“ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்”

முதலில் இப்படிக் கூறிவிட்டு பாம்பு கடித்துவிட்டதாகவும் தூக்கில் தொங்கியதாகவும் நாடகமாடிய மௌலவி

0 886

எம்.எஸ்.எம்.நூர்தீன்

‘‘தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்­தி­ருக்­கி­றான். ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்’’
சாய்ந்­த­ம­ருது சபீலிர் ரசாத் மத்­ர­சாவில் மாண­வர் ஒருவர் மர­ணித்­த பிற்­பாடு அம் மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை­கள்தான் இவை.

பின்னர் தன்னால் அடித்து வளத்­தாட்­டப்­பட்ட மாண­வனை பாம்பு கடித்­து­விட்­ட­தா­க­வும், தூக்கில் தொங்கி தற்­கொலை செய்து கொண்­ட­தாகவும் நாட­க­மா­டி­ய­வரும் இதே மெள­ல­வி­தான்.

இச் சம்­பவம் தற்­கொ­லைதான் என கதை பரப்பி குறித்த மெள­லவி தப்­பிக்க முனைந்த போதிலும் இதனைக் கொலை என நிரூ­பிப்­ப­தற்குத் தேவை­யான ஆதா­ரங்­களும் சாட்­சியங்­­களும் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் பொலிசார் தெரி­விக்­கின்­ற­னர்.

முஸ்லிம் சமூ­கத்தை பேர­திர்ச்­சிக்­குள்­ளாக்­கிய இச் சம்­பவம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட மெள­லவி கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் இச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை அம்­பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் வழி­காட்­டலில் சாய்ந்­த­ம­ரு­­து பொலி­சார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

இந் நிலையில் சம்­பவ தின­த்­த­ன்று என்ன நடந்­தது என அம் மத்­ர­சாவில் உத­வி­யா­ள­ராக கட­மை­யாற்­றிய சாய்ந்­த­ம­ருதைச் சேர்ந்த பெண்மணியைச் சந்­தித்து உரை­யா­டினோம். அவ­ரது வாக்கு­­மூ­லத்தை அவ்­வாறே தரு­கி­றோம்.
‘‘ நான் அன்றைய தினம் இரண்டரை மணிக்கு மத்ரசாவினுள் நுழைந்­த போது மரணித்த மாணவனான முஸ்­அப்பை கண்டேன். சாப்பிட்டுவிட்டு வந்து கொண்­டி­ருந்­­தார். பின்னர் நான்க­ரை மணியளவில் மத்­­ர­சா­வி­லி­ருந்து வீட்­டுக்கு வந்து மீண்டும் 6.30 மணி­ய­ளவில் மத்ரசாவுக்கு சென்றேன். அப்போது இந்த சம்பவம் நடந்­து முடிந்திருக்க வேண்டும்.

நான் மேல் மாடிக்குச் சென்று எனது பேஸ் கவரை கழற்றி விட்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்ற போது மேல் மாடியில் இருக்கின்ற பிள்ளைகள் மஹ்ரிப் தொழுவதை அவதானித்தேன். அந்த நேரம் கீழ் தளத்திலே இருந்த மாணவர்கள் தொழவில்லை. அப்போதுதான் மத்ரசா அதிபரான சானாஸ் மௌலவி ‘ஒரு ஆள அடித்து வளர்த்தாட்டி வச்சிருக்கன்’ என்றார். எனக்கு மட்டுமல்ல அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் அவர் கூறிய இந்த வார்த்தை தெளி­வாக கேட்­ட­து.

அப்போது நான் ‘யார வளத்தாட்டி வச்சிருக்கிறீங்க’ என கேட்டேன். அதற்கு அவர் யாரை அடித்­துள்ளேன் என்று பெயர் குறிப்பிடவில்லை. பின்னர் நான் எதற்கு அடித்தீர்கள் என்று கேட்டேன். ‘நின்று கொண்டு தலையில் தொப்பி இல்லாமல் சூ பேய்ந்தான்’ என்று கூறிவிட்டு அத்­துடன் கதையை மௌலவி நிறுத்தி விட்டார்.

பின்னர் நான் ஓடி வந்து மதரசாவின் சி.சி.ரி.வி கமராவைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரம் ஒரு மாணவன் ஓடி வந்தான். அதன் பின்னர் இன்னும் சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். பிறகு ஏனைய மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். என்ன சுனாமியா வந்­து­விட்­டது? ஏன் மாணவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள் என்று எனக்­குள் நினைத்துக் கொண்­டேன்.

