சாய்ந்தமருதில் மாணவன் மர்ம மரணம்: மத்ரஸா குறித்து ஆராய்வதற்கு குழு நியமித்தது திணைக்களம்

0 168

(பாறுக் ஷிஹான்)
சாய்ந்தமருதில் உள்ள மத்­ரஸா ஒன்றில் 13 வயதுடைய மாண­வர் ஒருவர் மர்மமான முறையில் உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்பாக விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­கு முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­களம் ஐவரடங்கிய குழுவொன்றை நிய­மித்­துள்­ளது.

அம்­பாறை மாவட்டம் சாய்ந்­த­ம­ருது சந்தை வீதியில் அமைந்­துள்ள கட்­டடம் ஒன்றில் நடாத்­தப்­படும் மத்­ரஸா ஒன்றில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காத்­தான்­கு­டியை சேர்ந்த எம்.எஸ்.முஸ்அப் (வயது-13) எனும் மாணவன் தூக்கில் தொங்கி உயி­ரி­ழந்­த­தாக தெரி­விக்­கப்­பட்டு சாய்ந்­த­ம­ருது பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

மேலும் குறித்த மாண­வனின் மர­ணத்தில் சந்­தேகம் இருப்­ப­தாக பொது­மக்கள் ஒன்று கூடி குறிப்­பிட்ட மத்­ரஸாவின் நிர்­வாகி மீது தாக்­குதல் மேற்­கொள்ள தயா­ரா­கி­ய­வேளை மேல­திக பொலிஸார் அவ்­வி­டத்­திற்கு அழைக்­கப்­பட்ட நிலையில் சாய்ந்­த­ம­ருது பொலி­ஸாரால் மத்­ரஸா நிர்­வா­கி­யா­கிய மௌலவி அழைத்து செல்­லப்­பட்டு கைது செய்­யப்­பட்டார். பின்னர் அவர் மீது வழக்கு தாக்கல் மேற்­கொள்­ளப்­பட்டு மன்றின் உத்­த­ர­விற்­க­மைய விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­ப­வத்தை அடுத்து இவ்­வி­வ­காரம் தொடர்­பாக நீதிக்­கான மையம் அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி ஷஃபி எச்.இஸ்­மாயில் உள்­ளிட்ட சில தரப்­பி­னரால் முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட முறைப்­பாட்­டிற்­க­மைய குறித்த மத்­ரஸா தொடர்பில் அக்­குழு துரித விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இவ்­வி­சா­ர­ணையை முன்­னெ­டுக்கும் குழுவில் அம்­பாறை மாவட்ட செய­லக அதி­காரி ஒருவர் உட்­பட 4 பிர­தேச செய­ல­கங்­களில் கட­மை­யாற்றும் 04 அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். அவர்கள் குறித்த சம்­பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இவ்விடயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றினையும் அக்குழுவினர் வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.