மேற்கு நாடுகள் ஆயு­தங்­களை விற்­கவே பலஸ்­தீன் போன்ற நாடு­களில் மோதல்­களை ஊக்­கு­விக்­கின்றன

பலஸ்தீன தூதரக கிறிஸ்மஸ் நிகழ்வில் கர்தினால் தெரிவிப்பு

0 413

(எம்.வை.எம்.சியாம்)
உலக நாடுகள் மத்­திய கிழக்கு நாடு­களை எல்லாம் காலத்­துக்கு காலம் மோதலை ஏற்­ப­டுத்­து­வது அவர்­க­ளது ஆயு­தங்­களை விற்­பனை செய்­வ­தற்­காகும். அதனை விற்றால் தான் அவர்­க­ளது பொரு­ளா­தாரம் நிலைத்து நிற்கும். இதே போன்று தான் இலங்­கை­யிலும் மோதலை உரு­வாக்­கி­னார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை ஏற்­ப­டுத்தி இங்கு முஸ்லிம் கிறிஸ்­தவ பிரச்­சனை ஏற்­ப­டுத்த முனைந்­தார்கள். நாம் அதனை உணர்ந்தோம். அவ் விட­யத்தில் மிகவும் அவ­தா­ன­மாக செயல்­பட்டோம் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

கொழும்பில் உள்ள பலஸ்தீன் தூது­வ­ரா­ல­யத்தில் இவ் வரு­டமும் கிறிஸ்மஸ் நிகழ்­வுகள் பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் தார் ஸைத் தலை­மையில் நடை­பெற்­றது. இந் நிகழ்வில் அருட் தந்தை மெல்கம் கர்­தினால் ரஞ்சித் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டார். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெளி­நாட்டுத் தூது­வர்கள், கிறிஸ்­தவ பார­தி­யார்கள் உட்­பட பலரும் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் அனுஷ்­டா­னங்­களில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தொடர்ந்து உரை­யாற்­று­கையில், பலஸ்தீன் யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு நேற்று முன்­தினம் ஐக்­கிய நாடுகள் சபையில் தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்ட போது அதனை வீட்டோ பலத்தை பாவித்து அமெ­ரிக்கா தடுத்­துள்­ளது. அவர்­க­ளுக்கு தேவைப்­ப­டு­வ­தெல்லாம் அவர்கள் உற்­பத்தி செய்யும் ஆயு­தங்­களை விற்­பனை செய்­வ­தே­யாகும். அதனை விற்றால் தான் அவர்­க­ளது பொரு­ளா­தாரம் நிலைத்து நிற்கும்.
இவ்­வாறு தான் உலக நாடுகள் மற்றும் மத்­திய கிழக்கு நாடு­களில் காலத்­துக்கு காலம் மோதலை ஏற்­ப­டுத்தி ஆயுதம் விற்­பனை செய்­கின்­றனர். இதே போன்று தான் இலங்­கை­யிலும் மோதலை உரு­வாக்­கி­னார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை ஏற்­ப­டுத்தி இங்கு முஸ்லிம் கிறிஸ்­தவ மோதலை ஏற்­ப­டுத்த முனைந்­தார்கள். நாம் அதனை உணர்ந்தோம். அவ் விட­யத்தில் மிகவும் அவ­தா­ன­மாக செயல்­பட்டோம்.

பலஸ்தீன் நாட்டில் தொடர்ந்தும் மோதல்கள் நடந்து வரு­கின்­றன. அங்கு வாழ்ந்த கிறிஸ்­தவ மக்­க­ளையும் யூதர்கள் தாக்­கி­னார்கள். அவர்கள் எகிப்து வழி­யாக அக­தி­க­ளாக வெவ்­வேறு நாடு­களில் இடம்­பெ­யர்ந்­தார்கள். நான் 1974 களில் ஜெரு­சலேம் சென்­றி­ருந்தேன். அங்கு வீடு வாசலை இழந்து ஓர் அர­புத்தாய் கதறிக் கொண்­டி­ருந்தார். அவர் அதற்­காக நஷ்ட ஈடு கேட்டு அங்கு கத­றினார். அந்த அரபுத் தாயிடம் அருகில் சென்ற விசா­ரித்தேன். நான் இலங்­கையர். என்னால் அவ­ருக்கு அங்கு உதவ முடி­யாது என்றேன். அதன் பின்னர் அங்­குள்ள அதி­கா­ரிகள் அப் பெண்ணை அங்­குள்ள அகதி முகா­மிற்கு அனுப்பி வைத்­தார்கள். பலஸ்தீன் மக்கள் 1947 களி­லி­ருந்து பாரிய அவ­லங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர் என்றும் கர்­தினால் தனது உரையில் சுட்­டிக்­காட்­டினார். அத்­து­டன் பலஸ்­தீ­னில் அமைதி திரும்­பவும் பிரார்த்­த­னை­களில் ஈடு­பட்­டார்.

Leave A Reply

Your email address will not be published.