(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு இவ்வருடம் இலங்கைக்கு வழங்கியுள்ள 3500 ஹஜ் விசாக்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பூரணப்படுத்துமாறு அரச ஹஜ் குழுவைப் பணித்துள்ளது.
இதுவரை 3000 பேர் ஹஜ் யாத்திரைக்குத் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் எஞ்சியுள்ள 500 பேருக்கான பதிவினை உடனடியாக மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஸ்லிம்களைக் கோரியுள்ளது. பதிவுகளை இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்.
இது தொடரப்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என்.நிலோபர் அனைத்துப் பள்ளிவாசல்களின் நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார். குறிப்பிட்ட அறிவித்தலை ஜும்ஆ தொழுகையின் பின்பு அறிவிக்குமாறும் , விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தும் படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திணைக்களத்தில் பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் பதிவை உறுதிப்படுத்துவதறக்காக BOC ஹஜ் கணக்கு இல 2327593 க்கு 25 ஆயிரம் ரூபா செலுத்தி வங்கி பற்றுச்சீட்டை திணைக்களத்துக்கு சமர்ப்பித்து திணைக்களத்தால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
3500க்கு மேற்படும் பதிவுகள் இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli