நாடளாவிய ரீதியில் 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவிப்பு

0 185

(எம்.ஆர்.எம்.வசீம், இரா­ஜ­துரை ஹஷான்)
தேசிய மற்றும் மாகாண மட்ட பாட­சா­லை­களில் நிலவும் ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக 36 ஆயி­ரத்து 385 பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­களை நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். அத்­துடன் 14,385 மாகாண மட்ட ஆசி­ரி­யர்­களை நிய­மிப்­பது தொடர்­பிலும் மேலும் 21,000 அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களை நிய­மிப்­பது தொடர்­பிலும் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மனு மீதான விசா­ர­ணைகள் இந்த வாரத்தில் இடம்­பெற்று அதற்­கான தீர்ப்பு கிடைத்­ததும் உட­ன­டி­யா­கவே அந்த நிய­ம­னங்­களை வழங்­கு­வது தொடர்­பான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் ரோஹிணி குமாரி விஜே­ரத்ன எழுப்­பிய கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்கும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான வெற்­றிடம் காணப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆசி­ரி­யர்கள் ஓய்வு பெற்­றுள்­ளமை, விடு­மு­றையில் சென்­றுள்­ளமை மற்றும் ஆசி­ரி­யர்கள் பதவி வில­கி­யுள்­ளமை உள்­ளிட்ட கார­ணங்­களால் ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

அந்த வகையில் அதி­க­ளவு ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் மாகாண மட்ட பாட­சா­லை­க­ளி­லேயே காணப்­ப­டு­கின்­றன. மாகாண மட்ட பாட­சா­லை­களில் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக பட்­ட­தா­ரி­களை நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ், சிங்­கள, ஆங்­கில ஆசி­ரியர் வெற்­றி­டங்­க­ளுக்­காக பட்­ட­தா­ரிகள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். 60 வயது நிறை­வ­டைந்­துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திக­தி­யுடன் 6018பேர் ஓய்வு பெற்­றுள்­ளனர்.
அத்­துடன் அமைச்­ச­ரவை தீர்­மா­னத்­தின்­படி பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­தமை, விடு­மு­றையில் சென்­றுள்­ளமை மற்றும் ஓய்வு பெற்­றுள்­ளமை கார­ண­மாக மாகாண மட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செய­லா­ள­ரினால் அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­க­ளுக்கு இவ்­வாறு இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்­கான அறி­விப்பு விடுக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அந்த வகையில் மேல் மாகா­ணத்­திற்கு 5000 பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­களும் தென் மாகா­ணத்­திற்கு 1028, மத்­திய மாகா­ணத்­திற்கு 1067, வட­மத்­திய மாகா­ணத்­திற்கு 1408, வடமேல் மாகா­ணத்­திற்கு 665, ஊவா மாகா­ணத்­திற்கு 590, சப்­ர­க­முவ மாகா­ணத்­திற்கு 877 என மொத்­த­மாக 10,635 ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

அது தொடர்பில் அறி­விப்பு செய்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு பரீட்சை நடத்­தப்­பட்டு நேர்­முகப் பரீட்­சைக்கு அழைக்­கப்­பட்டு நிய­மனம் வழங்­கு­வ­தற்கு முற்­ப­டு­கையில் நீதி­மன்­றத்தில் அதற்கு எதி­ராக மனு தாக்கல் செய்­யப்­பட்ட நிலையில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளதால் நேற்­றைய தினம் இரண்டு வழக்­குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது..
அந்த வகையில் 10 ஆயி­ரத்து 635 பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­களை நிய­மிப்­பது தொடர்பில் தேவை­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

அதற்கு மேல­தி­க­மாக விஞ்­ஞானம், கணிதம், மொழி, சர்­வ­தேச மொழி, தொழில்­நுட்பம் ஆகிய பாடங்­க­ளுக்­காக 5450 பட்­ட­தா­ரி­களை இணைத்துக் கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி கிடைத்­தது. அவற்றில் 1700 பட்­ட­தா­ரி­களை தேசிய பாட­சா­லை­க­ளுக்கு நிய­மிப்­ப­தற்கு விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன. கல்விப் பொது தரா­தர உயர்­தரப் பரீட்சை நிறைவு பெற்றதும் இந்த நியமனங்களை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக அது தடைப்பட்டது. அது தொடர்பான வழக்கு தீர்ப்பு விரைவில் கிடைத்ததும் அவர்களையும் ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.