அக்­கு­றணை வெள்­ளப்­பெ­ருக்கை தடுக்க நிதி ஒதுக்­கு­க

0 289

(ஏ.ஆர்.ஏ.ப­ரீல்)
­அக்­கு­ற­ணையில் அடுத்­த­டுத்து ஏற்­பட்­டுள்ள வெள்­ளப்­பெ­ருக்­கினால் பெரும் பெரு­ளா­தார பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. எனவே, இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக வரவு செலவு திட்­டத்தின் ஊடாக அவ­ச­ர­மாக நிதி ஒதுக்­கீடு செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் உப­த­லை­வ­ரு­மான எம்.எச்.அப்துல் ஹலீம் பாரா­ளு­மன்­றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அத்­தோடு, அக்­கு­றணை வெள்­ளப்­பெ­ருக்கு தொடர்­பாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிய­மிக்­கப்­பட்ட செய­லணி பரிந்­துரை செய்த சிபா­ரி­சு­களை அமுல்­ப­டுத்­து­வது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமையும் என்றும் இதன்­போது அவர் வலி­யு­றுத்­தினார்.

கடந்த திங்களன்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவ­சாயம், பெருந்­தோட்­டத்­துறை தொடர்­பாக வர­வு­செ­லவு திட்ட குழு­நிலை விவா­தத்­தின்­போது கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஹலீம் எம்.பி. இதனை சுட்­டிக்­காட்­டினார்.
குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டில் கடந்த மூன்று மாதங்­க­ளாக பெய்து வரும் தொடர் மழை கார­ண­மாக அக்­கு­றணை நகர் வெள்­ளப்­பெ­ருக்­குக்கு முகம்­கொ­டுத்­துள்­ளது. அடுத்­த­டுத்து இரு தட­வைகள் இவ்­வாறு அக்­கு­றணை நகர் அனர்த்­தத்­திற்குள் உள்­ளா­னதால் பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளது. மண்சரிவு காரணமாக ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

ஏ9 பாதையில் அமைந்­துள்ள நக­ரமே அக்­கு­ற­ணை­யாகும். அக்­கு­ற­ணையில் அடிக்­கடி ஏற்­பட்­டு­வரும் வெள்­ளப்­பெ­ருக்கு தொடர்பில் நான் பல­ த­ட­வைகள் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தி­ருக்­கிறேன்.

2001 ஆம் ஆண்டு அக்­கு­றணை நகர் முதன் முத­லாக வெள்ளப் பெருக்­குக்கு முகம்­கொ­டுத்­தது. அதற்கு முன்­ன­தாக இவ்­வா­றா­ன­தொரு வெள்ள அனர்த்­தத்தை அக்­கு­றணை நகர் எதிர் கொண்­ட­தில்லை. அக்­கு­றணை நகரில் ஏற்­படும் இந்த வெள்ள அனர்த்தம் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்­கத்­தின்­போது செய­ல­ணி­யொன்றை அமைத்­தி­ருந்தோம். இத­னூ­டாக இந்த அனர்த்­தத்­திற்­கான கார­ணங்கள் தொடர்பில் ஆராய்ந்­தி­ருந்தோம்.இத­னூ­­டாக குறித்த செய­லணி பிரச்­சி­னைகள் குறித்த அறிக்­கையை தயா­ரித்­தி­ருந்­தது. அத்­தோடு பிரச்­சி­னைக்கு தீர்­வாக சில யோச­னை­க­ளையும் சிபா­ரிசு செய்­தி­ருந்­தது. குறித்த யோச­னைகள் பின்னர் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் அடுத்­த­டுத்து எதிர்­நோக்கும் அனர்த்­தங்­களை தவிர்த்­தி­ருக்­கலாம். இம்­முறை ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கினால் அக்­கு­றணை நகர் பெரும் நட்­டத்தை எதிர்­கொண்­டி­ருக்­கி­றது.

அக்­கு­றணை நகர் கண்டி மாவட்­டத்­திலும் ஏ9 வீதி­யிலும் அமைந்­தி­ருக்­கின்ற மிக முக்­கி­ய­மான பொரு­ளா­தார ஸ்­த­லமாக காணப்­ப­டு­கின்­றது. இங்கு பாரி­ய­ள­வி­லாள வர்த்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. வெள்­ளப்­பெ­ருக்­கினால் பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பொரு­ளா­தார ரீதி­யி­லான பாதிப்­பு­களும் வாழ்­வா­தார பிரச்­சி­னை­களும் ஏற்­ப­டு­வ­த­னா­லேயே இதனை நான் இங்கு சுட்­டிக்­காட்­டு­கிறேன்.

வரவு செலவு திட்­டத்தின் ஊடாக காலி நகர் வெள்­ளப்­பெ­ருக்கு அனர்த்தத்­திற்கு 250 மில்­லியன் ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்து. அதே­போன்று பெரும் பொரு­ளா­தார பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும் அக்­குகுற­ணை நகரின் வெள்­ளப்­பெ­ருக்கை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு பெரும் நிதியை ஒதுக்க வேண்டும்.
அத்­தோடு நல்­லாட்சி அர­சாங்­கத்தின் போது நிய­மிக்­கப்­பட்ட அக்­கு­றணை வெள்­ளப்­பெ­ருக்கு தொடர்­பான செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் தொடர்பில் இந்த அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதனை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வாக அமையும்.

கண்டி மாவட்டம் வாசனை திரவிய ஏற்றுமதி பயிர்ச்செய்கைக்கு பெயர்போன இடமாகும். குறிப்பாக, சாதிக்காய், கராம்பு, மிளகு, வெற்றிலை, கருவாப்பட்டை போன்ற பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுகின்றது. அக்குறணை பகுதியும் இந்த வியாபாரத்தில் மிகப் பிரசித்திப்பெற்ற இடமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.