ஹஜ் விவகாரம்: இவ்வருடம் 500 மேலதிக கோட்டா வழங்குங்கள்

மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவூதி அரேபியாவின் ஹஜ்-உம்ரா அமைச்சரிடம் கோரிக்கை

0 203

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையின்­போ­து இலங்கைக்கு மேல­தி­க­மாக 500 கோட்டா வழங்­கு­மாறு புத்தசாசன சமய மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க சவூதி அரே­பி­யாவின் ஹஜ் உம்ரா அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இக்­கோ­ரிக்கை அண்­மையில் சவூதி அரே­பி­யாவில் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கைச்­சா­த்­திட்ட போது எழுத்­து­மூலம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்டா ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் 500 மேல­திக கோட்­டா­வுக்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மேலும் இவ்­வ­ருடம் இலங் கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள 3500 கோட்­டாவின் அடிப்­ப­டையில் 35 பேஸா விசாக்­களே வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு பேஸா விசா வழங்­கப்­ப­டா­மை­யினால் மொத்தம் 150 பேஸா விசாக்கள் வழங்­கு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு வெளி­நா­டு­களின் பிரஜா உரிமை பெற்­றுள்ள வெளி­நாட்டு கடவுச் சீட்டிைனக் கொண்­டுள்ள இலங்­கையர் 200 பேர் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் கட­மை­யினை தங்கள் குடும்­பத்­தா­ருடன் மேற்­கொள்­வ­தற்கு அனு­மதி வழங்­கு­மாறும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்ஸார் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.