சமூகவலைத்தளங்களை இடைநிறுத்தியே திகன கலவரத்தை கட்டுப்படுத்தினேன்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0 174

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
பொய்­யான தக­வல்­களை பரப்­பு­ப­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்கக் கூடி­ய­வ­கையில் நாட்டில் ஊடக கட்­டுப்­பாட்டு சட்டம் அவ­சி­ய­மாகும். சமூ­க வ­லைத்­த­ளங்­களை ஒரு­வார காலத்­துக்கு இடை நிறுத்­தி­யதன் மூலமே திகன கல­வ­ரத்தை கட்­டுப்­படுத்த முடிந்­தது என முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­நிலை காப்புச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் இங்கு மேலும் கூறு­கையில்,
ஊட­கங்­க­ளுக்கு முகா­மைத்­து­வமும், ஊடக கட்­டுப்­பா­டு­களும் இருக்க வேண்டும். நிகழ்­நிலை காப்புச் சட்­டத்தில் சட்­ட­திட்­டங்கள் கடு­மை­யா­ன­தாக இருந்­தாலும் ஊட­கங்கள் தொடர்பில் கட்­டுப்­பா­டுகள் அவ­சி­ய­மாகும். எமது நாட்டில் சில ஊட­கங்கள் மிகவும் மோச­மான முறை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றன.

எனது மூத்த மகளின் வீட்­டுக்குள் திரு­டர்கள் நுழைந்­துள்­ளனர். அரிசி, தேங்காய் போன்ற சமை­ய­லறையில் இருந்த பொருட்­க­ளையே கொண்டு சென்­றுள்­ளனர். எனக்கு கட்­டாரில் அரச தலை­வ­ருக்­காக வழங்­கப்­பட்ட பரி­சொன்றை பொல­ன­றுவை நூத­ன­சா­லையில் வைத்­துள்ளேன். ஆனால் ஊட­க­மொன்றில் காலையில் பத்­தி­ரிகை செய்தி வாசிக்கும் போது அரச தலைவர் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்ட பரிசை தனது மகளின் வீட்டில் வைத்­தி­ருந்­தாக கூறி­யுள்ளனர். அது பொய்­யாகும். நான் நூத­ன­சா­லை­யி­லேயே எனக்கு கிடைத்த பொருட்­களை வைத்­துள்ளேன். நான் ஜனா­தி­ப­தி­யாக இருக்­கும்­போது கிடைத்த அனைத்து பொருட்­க­ளையும் அந்த நூத­ன­சா­லை­யி­லேயே வைத்­துள்ளேன்.

ஆனால் ஊடக நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் தவ­றா­ன­வை­யாக உள்­ளன. இதனை மாற்ற வேண்டும். தவறு செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். எனக்கு கிடைக்­கப்­பெற்ற பொருட்கள் அனைத்­தையும் பொலன்­ன­று­வையில் உள்ள நூத­ன­சா­லைக்கு சென்று பார்த்­துக்­கொள்ள முடியும்.
அத்­துடன் நான் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் திக­னவில் கல­வரம் ஏற்­பட்ட போது ஒரு­வா­ரத்­திற்கு சமூக வலைத்­த­ளங்­களை முடக்­கினேன். அதனை நான் செய்­யாமல் இருந்­தி­ருந்தால் சிங்­கள முஸ்லிம் கல­வரம் நாடு முழு­வதும் ஏற்­பட்­டி­ருக்கும். சமூ­க­வ­லைத்­த­ல­ளங்­களை ஒரு­வார காலத்­துக்கு இடை நிறுத்­தி­ய­தாலே அதனை கட்­டுப்­ப­டுத்த முடிந்­தது. எவ்­வா­றா­யினும் தவ­றி­ழைத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை கொடுக்கும் வகையில் சட்­டங்கள் இருக்க வேண்டும். என்றாலும் இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் மிகவும் இறுக்கமானதாகும். ஊடக ஒழுங்குமுறை, கட்டுப்பாடு அவசியமாகும். இல்லையென்றால் ஊடக உரிமையாளர்களே நாட்டை நிர்வாகம் செய்யும் நிலைமை ஏற்படும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.