இஸ்லாம் பாட ஆசிரிய விண்ணப்பதாரிகள் புறக்கணிக்கப்படும் அபாயம்

கல்வி அமைச்சுடன் பேச்சு நடத்த தயார் என்கிறது முஸ்லிம் லீக் சம்மேளனம் 20 வருடங்களாக மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை எனவும் சுட்­டிக்­காட்­டு

0 261

கல்­வி­யியற் கல்­லூரி ஆட்­சோ்ப்பில் இஸ்லாம் பாட ஆசி­ரிய விண்­ணப்­ப­தா­ரிகள் மீண்­டு­மொ­ரு­முறை புறக்­க­ணிக்­கப்­படும் அபாயம் ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்­ன­ணி­க­ளினம் சம்­மே­ளனம் இது குறித்து உட­ன­டி­யாக கல்வி அமைச்­ச­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

சம்­மே­ள­னத்தின் தேசியத் தலைவர் எம்.என்.எம்.ஷாம் நவாஸ் வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யி­லேயே இந்த விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
அரச பாட­சா­லை­களில் இஸ்லாம் பாடத்தை தமிழ் மற்றும் சிங்­கள மொழி­யில் கற்­பிப்­ப­தற்­காக நாட­ளா­வி­ய ­ரீ­தியில் சுமார் 1,500 வெற்­றி­டங்கள் நில­வு­கின்­றது. கடந்த 20 வருட கால­மாக மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னமும் வெறும் அர­சியல் வாக்­கு­று­தி­யா­கவே இருந்­து­ வ­ரு­கி­றது. 2022 ஆண்டு நடை­பெற்ற க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சையில் 2,590 (8.11%) மாண­வர்கள் இஸ்லாம் பாடத்தில் சித்­தி­ய­டை­ய­வில்லை, அதே­போல 4,305 (13.48%) மாண­வர்கள் வெறு­மனே சாதா­ரண தர சித்­தி­யி­னையே பெற்­றி­ருந்­தனர்.

நிலைமை இவ்­வாறு இருக்க குறிப்­பாக 2023/24 ஆண்­டுக்­கான கல்­வி­யியற் கல்­லூரி மாணவர் அனு­மதி விண்­ணப்பம் கோரலில் இஸ்லாம் சமய பாட ஆசி­ரிய விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்­கான இடம் அட்­டா­ளைச்­சே­னைக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தாமல் விரி­வு­ப­டுத்­து­வ­துடன் க.பொ.உ. த. வெட்டுப் புள்­ளி­க­ளுடன் ஏனைய சம­யங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது போன்­ற மேல­திக புள்­ளிகள் அல் ஆலிம், அஹ­திய்யா இறுதிப் சான்­றிதழ் பரீட்சை அல்­லது தர்­மாச்­சா­ரிய( தீனியாத்) பரீட்சை சான்­றி­தழ்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் வேண்­டு­கி­றது.

2022.07.22 இல் வெளி­வந்த 2290 இலக்க வர்த்­த­மா­னியின் பிர­காரம் இஸ்லாம் சமய பாட தகை­மைகள் புறக்­க­ணிக்கப்பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக தஹம் இறுதிச் சான்­றிதழ் பரீட்சை மற்றும் தீனியாத் தர்­மாச்­சா­ரிய பரீட்சை வர்த்­த­மா­னியில் மேல­திக தகை­மை­க­ளா­கக் கரு­தப்­ப­ட­வில்லை. இந்த தவறு அடுத்த வாரம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள வர்த்­த­மா­னியில் திருத்­தி­ய­மைக்­கப்­பட வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்­ன­ணி­க­ளின் சம்­மே­ளனம் கல்வி அமைச்­சரை வேண்­டியுள்­ள­து.

அனைத்து அரச ஆட்­சேர்ப்­புக்­க­ளிலும் அனைத்து சம­யங்­க­ளுக்கும் இனக்குழுக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுவதன் ஊடாகவே நாட்டில் வளமிக்க இளம் சந்ததியைக் கட்டியெழுப்ப முடியுமென அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் உறுதியாக நம்புகிறது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.