அந்த நேரம் மௌலவியின் சகோதரர் கதவைத் திறந்து கொண்டு வந்தார். பின்னர் மரணித்த மாணவனை பாத்ரூம் பகுதியில் இருந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். என்ன என்று கேட்டேன். முஸ்அப் மயங்கி விழுந்துவிட்டான் என மௌலவி கூறினார்.

எப்படி மயக்கமுற்றார் என நான் மாறிக் கேட்ட போது ‘பாம்பு கடிச்ச’ என்றார் மௌலவி. பின்னர் பாத்ரூமுக்குள் பாம்பா என நான் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் தர­வில்லை.

அப்படியென்றால் மயக்கமுற்ற மாணவனுக்கு முதலுதவி செய்யுங்கள் என்று சொன்னேன். ஆனால் மெளலவி அதை கணக்கெடுக்கவில்லை. அதேநேரம் மாணவர்கள் ஏனைய முஅல்லிம்கள் எல்லோரும் மேல்மாடியிலேயே நின்றார்கள். இது அனைவருக்கும் தெரியும். பின்னர் மாணவனுக்கு சிலர் முதலுதவியை செய்தார்கள். இதனை கீழே இருக்கின்ற சி.சி.ரி.வி. கமராவில் பார்த்துக் கொண்­டி­ருந்­தேன்.

பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்­த மாணவன் ஒருவன் ஓடி வந்து ‘அந்த பொடியன் மௌத்தாகிட்டான்’ என்று சொன்னான். அவ்­வா­று சொன்ன மாண­வன் அந்த மரணித்த மாண­வ­னின் உறவுக்காரராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

அதன் பிறகு மற்­றொரு மாண­வர் ஓடி வந்து சி.சி.ரி.வி கமராவின் சுவிட்சை ஓப் பண்ணினார். பின்னர் கமராவில் எதுவும் தெரியவில்லை.

அதற்கு பிறகு மௌலவி தொலைபேசியில் ஏதோ பேசினார். பின்னர் மூன்று பேர் வந்தார்கள். சி.சி.ரி.வி.கமராவின் வயர்களை கழற்றினார்கள். நான் அத்தோடு அங்கு ஓரி­டத்தில் அமர்ந்­துவிட்டேன். கேர்ட்டின் சீலையை இழுத்து மறைத்துவிட்டார்கள். பின்னர் பிள்­ளை­க­ளி­டம் பாடத்தை கேளுங்கள் என்று கூறிவிட்டு மௌலவி அங்­கி­ருந்து சென்றுவிட்­டார்.

ஏதோ ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் மர­ணித்த மாணவன் யார் என்று விசாரித்தேன். அப்போதுதான் முஸ்அப் என்று சொன்னார்கள். கண் கலங்கி பீதியடைந்தேன். அதிர்ச்­சியில் உறைந்து போனேன். நான் பகல் தானே முஸ்அப்பை கண்டேன் என்று கூறி அழுதேன்’’ என்­றார்.

நடந்த விட­யங்­களை பொலி­சா­ருக்கு வாக்கு மூலம் வழங்­கி­யுள்ள இப் பெண்­மணி தொடர்ந்தும் விசா­ர­ணை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளார்.

சிசி­ரிவி பதி­வு­களை அகற்றக் கோரிய மெள­ல­வி
அதே­போன்­றுதான் சிசி­ரிவி பதி­வு­களை அகற்றி­ச் சென்­ற­வர்­களும் நடந்த விட­யங்­களை பொலி­சா­­ருக்கு வாக்­கு­மூ­ல­மாக வழங்­கி­யுள்­ளனர். இம் மத்­ர­சாவில் சிசி­ரிவிகளை பொருத்திக் கொடுத்த சேவை வழங்­கு­னரை நாம் சந்­தித்­துப் பேசி­னோம்.

‘‘ சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் எனக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்­டு உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து சிசி­ரிவி பதி­வு­களை அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு நான் என்னால் வரமுடியாது என கூறிவிட்டேன். அத்துடன் ஏன் அவற்றை அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் பதி­ல­ளிக்­கவில்லை. பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். பின்னர் இரவு 11 மணியளவில் மத்­ர­சாவில் மாணவர் ஒருவர் மர­ணித்­து­விட்­ட­தாக பதற்ற நிலை ஏற்பட்ட பின்­னர்தான் எனது சகோதரர் என்னைத் தொடர்பு கொண்­டு­ நாங்கள் சிசிரிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் தான் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.

நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு சிசிரிவியில் பதி­வா­கி­யி­ருந்த காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதாகவும் ஹார்ட் டிஸ்­கினை அகற்றிச் செல்­லு­மாறும் மூன்று தினங்­களின் பின்னர் அதனைக் கொண்டு வந்து பொருத்­தித் தரு­மாறு கேட்­ட­தா­கவும் சொன்னார். இதற்­காக 1000 ரூபா பணத்தையும் மெள­லவி வழங்­கி­யுள்ளார். அது­மாத்­தி­ர­மன்றி பதற்ற நிலை தோன்­றிய பிற­கு குறித்­த மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்­பை எடுத்து அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேட்டுக் கொண்டே இருந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். சிசி­ரிவியை அகற்றிய மூவ­ரி­டமும் பொலிசார் வாக்­கு­மூலம் பெற்­றுள்­ளனர்.
அதே­போன்­றுதான் இம் மத்­ர­சாவில் கல்வி கற்று சம்­பவம் நட­ப்­ப­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்­ன­ராக விலகி வீடு சென்ற காத்­தான்­கு­டியைச் சேர்ந்த மாண­வர் ஒரு­வ­ரையும் நாம் சந்­தித்­தோம். மத்ரசாவின் அதி­ப­ரான சானா­ஸ் மெள­லவி எவ்­வ­ளவு கொடூ­ர­மாக நடந்து கொள்வார் என்பதை அவ­ரது அனு­ப­வத்தில் இருந்து அறிந்து கொள்ள முடி­கி­றது.

‘‘நானும் ஜனா­ஸா­வா­கத்தான்
வந்­தி­ருப்­­பேன்’’
‘‘மதரசா அதிபர் மௌலவி அவர்கள் மாணவர்களை தாக்குவார். வயர், திரைச்சீலையை தொங்க விடும் பொல்லு, தடி போன்றவைகளி னாலேயே தாக்குவார். அங்குள்ள சிரேஷ்ட மாணவர்கள் எங்களைப் போன்ற சின்ன வகுப்பு மாணவர்களை வேண்­டு­மென்றே பிழையாக சொல்லிக் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அவர் எங்களைத் தாக்குவார். என்னையும் பல தடவைகள் தாக்கியுள்ளார்.

அவர் தாக்கும் போது சில மாணவர்கள் சப்தமிட்டு அழுவார்கள். இந்த நிலையில் தொடர்ந்து இங்கு ஒதுவதென்பது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதனால் தான் ஒரு­நாள் நான் கல்வி கற்றுக் கொண்­டி­ருந்­த சாய்ந்தமருதிலுள்ள பாடசாலைக்கு வந்தபோது தந்தையிட­ம் விட­யத்தைக் கூறி நான் ஊருக்கு வந்து விட்டேன். நான் அங்­கு 11 மாதங்கள் ஓதி­னேன். இக் காலப்­ப­கு­தியில் அவர் மாணவர்களை அடிமையாகவே நடாத்தினார். விலகி வராதிருந்தால் நானும் ஜனாஸாவாகத்தான் வந்திருப்பேன்’’ என்­றார்.
இந்த மாணவனின் தந்தையிடமும் உரை­யா­டி­னோம். ‘‘மத்ரசாவின் அதிபரான மௌலவியின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு நாள் மத்­ர­சா­வுக்குச் சென்றிருந்த போது அதிபர் வெளியூரைச் சேர்ந்த ஒரு மாணவனைத் தாக்கி மேல் மாடியிலிருந்து அழைத்து வருவதைக் கண்டேன். பின்னர் அந்த மாணவனைத் தாக்க வேண்டாம் எனக் கூறினேன். இதன் பிறகே எனது மக­னையும் விலக்கிக் கொண்டு வந்தேன். விலக்கி வீட்டுக்கு கூட்டி வந்த பிறகு ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்த அந்த மௌலவி, மகனை நீங்கள் விலக்கினா­லும் பரவாயில்லை. நாம் தொடர்ந்தும் தொடர்பில் இருப்போம் என்று கூறி சலாம் கூறிச் சென்று விட்டார்’’ எனவும் தெரிவித்தார்.

மர­ணித்த மாண­வனின் குடும்­பத்­தி­­னர்
மரணித்த மாணவனின் பெற்றோரும் குடும்பத்தி­ன­ரும் கவலையோடும் கண்ணீரோடும் தனது மகனுக்கு நடந்த அநியாயத்தை நினைத்து கண் கலங்குகின்றனர். தனது மகனுக்கு நியாயம் வேண்டும் என்று கூறும் பெற்றோர் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்லமாட்டார் என்­பதில் உறு­தி­யா­க­வுள்­ள­னர்.

