புத்தளம் காதி நீதிவானுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெண்கள்!

0 230

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்தச் சட்­டத்­தினை அமுல்படுத்­து­வ­தற்­காக நாடெங்கும் 65 காதி­ நீதி பிரி­வு­களில் காதி­ நீ­தி­மன்­றங்கள் இயங்கி வரு­கின்­றன.

நாட்டின் பல பகு­தி­களைச் சேர்ந்த காதி ­நீ­தி­ப­திகள் தொடர்­பாக பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­விற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. அவை தொடர்பில் நட­வ­டிக்­கைகளும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­ன்ற­ன.
காதி­நீ­தி­ப­தி­களின் நிய­மனம் வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெற்­றி­டங்கள் வெளி­யி­டப்­பட்டு விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு நேர்­முகப் பரீட்சை நடத்­தப்­பட்டு மூன்று வருட காலத்­திற்கு நிய­மனம் வழங்­கப்­ப­டு­கி­றது. சில சந்­தர்ப்­பங்­களில் ஒரு வருட காலத்­திற்கே நிய­மனம் வழங்­கப்­ப­டு­கி­றது. நேர்­முகப் பரீட்சை நீதி­ப­தி­க­ளி­னாலே நடத்­தப்­ப­டு­கி­றது.

காதி­ நீ­தி­ப­தி­களின் தவ­றான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­விற்கே முறைப்­பாடு செய்­யப்­பட வேண்டும். இதேவே ளை காதி­ நீ­தி­ப­தி­யொ­ரு­வரின் தீர்ப்பு பக்­கச்­சார்­பாக இருந்தால் காதிகள் மேன்­மு­றை­யீட்டு சபைக்கு மேன்­மு­றை­யீடு செய்­யலாம். மேலும் காதி­ நீ­தி­மன்­ற­மொன்றில் வழக்கு விசா­ர­ணையின் கீழ் இருக்­கும்­போது நீதி­பதி பக்­கச்­சார்­பாக நடந்து கொள்­கிறார் என ஒரு தரப்­பினர் கரு­தினால், அவ்­வ­ழக்­கினை விசா­ரிக்க வேறொரு காதி­ நீ­தி­மன்­றினை கோரலாம். நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவே இந்த மாற்­றத்­தினை செய்யும்.

புத்­தளம் மாவட்ட காதி­ நீ­தி­பதி தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக பாரிய குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தற்­போ­தைய புத்­தளம் காதி­ நீ­தி­மன்ற காதி நீ­தி­பதி கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒரு­வ­ருட காலத்­துக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவர் பத­விக்கு வந்­ததும் புத்­தளம் பிர­தேச அர­சியல் தலை­வர்­க­ளாலும் வேறு சில­ராலும் பலத்த எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது. அர­சி­யல்­வா­தி­யொ­ரு­வ­ரினால் தாக்­கு­த­லுக்கும் உள்­ளானார். இவர் காதி ­நீ­தி­ப­தி­யாக நிய­மனம் பெற தகு­தி­யற்­றவர் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் கடிதம் ஏற்­க­னவே அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அமைதி ஆர்ப்­பாட்டம்
தற்­போ­தைய புத்­தளம் காதி நீ­தி­ப­திக்கு எதி­ராக கடந்த 11ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை புத்­த­ளத்தில் பாரிய அமைதி ஆர்ப்­பாட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

பெண்­க­ளுக்­கான நீதி­ மையம் இந்த அமைதி ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

 

ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த பெண்­களும், ஆண்­களும் புத்­தளம் காதி­ நீ­தி­ப­திக்கு எதி­ராக பல்­வேறு சுலோ­கங்­களை ஏந்­தி­யி­ருந்­தனர். இந்த ஆர்ப்­பாட்டம் புத்­தளம் காதி­ நீ­தி­மன்­றுக்கு எதி­ரா­கவும் இடம்­பெற்­றது. கடந்த 11 ஆம் திகதி காலை இடம்­பெற்ற இந்த ஆர்ப்­பாட்­டத்தில் ஐக்­கிய மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் புத்­தளம் மாவட்ட உதவிப் பணிப்­பாளர் ஏ.எம்.ரிபாயும் கலந்து கொண்­டி­ருந்தார்.

பாதிக்­கப்­பட்ட பெண்­களின் நீதி­ மையம் ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த அமைதி ஆர்ப்­பாட்­டத்தில் பங்கு கொண்­டி­ருந்­த­வர்கள் காதி ­நீ­தி­ப­தியின் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து பதா­தை­களை ஏந்­தி­யி­ருந்­தனர்.
‘காதி­நீ­தி­ப­தியின் முறை­கே­டான நட­வ­டிக்­கை­களை நாம் கண்­டிக்­கிறோம்’
‘பணம் இருப்­ப­வர்­க­ளிடம் சரிந்து விடு­கி­றது வழக்கு’
‘இந்தக் காதியின் அநீ­திக்கு முடி­வில்­லையா?’
‘வித­வை­களை உற்­பத்தி செய்­கி­றது காதியின் கறை படிந்த கரங்கள்’
‘நீதிக்­கான இடத்தில் காதியின் அநீதி நடக்­கி­றது’
எனும் சுலோ­கங்­களை ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டோர் ஏந்­தி­யி­ருந்­தனர்.

பெண்கள் நீதி­மை­யத்தின்
தலைவி சர்­ஜானா பானு
பெண்கள் நீதி­மை­யத்தின் தலைவி சர்­ஜானா பானுவை விடி­வெள்ளி தொடர்­பு­கொண்டு கடந்த 11 ஆம் திகதி புத்­தளம் காதி­ நீ­தி­ப­திக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட அமைதி ஆர்ப்­பாட்டம் தொடர்பில் விய­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

‘‘நான் பலாவி புழு­தி­வயல் பகு­தியைச் சேர்ந்­தவள். புத்­தளம் காதி­ நீ­தி­மன்­றினால் நானும் பாதிக்­கப்­பட்ட ஒரு பெண். நான் எனது குடும்பப் பிரச்­சி­னைக்­காக பல தட­வைகள் புத்­தளம் காதி­ நீ­தி­மன்றப் படி­களை ஏறி­யி­றங்­கி­யி­ருக்­கிறேன்.

நான் புத்­தளம் காதி நீதி­மன்றில் 2019.02.26ஆம் திகதி மனைவி தாப­ரிப்பு, பிள்ளை தாப­ரிப்பு ஆகிய இரு வழக்­கு­களும் சமா­தா­னத்­துக்­கான ஒரு வழக்கும் தாக்கல் செய்தேன். அப்­போ­தி­ருந்த புத்­தளம் காதி­ நீ­தி­பதி பிள்ளை தாப­ரிப்பு வழக்கில் தற்­கா­லிக தீர்ப்­பாக பிள்­ளைக்கு மாதம் 7500 ரூபா செலுத்த வேண்­டு­மென எனது கண­வ­ருக்கு உத்­த­ர­விட்டுத் தீர்ப்பு வழங்­கி­யி­ருந்தார். இது தவிர ஏனைய இரு வழக்­கு­க­ளுக்கும் தீர்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது புத்­தளம் காதி­ நீ­தி­ப­தி­யாக பதவி வகிக்கும் நீதி­பதி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிய­மனம் பெற்றார். அவர் நிய­மனம் பெற்­றதும் எனக்கு வழக்கு இலக்கம் குறிப்­பி­டப்­ப­டாத அறி­வித்தல் ஒன்று கிடைக்­கப்­பெற்­றது. அப்­போது நான் சுக­யீ­ன­மாக இருந்­ததால் விசா­ர­ணைக்கு சமு­க­ம­ளிக்க முடி­யாது என கடி­த­மொன்று (Speed post) அனுப்­பினேன். என்­றாலும் எனது வழக்­குக்கு அதன் பின்பு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

பின்பு காதி­ நீ­தி­ப­தி­யி­ட­மி­ருந்து எனது கணவர் இரண்டாம் திரு­மணம் செய்து கொள்ளப் போவ­தாக அறி­வித்தல் ஒன்று தபால் மூலம் 2023.07.04 ஆம் திகதி வந்­தது.

நான் இதற்கு காதி நீதி­ப­திக்கு பதிவுத் தபால் மூலம் 2023.07.11ஆம் திகதி பதில் அனுப்­பினேன். எனது கண­வ­ருக்கு இரண்டாம் திரு­ம­ணத்­துக்­கான அனு­மதி வழங்­கு­வ­தற்கு முன்பு எனக்கு தாப­ரிப்பு பணம் பெற்றுத் தரு­வ­தோடு முன்னாள் காதி­ நீ­தி­பதி எனது பிள்­ளைக்கு தாப­ரிப்பு வழங்­கு­மாறு எனது கண­வ­ணுக்கு உத்­த­ர­விட்ட தற்­கா­லிக தீர்ப்பு உறுதி செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் கடி­த­மூலம் கேட்­டி­ருந்தேன். ஆனால் எனக்கு பதில் வர­வில்லை.

பின்பு இரண்டு வாரங்­களின் பின்பு காதி நீ­தி­வானை நேரில் சென்று சந்­தித்தேன். நான் வறுமைக் கோட்டில் இருப்­ப­தா­க கூறி எனக்கும், பிள்­ளைக்கும் தாப­ரிப்பு பெற்றுத் தர வேண்­டு­மெ­னவும் கேட்டேன். எழுத்­து­மூலம் முறைப்­பாட்­டினைக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன். அதற்கு ஏற்­பாடு செய்­வ­தாகக் கூறிய காதி நீதி­பதி எதுவும் செய்­ய­வில்லை.

