெரி­விப்­பதை போல் உள்­ளது.

உகண்­டாவின் தலை­மையில் நடை­பெறும் அணி­சேரா நாடு­களின் 19 ஆவது மாநாட்டின் ஊடாக காஸா பகு­தி­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் பாலஸ்­தின மக்­களின் சுய நிர்­ணய உரிமை மற்றும் சுயா­தீ­ன­மா­னதும், சுதந்­தி­ர­மா­ன­துமான உரி­மை­களை பறிக்க முடி­யாது என்ற விட­யத்­திற்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­புக்­கு­ரி­யது.

காஸா பகு­திகள் தொடர்பில் தென் ஆபி­ரிக்கா கொண்­டுள்ள உறு­தி­யான நிலைப்­பாட்­டையும் நாம் வர­வேற்க வேண்டும். விரைவில் மனி­தா­பி­மான போர் நிறுத்­தத்­தையும், பணயக் கைதி­களை விடு­விக்கும் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும் என சர்­வ­தேச சமூகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இஸ்ரேல் அல்­லாத தனி இராச்­சி­யத்­துக்குள் இரு இராச்­சி­யங்­க­ளுக்கு தீர்வை தேட முடி­யாது. பாலஸ்­தீனம் இல்­லாமல் எந்த தீர்­வையும் பெற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஐக்­கிய நாடுகள் சபைக்குள் காணப்­படும் யோச­னைகள் மற்றும் இந்த மாநாட்டின் முன்­மொ­ழி­வு­க­ளுக்கு அமைய, மேற்குக் கரை, காஸா பகுதி மற்றும் கிழக்கு ஜெரு­சலேம் ஆகிய பகு­திகள் பாலஸ்­தீ­னத்தின் ஒரு பகு­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். மேலும், காஸா பகு­தியின் இன அமைப்பு மாறக்­கூ­டாது. ஐந்து வரு­டங்­க­ளுக்குள் பாலஸ்­தீன அர­சாங்கம் ஸ்தாபிக்­கப்­பட வேண்டும்

நாம் இப்­போது பனிப்­போரின் பின்­ன­ரான நிலை­மை­களின் இறுதி நிலை மற்றும் மாற்றம் கண்டு வரும் பல்­முனை உலகின் அணு­கு­மு­றை­களை காண்­கிறோம். புவிசார் அர­சியல் முன்­ன­ணியில், முன்­னைய பல­வான்கள் மற்றும் பல­வான்கள் என்ற அந்­தஸ்த்தை தக்­க­வைக்கும் நோக்கில் செயற்­படும் தரப்­பி­னர்­க­ளுக்கு மத்­தியில் மறை­மு­க­மான மற்றும் வெளிப்­ப­டை­யான மோதல்கள் மீண்டும் வெடிப்­ப­தையும் நாம் காண்­கிறோம். ஐரோப்­பாவின் அட்­லாண்டிக் சமுத்­தி­ரத்தின் இரா­ணுவக் கூட்­டணி வலுப்­பெற்­றுள்­ளது. ஆயுதக் கட்­டுப்­பாட்டு தொடர்­பி­லான கடந்த கால ஒப்­பந்­தங்கள் முறிந்­துள்­ளன.

இரா­ணுவச் செலவு வர­லாற்றில் முன்னர் இல்­லாத அளவை எட்­டி­யுள்­ளது. மேலும், அணு ஆயு­தங்கள் குறித்து மீண்டும் பாரிய அளவில் கொள்கை ரீதி­யி­லான கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற வேண்டும். இந்து மற்றும் பசுபிக் சமுத்­தி­ரங்­களின், நம்மைச் சுற்­றி­யுள்ள பகு­திகள் உட்­பட பிராந்­தி­யத்தில் ஒரு புவி­சார்-­மூ­லோ­பாய போட்டி உரு­வாகி வரு­கி­றது. மேலும், விண்­வெளி மற்றும் சமுத்­தி­ரங்கள் மோத­லுக்கு சாத்­தி­ய­மான தளங்­க­ளாக மாறி­விட்­டன.

அணி­சேரா அமைப்பு உங்கள் தலை­மையின் கீழ் மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். மேலும், பல்­முனை உலகில் தென் துரு­வத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நாடு­களின் மிகப்­பெ­ரிய கூட்­டாக அணி­சேரா நாடு­களின் அமைப்பை மாற்றும் பொறுப்பை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

நமது எதிர்­காலம் நம் கையில் உள்­ளது. அதை உரு­வாக்கும் அல்­லது அழிக்கும் திறனும் நம்­மி­டமே உள்­ளது. அதனை நாம் செய்வோம். அணி­சேரா அமைப்பின் 19 ஆவது அரச தலைவர்கள் அமர்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக உகண்டா ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.