மாவத்தகம மோதலில் ஒருவர் பலி; 4 பேர் காயம்

0 208

(குரு­நாகல் நிருபர்)
மாவத்­த­கம, பிலஸ்ஸ என்ற இடத்தில் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு இரு குழுக்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட கைக­லப்பில் நால்வர் காய­ம­டைந்­துள்­ள­துடன் ஒருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­காகி மர­ண­மா­கி­யுள்ளார்.

22 வய­து­டைய இளைஞர் ஒரு­வரே குறித்த மோத­லின்­போது வாள்­வெட்­டுக்கு இலக்­காகி மர­ண­மா­கி­யுள்ளார்.

இச் சம்­ப­வத்­துடள் தொடர்­பு­டைய சிலர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மற்றும் சிலர் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கிரிக்கெட் போட்­டி­யொன்றை மையப்­ப­டுத்தி இரு குழுக்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட கைக­லப்­பை­ய­டுத்து பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் அமை­தி­யின்மை ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அமை­தியை ஏற்­ப­டுத்­தவும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் நோக்­கத்­துடன் மாவத்­த­கம பொலிஸார் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டனர். அத்­துடன், மேல­திக பாது­காப்பு கட­மை­க­ளுக்­காக அரு­கி­லுள்ள பொலிஸ்­நி­லை­யங்­க­ளி­லி­ருந்து நூற்­றுக்கும் மேற்­பட்ட பொலிசார் வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சூத்­தி­ர­தாரி என சந்­தே­கி­க்கப்­ப­டு­பவர் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் அவரை கைது செய்­வ­தற்­கான முனைப்பில் பொலிஸார் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வரின் உற­வி­னர்­களும் நண்­பர்­களும் கொலை செய்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபரின் வீட்­டுக்கு கற்களை எறிந்து சேதப்­ப­டுத்­தி­யுள்­ளதா க தெரி­ய­வ­ரு­கி­றது.

மோதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு குழுக்­களும் இரு­வேறு இனம், மதத்­த­வர்கள் என்­ப­தனால் பிர­தே­சத்தில் இனக்­க­ல­வரம் ஏற்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக மதத் தலை­வர்கள் ஊர் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் நேற்­றைய தினம் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது.

அத்­தோடு, நீண்ட கால­மாக இரு இன குழுக்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வந்த வாய் தர்க்­கமே மோதல் நிலை­மைக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வசந்த கித்சிறியின் மேற்பார்வையின் கீழ் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.