மனித உரிமைகளை மீறுகிறதா ‘யுக்திய’ சோதனை நடவடிக்கை?

0 291

பதில் பொலிஸ் மா அதி­ப­ராக தேச­பந்து தென்­னகோன் நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் ‘யுக்­திய’ எனும் பெய­ரி­லான பாரிய சோதனை நட­வ­டிக்­கையில் இது­வரை ஆயிரக் கணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் ஏரா­ள­மான போதைப் பொருட்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இந்­ந­ட­வ­டிக்­கை­யின்கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 17 – முதல் 31 ஆம் திக­தி­வ­ரை­யான வெறும் இரண்டு வார­கா­லப்­ப­கு­தியில் 20,000 க்கும் மேற்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் கைது­செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சு அறி­வித்­துள்­ளது.

போதைப்­பொருள் கடத்தல் மற்றும் போதைப்­பொருள் பாவ­னையை இல்­லா­தொ­ழிக்கும் நோக்­கி­லேயே நாட­ளா­விய ரீதியில் ‘யுக்­திய’ சோதனை மற்றும் கைது நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் திணைக்­களம் தெரி­விக்­கி­றது.

எனினும் இந்த சோதனை நட­வ­டிக்­கை­களின் போது பொது மக்­களின் மனித உரி­மைகள் பாரிய அளவில் மீறப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

யுக்­திய நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­டைய வகையில் இடம்­பெறும் சித்­தி­ர­வ­தைகள், மிக­மோ­ச­மாக நடத்­தப்­படல் மற்றும் தன்­னிச்­சை­யாகக் கைது­செய்து தடுத்­து­வைத்தல் போன்ற சம்­ப­வங்கள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு தனது தீவிர கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தற்­போ­தைய சட்ட அமு­லாக்க செயன்­முறை தொடர்பில் ஜனா­தி­ப­தியும், பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­சரும், இலங்கை அர­சாங்­கமும் அதிக அவ­தானம் செலுத்­த­வேண்டும் என்றும் ஆணைக்குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

‘‘போதைப்­பொருள் கடத்தல் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய குற்­றங்­களை முறி­ய­டிப்­பதே ‘யுக்­திய’ நட­வ­டிக்­கையின் நோக்கம் எனக் கூறப்­பட்­டது. திட்­ட­மி­டப்­பட்ட குற்­றங்­களைத் தடுப்­பதும், ஆபத்து விளை­விக்கும் போதைப்­பொருள் கடத்­தலை முறி­ய­டிப்­பதும் அவ­சியம் என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றோம். இருப்­பினும் இந்­ந­ட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­டைய வகையில் இடம்­பெறும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்தல், மிக­மோ­ச­மாக நடத்­துதல், தன்­னிச்­சை­யாகக் கைது­செய்து தடுத்­து­வைத்தல் என்­பன பற்­றிய பல முறைப்­பா­டுகள் எமக்குக் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இது­கு­றித்து தீவிர கரி­ச­னையை வெளிப்­ப­டுத்தி அண்­மையில் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்கை தொடர்­பிலும் நாம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளோம்’’ என்றும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது.

இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 11 ஆவது சரத்தின் பிர­காரம் இந்­நாட்டுப் பிர­ஜைகள் அனை­வரும் சித்­தி­ர­வ­தைகள், மிக மோச­மாக மனிதத் தன்­மை­யின்றி நடாத்­தப்­படல் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­கான அடிப்­படை உரி­மையைக் கொண்­டி­ருக்­கின்­றனர். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இவ்­வு­ரி­மையை மட்­டுப்­ப­டுத்­த­வி­ய­லாது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்கும் பொலிஸ் அதி­கா­ரிகள் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் சந்­தேக நபரின் இவ்­வு­ரி­மைக்கு மதிப்­ப­ளிக்­க­வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது இளை­ஞர்கள் உள்­ள­டங்­க­லாக பலர் பொலி­ஸாரால் மிக­மோ­ச­மா­கவும், அவ­ம­ரி­யா­தை­யா­கவும் நடத்­தப்­பட்ட சம்­ப­வங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவ­லை­ய­டை­கின்றோம். அவை­கு­றித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் மாத்­திரம் ஆணைக்­கு­ழு­வுக்கு 200 க்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றி­ருக்கும் பின்­ன­ணியில், இவ்­வா­றான சம்­ப­வங்கள் அதிர்ச்­சி­யூட்­டு­கின்­றன. அது­மாத்­தி­ர­மன்றி சித்­தி­ர­வ­தைக்குப் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் எனவும், பாதிக்­கப்­பட்ட நப­ருக்கு நட்­ட­ஈடு வழங்­க­வேண்டும் எனவும் உயர்­நீ­தி­மன்றம் தீர்ப்­ப­ளித்த பின்­னரும் அச்­சித்­தி­ர­வ­தை­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் உயர்­ப­த­வி­களைத் தொடர்ந்து வகிக்­கின்­றனர். மேலும் தனியார் இல்­லங்கள் சோத­னை­யி­டப்­ப­டும்­போதும், சந்­தே­க­ந­பர்கள் கைது­செய்­யப்­ப­டும்­போதும் பொலி­ஸா­ருடன் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இருப்­ப­தா­கவும், அதன்­போது எடுக்­கப்­பட்ட காணொ­ளிகள் தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­களில் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­வ­தா­கவும் அறி­ய­மு­டி­கின்­றது. இது குறித்த நபரின் அந்­த­ரங்க உரிமை மீது நிகழ்த்­தப்­ப­டு­கின்ற மிக­மோ­ச­மான மீற­லாகும்.

மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளவாறு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கதல்ல. அந்த வகையில் யுக்திய வேலைத்திட்டம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அப்பாவி மக்களைப் பாதிக்காத வகையிலும் போதைப் பொருள் குற்றவாளிகளைக் குறிவைத்ததாகவும் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.