31 ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரைக்கான பதிவு கட்டணத்தை செலுத்தி பயணத்தை உறுதி செய்க

0 183

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு பதிவு செய்துள்ளோர், தாம் மீள பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ண­மான 25 ஆயிரம் ரூபாவை எதிர்­வரும் 31 ஆம் திக­திக்கு முன்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் செலுத்தி தங்கள் யாத்­தி­ரையை உறுதி செய்து கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு இது­வரை 3400 பேர் பதிவு செய்து கொண்­டுள்ள போதும் 400 பேரே 25ஆயிரம் ரூபா பதிவுக் கட்­ட­ணத்தைச் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் 3000 பேர் இது­வரை பதிவுக் கட்­டணம் செலுத்தவில்லை எனவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் இஸட். ஏ.எம்.பைசல் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கடந்த வரு­டங்­களில் ஹஜ் யாத்­தி­ரைக்கு 25 ஆயிரம் ரூபா செலுத்தி பதிவு செய்து கொண்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் அப்­ப­தி­வினை இரத்துச் செய்து 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­ட­ணத்தை மீளப்­பெற்று புதி­தாக பதிவு செய்து கொண்­டி­ருந்தால் அதற்கு அந்தத் தொகையைச் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

பதிவுக் கட்­டணம் செலுத்­தி­யுள்ள விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு மாத்­தி­ரமே பதிவின் அடிப்­ப­டையில் யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.