கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தாடி வைத்துள்ள மருத்துவபீட மாணவருக்கு அனுமதி மறுப்பு

தீர்மானத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை

0 204

கிழக்குப் பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீடத்தில் இறு­தி­யாண்டில் கல்வி கற்கும் மாணவர் சஹ்றி என்­ப­வரை தாடி வைத்­தி­ருப்­பதன் கார­ண­மாக கற்றல் நட­வ­டிக்­கை­களில் அனு­ம­திக்க முடி­யாது என மருத்­துவப் பேரா­சி­ரி­யர்கள் தடுத்­தமை தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் பாடத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி வைத்தியசாலை ஆகி­ய­வற்­றுக்குச் சென்ற குறித்த மாண­வனை அந்தப் பாடத்திற்கு பொறுப்பான இரு பேராசியர்கள்­ தாடியை மழித்துவிட்டு வராவிட்டால் அனுமதிக்க முடியாதது 5 நாட்கள் திருப்பி அனுப்பியதா­க மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்­பட்­டுள்­ளது.

குறிப்பிட்ட பாடத்திற்கு வைத்தியசாலையில் நடைபெறும் கற்கைக­ளுக்­கச் செல்லாவிட்டால் மாணவன் ஸஹ்றி இந்த வருடப்பரீட்சை எழுத முடியாத நிலை ஏற்பட்டு இந்த ஆண்டை இழக்க வேண்டி வரும் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டதைத் தொடர்ந்து குரல்கள் இயக்கத்தின் சட்ட உத­­வி­யு­டன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து வழக்கை விசா­ர­­ணைக்கு எடுத்த நீதி­மன்றம் மாண­வரை கற்றல் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­ம­திப்­ப­­தில்லை என்ற பேரா­சி­ரி­யர்­களின் தீர்­மா­னத்­திற்கு இடைக்காலத் தடை விதித்­துள்­ளது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களான மணிகண்டு திருக்குமார், கவுரியல் எலியாஸ் கருணாகரன் ஆகியோரும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்­களுக்கு முன்­னரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாதியர் கற்கை நெறியில் பயிலும் நுஸைப் எனும் மாணவர் தாடி வைத்திருந்தமைக்காக விரிவுரைகளுக்கு செல்வதில் இருந்து தடுக்கப்பட்டும் பரீட்சை எழுதுவதற்குத் தடுக்கப்பட்டுமிருந்த நிலையில் பல்கலைக் கழகத்தில் இரண்டு விரிவுரையாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்­நி­லையில் மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்குமாறு நீதிமன்றம் பல்கலைக் கழகத்திற்கு ஆணையிட்டிருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.