‘‘ அவர் அமைதியானவர். எங்களது குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். அனைவரும் ஆண் பிள்ளைகளே. எமது மூத்த மக­னான முஸ்அப் புனித அல்குர் ஆனை மனனம் செய்து ஹாபிழாக வேண்டும் என்று ஆசைப்பட்டோம். மகனின் விருப்பப்படியே நாங்கள் அந்த மதரசாவுக்கு கொண்டு போய் சேர்த்தோம். மகனின் நண்பன் அதில் ஓதுகின்றார் என்பதற்காகவும் மகனின் நண்பரின் தந்தையும் எங்களோடு பழக்கம் என்பதாலுமே அந்த மதரசாவுக்கு மகனையும் கொண்டு போய் சேர்த்தோம்.
இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசி அழைப்பு வந்தது. மதரசா அதிபரான சானாஸ் மௌலவி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மதரசாவுக்கு வந்து விட்டுச் செல்லுங்கள் என்றார்.
உடனேயே போன போது அங்கு மக்கள் கூடி­யி­ருந்­தனர். ஏதோ நட­க்கக் கூடா­தது நடந்­து­விட்­ட­தாக உணர்ந்தோம். பிள்ளை வைத்தியசாலையில் இருப்பதாக அங்கு நின்­ற­வர்கள் கூறி­னார்­கள். அங்கு சென்ற போதுதான் மகன் மரணித்து விட்டதாக அறிந்தோம். எமது பிள்ளை தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும். எனது கணவருக்கு அண்மைக் காலமாக சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்னும் வேதனையை அதிகரிக்கச் செய்துள்ளது. மகன் தந்தைக்கும் குடும்பத்துக்கும் உதவியாக இருந்தவர்.

மகனை மதரசாவில் சேர்த்ததன் பின்னர் மெளலவி அடிக்கிறார் என்று சொல்லி இருந்தால் நாங்கள் மகனை விலக்கி வீட்டுக்கு அழைத்து வந்திருப்போம். மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிக்காக காத்திருக்கிறோம். இறைவனின் நீதியும் கிடைக்கும் என பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த மாணவர் சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மதரசாவில் இணை­வ­தற்கு முன்னர் காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்திலும் காத்தான்குடி பிஸ்மி இடை நிலைப் பாடசாலையிலும் கல்வி கற்று வந்துள்ளார்.

இம் மாணவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிஸ்மி இடை நிலைப் பாடசாலைக்கு வருவதை நிறுத்தியுள்ளார். இது குறித்து பாடசாலை நிருவாகம் பெற்றோரை தொடர்பு கொண்ட போது மகனை மதரசாவில் சேர்க்கவுள்ளதாக பெற்றோர் பதி­ல­ளித்­த­தாக காத்தான்குடி பிஸ்மி இடை நிலைப் பாடசாலையின் தவி­சாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தெளஸ் நளீமி தெரிவித்தார்.

‘‘இந்த மாணவர் அமைதியான சுபாவமுடையவர். வகுப்பில் சக மாணவர்களுடன் உற்சாகமாக காணப்பட்ட ஒரு மாணவர். எனினும் இவரை மெல்லக் கற்கும் மாணவர் என நாம் அடை­யாளம் கண்­டி­ருந்தோம். 2022 ஜன­வரி முதல் 2023 ஒக்­டோபர் வரை இவர் எம்­மிடம் கல்வி கற்றார். இவரது மரணத்தினால் எமது பாட­சா­லை நிர்­வா­கமும் மாண­வர்­களும் மிகுந்த கவ­லையில் ஆழ்ந்­துள்­ளனர்’’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் இந்த மரணம் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

குறித்த மதரசாவின் மெளலவி கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் இதுவரை 40 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். குறித்த மதரசாவின் சி.சி.ரி.வி.கமரா பதி­வு­களைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் அதனை பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்­தி­ர­­ளா­னோர் கலந்து கொண்­ட­னர்.
அம்பாறை வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை பிரேத பரிசோதனை நடாத்­தப்­பட்­டு ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாஸா தொழு­கையில் பங்­கு­பற்­றிய மக்­கள்….

இதையடுத்து ஜனாஸா சிறுவனின் ஊரான காத்தான்குடிக்கு கொண்டு வரப்பட்டு பெருந்திரளான மக்களின் பிரார்த்தனைகளுடன் காத்­தான்­குடி மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு கடந்த வியாழக்கிழமை (07) மாலை அதே பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா தொழு­கை­யை மாண­வனின் தந்தை நடாத்­தி­னார்.

காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் அஷ்ஷெய்க் ஏ.எல் சபீல் நளீமி மற்றும் சாய்ந்தமருது மக்கள் சார்பில் சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.சலீம் ஆகி­யோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

சாய்ந்தமருது முகையதீன் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹிபத்துல் கரீம், சாய்ந்தமருது ஜனாஸா மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள், உலமாக்கள் பலரும் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
இதேவேளை காத்தான்குடி மாணவனின் மரணத்தையடுத்நு சாய்ந்தமருது ஜம் இய்யத்துல் உலமா, சார்ந்தமருது ஜனாஸா நலன்புரிச் சங்கம் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் மற்­றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்றும் கடந்த வியாழக்கிழமை மாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது சாய்ந்தமருதில் காத்தான்குடி மாணவனுக்கு நடந்த அநீதியை தாம் கண்டிப்பதாகவும் கவலையை தெரிவிப்பதாகவும் சாய்ந்தமருது பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாணவனின் குடும்­பத்­திற்கு நீதியைப் பெற்­றுக் கொடுப்­ப­தற்­கான அத்தனை உதவிகளையும் சாய்ந்தமருது சார்பில் செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

உரியமுறையில் மெள­லவிப் பட்டம்
பெறாத அதி­பர்
இந்த மத்­ர­சாவின் அதி­ப­ராக செயற்­பட்­ட­­வரும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ரு­மான சானாஸ் மெள­லவி என்­பவர் முறை­யாக மத்­ரசா ஒன்றில் ஓதி சான்­றிதழ் பெற்­றவர் அல்ல என சாய்ந்­த­ம­ருது பொலிஸ் நிலை­ய­த்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் குறித்த மெள­லவி வைத்­தி­ருந்­த­தாக கூறப்­படும் போலிச் சான்­றி­தழில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த மத்­ர­சாவின் நிர்­வா­கிகள் சாய்ந்­த­ம­ருது பொலிஸ் நிலை­யத்தில் நேற்று முன்­தினம் வாக்­கு­மூலம் வழங்­கி­யுள்­ளனர்.
சம்­பந்­தப்­பட்ட மெளலவி மீது மாண­வர்­களைத் தாக்­கி­யமை தொடர்பில் பல குற்­றச்­சாட்­டுக்கள் இதற்­கு முன்­னரும் சுமத்­தப்­பட்­டுள்­ளன. ஒரு சம்­ப­வத்தில் இவர் கைது செய்யப்­பட்­டி­ருந்த நிலை­யில், பாதிக்­கப்­பட்ட மாண­வனின் பெற்றோர் விட­யத்­தைப் பெரி­து­ப­டுத்தக் கூடாது என்­பதால் பொலிஸ் முறைப்­பாட்டை வாபஸ் வாங்­கி­யுள்­ளனர்.

இம் மத்­ரசா அதிபர் கொடூ­ர­மா­னவர் என அப் பகுதி மக்கள் நன்கு அறிந்­தி­ருந்­தனர். இத­னால்தான் ‘‘ நீ ஒழுங்­காக வீட்டில் ஓதா­விட்டால் சானாஸ் மெள­ல­வியின் மத்­ர­சா­வில் சேர்த்து விடு­வோம்’’ என தமது பிள்­ளை­க­ளுக்குப் பயம் காட்­டு­வ­தாக அப் பிர­தே­சத்தில் வசிக்கும் குடும்­பஸ்தர் ஒருவர் தெரி­வித்­தார்.
மத்­ரசா ஒன்றை நடாத்­து­வ­தற்கு எந்த வகை­யி­லும் பொருத்­த­மற்ற மூன்று மாடிக் கட்­டி­டத்தில் முழு நேர­மா­கவும் பகுதி நேர­மா­கவும் பிள்­ளை­களைச் சேர்த்து மத்­ரசா ஒன்றை நடாத்­து­வ­தற்­கான அனு­ம­தியை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­ல்கள் திணைக்­களம் எந்­த­வ­கையில் வழங்­கி­யது எனும் கேள்­வியை பலரும் எழுப்­பு­கின்­றனர். MRCA/QA/AM/303 எனும் பதிவு இலக்­கத்தில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­ல்கள் திணைக்­களத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக மத்­ர­சாவின் பெயர்ப்­ப­ல­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து மத்­ரசா தற்­போது மூடப்­பட்டு மாண­வர்கள் அனை­வரும் வீடு­க­ளுக்குச் சென்றுள்ள நிலையில் இதன் சட்­ட­பூர்­வ­மான தன்மை குறி­த்து திணைக்­களம் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.