இந்­நி­லையில் எனது கண­வ­ருக்கு இரண்­டா­வது திரு­ம­ணத்­துக்­கான அனு­மதி 2023.08.11ஆம் திகதி காதி­யினால் வழங்­கப்­பட்டு கணவர் அடுத்த நாேள 2023.08.12 இல் இரண்­டா­வது திரு­மணம் செய்து கொண்­டுள்ளார். இவ்­வி­பரம் பின்பே எனக்குத் தெரிய வந்­தது.

கணவரின் இரண்­டா­வது திரு­ம­ணத்­திற்­கான விண்­ணப்பம் பள்­ளி­வாசல் அறி­வித்தல் பல­கையில் 30 நாட்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. பள்­ளி­வா­சல் ­த­லைவர் எனது கண­வரின் தந்­தையின் தம்­பி­யாவார்.

எனது கண­வ­ருக்கும் எனக்­கு­மி­டையில் சந்­திப்­பொன்­றினை ஏற்­பாடு செய்­யு­மாறு காதி நீ­தி­வானை வேண்­டினேன். சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வில்லை. இது முன்­னைய காதி­ நீ­திவான் விட்ட பிழை என்றார். ஆவ­ண­மொன்றில் கையொப்­ப­மி­டு­மாறு வேண்­டினார். முடி­யா­தென்றேன். அதன் பின்பு என்­னையும் எனது தந்­தை­யையும் நீதி­மன்­றி­லி­ருந்து வெளி­யேற்­றினார்.
எனது வழக்கு கோவையின் விசா­ர­ணை­களின் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பிர­தி­களைக் கோரி சட்­டத்­த­ர­ணியின் கடி­தத்தைக் கொடுத்தேன். அதை மடித்து வைத்­து­விட்டு ‘நீங்கள் நினைக்கும் மாதிரி வழக்கு பிர­தி­களைத் தர முடியாது’ என்றார்.

2023.11.02 ஆம் திகதி தலாக் வழக்கு விசா­ர­ணைக்கு வரு­மாறு எனக்கு அறி­வித்தல் வந்­தது. விருப்­ப­மில்­லா­த­வ­ருடன் வாழ முடி­யாது என்றார். முதலில் எனது தாப­ரிப்பு பற்றி பேசுங்கள் என்றேன். பிள்­ளைக்கு மாதம் 7500 ரூபா வாங்கித் தரு­கிறேன். உனக்கு வாங்கித் தர முடி­யாது என்றார்.

முதலில் சமா­தானம் பேசுங்கள். பின்பு மனைவிக்கா­ன தாப­ரிப்பு பற்றி பேசுங்கள். அதன் பின்பு தலாக் பற்றி பேசுங்கள் என்றேன்.
தலாக் கொடுக்கும் அதி­காரம் எனக்கு உள்­ளது. நீ எங்கு வேண்­டு­மா­னாலும் போ என்றார். நான் வெளி­யே­றினேன். இங்கு கையொப்பம் வைத்தால் வா. இல்­லையேல் வராதே என்றார் நீதி­பதி.

நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு நேர­டி­யாக சென்று முறைப்­பாடு செய்­வ­தற்கு எங்­க­ளிடம் பணம் இல்லை. இது தொடர்பில் எழுத்து மூலம் முறைப்­பாடு செய்­தி­ருக்­கிறேன் என்றார் பெண்கள் நீதி­மை­யத்தின் தலைவி.

நாங்கள் கடந்த 11ஆம் திகதி புத்­த­ளத்தில் புத்­தளம் காதி நீதி­ப­திக்­கெ­தி­ராக அமைதி ஆர்ப்­பாட்­ட­மொன்­றினை புத்­தளம் விவ­சாய திணைக்­க­ளத்­திற்கு முன்­பாக ஆரம்­பித்து நடாத்­தினோம். புத்தளம் மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கும் சென்று முறையிட்டோம். முறைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறினார்கள். இரண்டு வாரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் மாவட்ட ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

புத்தளம் காதி நீதிபதி
எம்.ஆர்.மொஹமட்
தற்போது கடமையில் இருக்கும் புத்தளம் காதி நீதிபதி எம்.ஆர்.மொஹமட்டை தொடர்புகொண்டு விடிவெள்ளி இது தொடர்பில் வினவியது.
‘என் மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. நான் மறுக்­கிறேன். இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான எனது பதிலையும் விளக்கத்தையும் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளேன் என்றார்.

காதி நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களை பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அபிலாஷையாக உள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.