வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தனியான பிரிவு : ஜனாதிபதி

0 195

வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் கவனம் செலுத்த தனி­யான பிரிவு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­படும் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­துள்ளார்.

கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்­பாண மாவட்ட செய­ல­கத்தில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ் மாவட்ட சர்­வ­மதப் பேரவை உட்­பட சமயத் தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

இச்­சந்­திப்பின் போது மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான் யாழ் மாவட்ட முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் ஏற்­பட்­டுள்ள பின்­ன­டை­வு­களை புள்­ளி­வி­வ­ரங்­க­ளுடன் எடுத்­துக்­கூறி நிவர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரிக்­கையை முன்­வைத்­ததும் இது தொடர்­பான ஆவ­ணங்­க­ளையும் ஜனா­தி­ப­திக்கு வழங்கி வைத்தார்.

இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்­லிம்­க­ளு­டைய மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான பிரச்­சி­னையை ஆரா­யவும் தீர்வு காணவும் தனி­யான ஒரு பிரிவு ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தாக கூறியதுடன் நடவடிக்கை எடுக்கும்படி செயலாளருக்கு இக்கூட்டத்திலேயே பணிப்புரையும் வழங்கினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.